3 Variables
Javascript-ல் உள்ள variable-ஆனது முதல் நிலைத் தரவு வகைகளான(primitive data types) எண்கள், எழுத்துக்கள் மற்றும் ‘true’ , ‘false’ என்பது போன்ற Boolean மதிப்புகளை சேமிக்கும் வல்லமை கொண்டது. மேலும் Null மற்றும் undefined என்பது போன்ற பிற நிலைத் தரவு வகைகளையும் இது ஆதரிக்கும்.
Variable Declaration & Initialization
Javascript-ல் உள்ள ஒரு variable-ஆனது எழுத்துக்கள், எண்கள் மற்றும் தசம எண்கள் போன்ற அனைத்து விதமான தரவுகளையும் தானாகவே அடையாளம் கண்டு கொள்ளும். பிற மொழிகளில் குறிப்பிடுவது போன்று int, flot, string என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்லத் தேவையில்லை.
உதாரணம்:
ஏதோ ஒரு குறிப்பிட்ட மதிப்பினைத்(25000.00) தாங்கப் போகும் ஒரு பொதுவான வார்த்தைக்கு(salary) variable என்று பெயர். எனவே எந்த வார்த்தையை நாம் variable-ஆகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இதுவே ‘variable declaration’ எனப்படும்(var salary). அவ்வாறு அறிவிக்கப்பட்ட variable-க்கு எந்த மதிப்பினை வழங்கப் போகிறோம் என்பதைக் குறிப்பிடும் செயலுக்கு ‘variable initialization’ என்று பெயர்(salary=”25000.00). ஒரு variable-ஐ அறிவிக்கும்போதே அதற்கான மதிப்பினையும் வழங்கலாம் (var age=29). மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட variable-களை ஒரே நேரத்தில் நம்மால் அறிவிக்கவும், மதிப்புகளை வழங்கவும் முடியும் (var age = 29, name=’Nithya’;).
document.write() என்பது அதன் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்படும் விஷயங்களை வெளியிட உதவும். இங்கு அடைப்புக்குறிக்குள் (salary,”<br/>”,name,”-“,age) என்று கொடுக்கப்பட்டிருப்பதால், salary-ன் மதிப்பும், <br/> tag-ஆனது cursor-ஐ அடுத்த வரிக்கு அனுப்பி name-ன் மதிப்பையும், Hyphen எனும் குறியீட்டையும், age-ன் மதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே இதன் Output பின்வருமாறு அமையும்:
Local vs Global Variables
அடுத்தபடியாக ஒரே variable-க்கு வெவ்வேறு வகையான மதிப்புகளை அதன் எல்லையைப் பொறுத்து நம்மால் வரையறுக்க முடியும். பின்வரும் உதாரணத்தில் salary எனும் variable-க்கு ஒரு மதிப்பினை (25000.00) அளித்துள்ளோம். பின்னர் அதே variable- ஐ ஒரு function-க்குள் பயன்படுத்தி, வேறு ஒரு மதிப்பினை (50000.00) அளித்துள்ளோம். இவ்வாறு ஒரு சிறிய எல்லையான function-க்குள் வரையறுக்கப்படும் variable-ன் மதிப்பு அதன் எல்லைக்குள்ளேயே முடிந்து விடும். இதனை நாம் “Local variables” (salary=50000.00) என்று கூறுவோம். எந்த ஒரு தனி எல்லைக்குள்ளும் இல்லாமல் பொதுவாக காணப்படுபவை “Global variables” (salary=25000.00) ஆகும்.
இங்கு document.write() மூலம் salary-ன் மதிப்பினை வெளிப்படுத்துமாறு function-க்கு உள்ளேயும், வெளியேயும் கொடுத்துள்ளோம். ஆனால் function-க்கு உள்ளே உள்ள வரி மட்டும் செயல்படுத்தப்பட்டு 50000.00 எனும் மதிப்பினை வெளிப்படுத்தியுள்ளது. எப்போதும் ஒரே variable இருமுறை பயன்படுத்தப்பட்டிருப்பின், local-ஆக அமைக்கப்பட்ட variable-ன் மதிப்பே முதன்மை பெரும்.
எனவே இதன் Output பின்வருமாறு அமையும்:
Reserved Words
ஒரு சில வார்த்தைகளை (eg: export, final, long) நம்மால் variable-ஆக அறிவிக்க முடியாது. ஏனென்றால் இது போன்ற வார்த்தைகளுக்கு என்னென்ன மதிப்புகள் என்பதை javascript-ஐ உருவாக்கியவர்களே நியமித்து விட்டனர். அவையே ‘Reserved Keywords’ எனப்படும். இதன் பட்டியல் பின்வருமாறு:
abstract
boolean break byte case catch char class const continue debugger default delete do double |
else
enum export extends false final finally float for function goto if implements import in |
instanceof
int interface long native new null package private protected public return short static super |
switch
synchronized this throw throws transient true try typeof var void volatile while with |
4 Operators
Operator என்றால் இயக்குபவர் என்று பொருள். கொடுக்கப்பட்ட மதிப்புகளைப் பெற்றுக்கொண்டு, அதன் மீது ஒருசில செயல்பாடுகளை செலுத்தி, நமக்கு வேண்டிய தகவல்களை வெளிப்படுத்தும் வேலையை செய்பவருக்கு operator என்று பெயர். Javascript-ல் arithmetic, comparison, logical, conditional, typeof, assignment போன்ற பல்வேறு வகையான operators உள்ளன.
