நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல்
நாள் : 05.02.2020
நேரம் : மாலை 5 மணி
இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை.
உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் பிஸிக்ஸ் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம் 11 பேர்களுக்கு உபுண்டு 18.04 நீண்ட கால வெளியீடு அவர்களின் மடிக்கணிணியில் விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்துவாறு பதியப்பட்டது. மேலும் லினக்ஸ் பற்றிய அடிப்படைகள் மற்றும் லிபேரா ஒபன் ஆபிஸ் அடிப்படை பயிற்சிகள் திரு.ஷேக் அலாவுதீன் அவா்களால் அளிக்கப்பட்டது.
கூடுதலாக கணியம்,freetamilebooks-ல் லினக்ஸ் புத்தகங்கள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை திரு.ஜாகீர் உசேன் அவர்கள் ஒருங்கிணைக்க திரு.முகமது லாபீர் மற்றும் தமிழ் இ சர்வீஸ் மூலம் மேலதிக உதவிகளும் எதிர்வரும் பிப்ரவரியில் இன்னும் சிறப்பாக லினக்ஸ் பயனர் குழுவை ஒருங்கிணைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்றவர்களுக்கும் ஒருங்கிணைத்தவர்களுக்கும் மற்றும் கணியம் குழுவினருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
—
அலாவுதீன் – alauvdheen@gmail.com