சென்னை மாநகரம் பல நிகழ்வுகளின் துறைமுகமாகத் திகழ்கிறது.
சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றாடம் பல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அவற்றுள் தொடர்நிரல் நிகழ்வுகள் (Hackathon), மென்பொருள் பயனர் குழுக்களின் சந்திப்புகள் (Software Users Group meetings), பயன்பாடு வெளியீடு (Product launch), துவக்க விழாக்கள் போன்ற கணினியாளர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், பதிவர் சந்திப்பு, கீச்சர் சந்திப்பு (Tweetup), புகைப்பட பயிற்சி மற்றும் பயிலரங்குகளும் அடங்கும்.
இந்நிகழ்ச்சிகள் பற்றி வலைத்தளங்கள், பதிவுகள், முகநூல் நிகழ்வுகள் (Facebook Events), கூகிள் நிகழ்வுகள் (G+ Events), மற்றும் meetup.com, eventbrite.com போன்ற நிகழ்வுத் தளங்கள் ஆகியவை மூலம் அறிவிக்கப்படுகிறன. ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கே அறிவதற்கு இதுவரை எந்த இடமும் இல்லை.
சென்னையில் நடக்கும் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஓர் இடத்தில் வழங்குவதற்கான முயற்சியின் ஒரு படி தான் கூகிள் நாள்காட்டியில் வந்துள்ள Chennai Events என்னும் நிகழ்வுத் தொகுப்பு.
தன்னார்வலர்களின் குழு இந்த தொகுப்பினைப் புதுப்பிக்கும். கூகிள் நாள்காட்டியில் இந்த நிகழ்வுத் தொகுப்பு உள்ளதால், கீழ்காணும் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும்:
எப்படி பெறுவது?
முகவரி : chennaieventscalendar.blogspot.in/
இணைப்புப் பொது முகவரி (Public iCal) (பிற நாள்காட்டிகளுடன் இணைப்பதற்கு) : www.google.com/calendar/ical/6ppkf92sp3one0i7al7inkahm8%40group.calendar.google.com/public/basic.ics
உங்களது கூகிள் நாள்காட்டியில் இணைக்க:
1. கூகிள் நாள்காட்டிக்குச் செல்லுங்கள்
2. ‘ Other calendars ‘ அருகில் உள்ள கீழ்நோக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
3. அதில் ‘Add by URL’ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
4. Public iCal முகவரியினை உள்ளிடுங்கள்.
5. அதன் பின், ‘Add Calendar’ ஐச் சொடுக்குங்கள்.
இப்போது, உங்கள் நாள்காட்டித் தொகுப்புகளில் “Other Calendars” கீழ் Chennai Events இருப்பதைக் காணலாம். தொகுப்பு ஓடை சரிவர இயங்க அதிகபட்சம் 8 மணிநேரம் வரை ஆகலாம்.
மின்னச்சல் \ குறுஞ்செய்தி அறிவிப்புகளைப் பெற, Remainders and Notifications பக்கம் போய், தேவையான அமைப்புகளைத் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
நீங்களும் பங்குபெற:
Chennai Events நிகழ்வுத் தொகுப்பில் பங்கு பெற விரும்புவோர் நண்பர் சீனிவாசன் அவர்களை (tshrinivasan@gmail.com ) தொடர்புக் கொள்ளலாம்.
நன்றி: விக்கிபீடியா
ஆக்கம்: சீனிவாசன்
மொழியாக்கம்: ‘ஆளுங்க’ அருண்