கீழ்க்காணும் program-ல் அனைத்து வகை operator- களின் செயல்பாடுகளும் ஒரு சேரக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் Output பின்வருமாறு:
இப்போது மேற்கண்ட program- க்கான விளக்கத்தையும், ஒவ்வொரு வகை operator-ன் கீழும் வரும் அனைத்து விதமான குறியீடுகளின் செயல்பாடுகளையும் பின்வருமாறு காணலாம். மேற்கண்ட அதே program-ல் document.write() எனும் வரியை மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மாற்றி மாற்றி இயக்கி பார்க்கவும்.
Arithmetic Operators
இதன் கீழ் வரும் கூட்டல், கழிதல், பெருக்கல், வகுத்தல் என்னென்ன செய்யும் என்பது உங்களுக்கே தெரியும். இதனுடன் சேர்த்து Modulus (%), Increment( ++), Decrement (–) எனும் 3 வகை குறியீடுகள் உள்ளன. % என்பது இரண்டு எண்களை வகுத்தல் கிடைக்கும் மீதியை வெளிப்படுத்தும். ++ என்பது கொடுக்கப்பட்ட எண்ணுடன் ஒரு எண்ணைக் கூட்டியும், — என்பது கொடுக்கப்பட்ட எண்ணுடன் ஒரு எண்ணைக் கழித்தும் வெளிப்படுத்தும்.
Comparison Operators
இரண்டு எண்களை ஒப்பிட்டு அவற்றுக்குள் எது பெரியது(>), சிறியது(<), சமமானது(==), சமமில்லாதது(!=), என்பது போன்ற தகவல்களை வெளிப்படுத்த உதவும். (>=) என்பது சமமானது அல்லது பெரியது என்றும், (<=) என்பது சமமானது அல்லது சிறியது என்றும் பொருள்படும். இதன் வெளிப்பாடு எப்போதும் உண்மை(true), பொய்(false) எனும் இரண்டு மதிப்புகளையே பெற்றிருக்கும்.
Logical (or Relational) Operators
இது உண்மை, பொய் எனும் 2 மதிப்புகளை ஒப்பீடு செய்யப் பயன்படுகிறது. && ஒப்பிடப்படுகின்ற அனைத்தும் உண்மை என்பதை வெளிப்படுத்தினால் மட்டுமே, இதுவும் உண்மை என்பதை வெளிப்படுத்தும். !! ஒப்பிடப்படுபவைகளில் ஏதேனும் ஒன்றின் வெளிப்பாடு உண்மை என்று இருந்தால் கூட இதுவும் உண்மை என்பதை வெளிப்படுத்தி விடும். ! என்பது வெளிப்படும் விடை உண்மையாக இருப்பின் பொய் என்றும், பொய்யாக இருப்பின் உண்மை என்றும் மாற்றி வெளிப்படுத்தும்.
Assignment Operators
= என்பது வலப்புறம் இருக்கும் மதிப்பினை, இடப்புறம் உள்ள variable-க்கு வழங்கிவிடும். b=40 என்று ஒரு variable காணப்படின், a=b எனக் கொடுக்கும்போது, a-ன் மதிப்பு 40 என மாறிவிடும். பின்னர் a+=b எனக் கொடுக்கும்போது, ஏற்கனவே a-ல் உள்ள 40 எனும் மதிப்பு, b-ல் உள்ள 40-வுடன் கூட்டப்பட்டு a-ன் மதிப்பு 80 என மாறிவிடும். a-=b எனக் கொடுக்கும்போது 80-லிருந்து 40 கழிக்கப்பட்டு மீண்டும் a-ன் மதிப்பு 40-க்கே வந்துவிடும். இப்போது பின்வரும் உதாரணத்தைப் பார்த்தால் உங்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.
Miscellaneous Operator
Conditional (or ternary) Operators (a > b) ? a : b என்பது ஒரு சோதனையை செய்து, அதன் வெளீிப்பாடு உண்மை என இருப்பின், ?-க்கு அடுத்து உள்ள மதிப்பினையும், பொய் என இருப்பின் அந்த மதிப்பிற்கு அடுத்து உள்ள மதிப்பினையும் வெளிப்படுத்தும்.
(typeof a==”string” ? “xxx”: “yyy”); என்பது ஒரு variable-ல் உள்ள மதிப்பின் வகையை சோதனையை செய்து, அதன் வெளீிப்பாடு உண்மை என இருப்பின், ?-க்கு அடுத்து உள்ள மதிப்பினையும், பொய் என இருப்பின் அந்த மதிப்பிற்கு அடுத்து உள்ள மதிப்பினையும் வெளிப்படுத்தும்.. அதாவது ஒரு variable-ஆனது “number”, “string”, “Boolean”, “object”, “function”, “undefined” போன்ற data வகைகளுடன் ஒப்பிடப்படுகிறது.