யூ.எஸ்.பி 3.0 கருவிகள் மிகவும் பொதுவானதாக ஆகிவிட்டன, ஆனால் யூ.எஸ்.பி 2.0 கருவிகளுடன் ஒப்பிடும் போது அவை என்ன மேம்பட்ட பலன்களை அளிக்கின்றன?
மொழியாக்கம்: ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி
யூ.எஸ்.பி 3.0 கருவிகளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். அதிலும் குறிப்பாக, ஃபிளாஷ் மெமரி ஸ்டுக்குகள் (Flash Memory Stick) . பல வகையான லினக்ஸ் பகிர்வுகளை முயலும் போது பலமுறை யூ.எஸ்.பி கருவிகள் மூலம் கோப்புகளைப் படிக்கவும், சேமிக்கவும் நேரிடும்.
தற்போது யூ.எஸ்.பி 3.0 கருவிகள் மிகவும் பிரபலம் ஆகி விட்டன. நானும் யூ.எஸ்.பி 3.0 போர்ட்களை கொண்ட இரண்டு கையேட்டு கணினிகளைப் (notebook computers) பயன்படுத்துகிறேன். யூ.எஸ்.பி 3.0 மற்றும் யூ.எஸ்.பி 2.0 ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேகத்தில் கூடுமானவரை எந்த மாற்றமும் இருப்பதில்லை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிகிறேன். இதை மேலும் ஆராய விரும்பி, அந்த ஆராய்ச்சிக்கான சாத்தியக் கூறுகளைச் சிந்திக்கலானேன்.
மேற்கூறிய ஆராய்ச்சிக்காக என் ஏசர் ஆஸ்பையர் ஒண் 725 (Acer Aspire One 725) மற்றும் என் ஹெச்.பி. பெவிலியன் dm1-4310ez (HP Pavilion DM1 4310 EZ) ஆகியவற்றைப் பயன் படுத்தியுள்ளேன். இவை இரண்டிலும் யூ.எஸ்பி 3.0 போர்ட் ஒன்றும் யூ.எஸ்.பி 2.0 போர்ட்கள் ஆகிய இரண்டும் நிறுவப்பட்டுள்ளன. இதனால், இரண்டு வகையான் யூ.எஸ்.பி போர்ட்களையும் என்னால் சோதித்து பார்க்க இயலும்.
இரு கணினிகளிலும் மிக சமீபத்திய சீரமைப்புகளுடன் கூடிய ஓபன்சூசே 12.3 (OpenSuse 12.3 with latest patchs) நிறுவப்பட்டிருந்தது. நான் நான்குவிதமான யூ.எஸ்.பி 3.0 ஃபிளாஷ் மெமரி ஸ்டிக்குகளை பயன் படுத்தினேன். அவை: ஃபிலிப்ஸ் 8ஜி.பி. யூ.எஸ்.பி 3.0 ஃபிளாஷ் கருவி (Philips 8 GB USB3.0 Flash) , டிஸ்க்2கோ 8ஜி.பி யூ.எஸ்.பி 3.0 ஃபிளாஷ் கருவி (Disc2go 8 GB USB3.0 Flash), வெர்படிம் 16ஜி.பி. யூ.எஸ்.பி 3.0 ஃபிளாஷ் கருவி (Vertim 16 GB USB3.0 Flash) மற்றும் சான்டிஸ்க் எக்ஸ்டிரீம் 16ஜி.பி. யூ.எஸ்.பி 3.0 ஃபிளாஷ் கருவி (Sandisk 16 GB USB3.0 Flash) ஆகியன ஆகும். இவற்றில் சான்டிஸ்க் மட்டுமே அதன் வேகத்திறன் குறித்து அதன் பொதியில் விளம்பரம் செய்திருந்தது. மற்றவை வெறுமனே ‘யூ.எஸ்.பி 3.0 அதி வேகமானது’ என்று குறிப்பிட்டிருந்தன.
ஆராய்ச்சியின் போது, வாசித்தல் மற்றும் சேமித்தல் கேஷ் மெமரியில் (cache memory) இருந்து வராதவாறு பார்த்து கொள்வது அவசியம். ஒரு சமயத்தில் முதல் வாசிப்புக்கு 50 வினாடிகளும் இரண்டாம் வாசிப்புக்கு 10 வினாடிகளும் ஆகும்போது இது புலப்பட்டது. இச்சிக்கலைத் தீர்க்க நான் கண்ட வழி , ஒரு வாசிப்பு அல்லது சேமிப்புக்கு பிறகு யூ.எஸ்.பி. கருவியை அகற்றி விட்டு மீண்டும் இணைத்துப் பயன்படுத்துவதே. இது லினக்ஸில் உள்ள கேஷை (cache) அகற்றிவிடும்.
அளவிடும் படியான நிலையான ஆய்வு முடிவுகள் கிடைக்க வேண்டுமானால், ஓரளவு பெரிய அளவுள்ள கோப்ப பயன்படுத்தப்படவேண்டும். இதற்கு சில நாட்களுக்கு முன்பு நான் பதிவிறக்கம் செய்த சிலாக்வேர் ஐ.எஸ்.ஒ (Slackware iso)- வை பயன்படுத்தலாம். இது கிட்டத்தட்ட 2.4ஜி.பி. அளவுடைய கோப்பு ஆகும். அந்த கோப்பை கணினிக்கும் ஃபிளாஷ் டிரைவுக்கும் இடையே மாற்றி மாற்றி சேமித்து ஆய்வை மேற்கொண்டேன்.
இறுதியாக, கணினி யூ.எஸ்.பி கருவிகளை எவ்வாறு காண்கிறது என்பதை அறிய வேண்டும்.
lsusb -v
மேற்கண்ட கட்டளை, யூ.எஸ்.பி போர்ட்கள் (USB Ports) மற்றும் இணைக்கப் பட்டுள்ள அனைத்து யூ.எஸ்.பி. கருவிகள் குறித்த தகவல்களையும் அளிக்கும்.
அந்த தகவல்களில் நாம் இணைத்துள்ள யூ.எஸ்.பி கருவியை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு யூ.எஸ்.பி.-குமான குறிப்பு தலையங்கத்துடன் (header) துவங்கும். அதனைத் தொடர்ந்து வரும் குறிப்புகளைக் கவனமாக படிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், தலையங்கத்தில் வரும் பெயர்கள் பெரும்பாலும் கருவியில் குறிப்பிடப்படும் பெயர்களுடன் ஒத்துப் போவது இல்லை.
யூ.எஸ்.பி. கருவியின் தகவல்களில் “bsdUSB” என்பதன் மதிப்பே (value) அந்த கருவியின் பதிப்பு (version) ஆகும். அவை 2.00, 2.10, 3.00 போன்றவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் (மிக பழைய கருவியை நீங்கள் பயன்படுத்தினால், பதிப்பு 1.00 ஆக இருக்கலாம்). 2.00 மற்றும் 3.00 என்ன என்பது நமக்கு தெரியும். 2.10 என்ற பதிப்பு, 3.00 யூ.எஸ்.பி கருவியை 2.00 போர்டில் பயன்படுத்தினால் ‘bsdUSB’ -ல் காண்பிக்கப்படும் என்பது என் யூகம்.
ஆய்வின் முதல் படியாக, சுவிஸ் ஆர்மி ஃபிளாஸ் (Swiss Army Floss) டிரைவிலிருந்து ஒரு கோப்பை கணினியில் சேமித்தேன். இந்த ஃபிளாஸ் டிரைவ் யூ.எஸ்.பி 2.0 என்பதால் இதன் செயல்முறையை யூ.எஸ்.பி 3.0 டிரைவுடன் எளிதாக ஒப்பிடலாம். யூ.எஸ்.பி. டிரைவை வெளியே எடுத்தும் இணைத்தும் இரண்டு முறை கோப்பினைச் சேமித்தேன். சேமிப்பதற்குத் தேவைப்படும் நேரம் முதல் முறை 1.48 வினாடிகளாகவும் இரண்டாம் முறை 1.46 வினாடிகளாகவும் இருந்தது.
அடுத்ததாக அந்த யூ.எஸ்.பி. டிரைவை நீக்கிவிட்டு, அனத்து யூ.எஸ்.பி 3.0 டிரைவ்களையும் மேற்கூறிய அதே முறையில் சோதித்தேன். முதலாவதாக டிரைவை யூ.எஸ்.பி. 3.0 போர்டில் செலுத்தி, அது யூ.எஸ்.பி 3.0 ஆகத் தான் கணினியில் இயங்குகிறதா என உறுதி செய்து கொண்டேன் (lsusb -v). அடுத்து, 2.4GB அளவுள்ள கோப்பை கணினியிலிருந்து ஃபிளாஸ் டிரைவில் சேமித்தேன்.
பின்னர், அந்த யூ.எஸ்.பி. டிரைவிலிருந்து கோப்பை நீக்கிவிட்டு டிரைவை அண்மவுண்ட் (unmount), அண்பிளக்(unplug), ரீபிளக்(replug) மற்றும் ரீமவுண்ட்(remount) ஆகியவற்றை வரிசையாக செய்தேன். பின் மீண்டும் கோப்பை சேமித்தேன். மீண்டும் அதே நடவடிக்கைகளை யூ.எஸ்.பி. 2.0 போர்டில் தொடர்ந்தேன். யூ.எஸ்.பி 3.0 டிரைவை 2.0 போர்டில் இணைத்துள்ளதால், இம்முறை யூ.எஸ்.பி டிரைவ் 2.10 ஆக இணந்துருந்தது. சேமிப்பதற்கு ஆகும் நேரத்தையும் குறித்தேன்.
ஏசர் ஆஸ்பயர் ஒண் 725 (Acer Aspire One 725) -ல் எனக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள் பின்வருமாறு.
சுவாரசியமாக, பல்வேறு யூ.எஸ்.பி 3.0 டிரைவ்களுக்குள் செயல்திறன் வேறுபட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மீண்டும் இவை அனைத்து ஆய்வுகளையும் ஹெச்.பி. பெவிலியன் (HP Pavilion) dm1-4310ez செய்தேன். அதன் முடிவுகள் பின்வருமாறு.
நான் ஒன்றை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். நான் பல்வேறு ஃபிளாஸ் டிரைவ்களுக்குள் வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கும் என்று எண்ணவில்லை.
இறுதியாக, நான் அடிக்கடி யூ.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்துவதால் (பல்வேறு லினக்சு பகிர்வுகளை துவக்க), அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என சோதிக்க விரும்பினேன். முடிவுகள் தெளிவாக கிடப்பதால், ஒவ்வொரு யூ.எஸ்.பி டிரைவுகளையும் தனித்தனியே சோதனை செய்ய நான் தயங்கவில்லை.
இதற்கு நான் மிக வேகமானதான சான்டிஸ்கை மட்டும் யூ.எஸ்.பி 3.0 மற்றும் யூ.எஸ்.பி 2.0-வில் பயன்படுத்தினேன். ஆச்சரியப்படும் விதமாக HP dm1-4310 கணினியில் ஃபெடோரா 20 (ஜிநோம்) -ஐ துவக்க இரண்டு யூ.எஸ்.பி டிரைவிலும் சமமாக 45 வினாடிகளே ஆனது.
கிடைத்த முடிவுகள் சரிதான் என்பதை உறுதி செய்ய, இதே முயற்சியை இரண்டு முறை செய்தேன். ஏன் இரண்டு யூ.எஸ்.பி-களிலும் சமமான நேரம் ஆகிறது என்பது எனக்கு புரியவில்லை. முதல் முறை இயங்கு தளத்தை (OS) துவக்கும்போது , யூ.எஸ்.பி. டிரைவ்கள் மற்றும் சில கருவிகளுக்கான குறைந்தபட்ச மென்பொருள்களை (driver) நிறுவுவப்படும். இதன் காரணமாக தான் 2.0 மற்றும் 3.0 யூ.எஸ்.பி போர்ட்களில் வேறுபாடு இருப்பதில்லை என எண்ணுகிறேன்.
மேலும் ஒப்பிட்டு பார்த்தலுக்காக, இதே கணினியில் (SSD hard drive பொருத்தப்பட்டுள்ளது) சாதாரன துவக்கத்தில், ஃபெடோரா 20 (ஜிநோம்)-ஐ துவக்க 15 வினாடிகள் மட்டுமே ஆனது என்பதை கண்டறிந்தேன்.
கதையின் பொதுவான கருத்து என்னவென்றால், யூ.எஸ்.பி 3.0 கருவியை வாங்கும் போது என்ன வாங்குகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அது எளிது அன்று. ஏனெனில், கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் செயல்திறன் கொண்ட யூ.எஸ்.பி கருவு இடைக்கும் என உறுதியாக கூற முடியாது. யூ.எஸ்.பி கருவி வாங்க ஆகும் செலவு தான் உங்கள் முதல் கவனம் என்றால், யூ.எஸ்.பி 2.0-விற்கும் குறைவான திறன் கொண்ட யூ.எஸ்.பி 3.0 கருவி உங்களுக்கு கிடைத்தால் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், செலவு தான் உங்கள் ஒரே கவனம் என்றால், யூ.எஸ்.பி 2.0 கருவி வாங்கி நம்பத்தகுந்த செயல்திறனை பெறலாம். சிறிது செலவு அதிகம் ஆனாலும் நல்ல செயல் திறன் கொண்ட யூ.எஸ்.பி கருவி வேண்டும் என்றால் கூர்ந்து கவனித்த பின் வாங்குவதே நல்லது.
மூலக்கட்டுரை: USB 2.0 and 3.0 in the real world
எழுத்து: ஜே.ஏ. வாட்சன்
மொழியாக்கம்: ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி