JavaScript

1 JavaScript  – அறிமுகம்

JavaScript என்பது ஒரு தனிப்பட்ட நிரலாக்க மொழி கிடையாது. இது html மற்றும் java போன்ற மொழிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் interpreted நிரலாக்க மொழி ஆகும். இது எனவே இதனைக் கற்பதற்கு முன்னர் ‘எளிய தமிழில் HTML’ எனும் புத்தகத்தை நன்கு படித்து விடவும். அப்போதுதான் உங்களால் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

இது ஒரு Client side scripting language ஆகும். அதாவது வலைத்தளத்தைப் பயன்படுத்தப் போகும் பயணருடன் தொடர்பு கொள்வதற்கு சிறந்த மொழி. IE, chrome, firefox போன்ற அனைத்து உலாவிகளிலும் இது சிறப்பாகச் செயல்படும். Javascript எப்போதும் HTML program-ன் ஒரு பகுதியாகவே உலாவிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். உலாவிகலும் இத்தனை ஒரு HTML program போலவே இயக்கும். எனவே இதற்கென்று தனியாக ஒரு அமைப்பு முறையோ, சேமிப்பு முறையோ கிடையாது.

படிவத்தைப் பூர்த்தி செய்யும் பயணர்கள் இடையில் ஒரு பொத்தானை சொடுக்கும்போதோ அல்லது ஒரு இணைப்பினை சொடுக்கும்போதோ, ஏதோ ஒன்று நிகழும் வகையிலேயே Javascript-ஆனது எப்போதும் எழுதப்படும். அதாவது பயணர்கள் நிகழ்த்தும் விஷயங்களாகவே இது அமையும். எனவே Animation, Multimedia போன்ற இடங்களில் இது பெரிதும் பயன்படும்.

2 JavaScript -ன் அமைப்பு

<script> tag-ன் பண்புகளான language, type மூலம் நமது javascript-ஆனது html மொழியுடன் இணைக்கப்படுகிறது. இந்த <script>-ஐ html-ல் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பொதுவாக <head>-க்குள் காணப்படும். கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் <body>-க்குள் பயன்படுத்தியுள்ளோம்.

ஒரு வாக்கியத்தினை வெளிப்படுத்துவதற்கான javascript நிரல் பின்வருமாறு அமையும். இந்த நிரலை gedit அல்லது notepad-ல் எழுதி ஒரு html program-ஐ எவ்வாறு சேமிப்போமோ அவ்வாறே இதனையும் சேமிக்க வேண்டும்(Sample.html)

HTML-ன் பழமையான பதிப்புகளில் language=”javascript” type=”text/javascript” எனும் இரண்டு பண்புகளையும் வெளிப்படையாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உலாவியானது இதனை javascript-ஆக ஏற்று செயல்படும். ஆனால் தற்போதைய பதிப்புகளில் (XHTML மற்றும் இதையடுத்து வந்தவை) type=”text/javascript” எனும் ஒரு பண்பினை மட்டும்  கொடுத்தால் போதுமானது. Language எனும் பண்பினை கொடுக்கத் தேவையில்லை.

அடுத்தபடியாக <script> -க்குள் கொடுக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் எதற்காக <!– மற்றும் //–> எனும் குறியீடுகளுக்குள் கொடுத்துள்ளோம் என்பதே நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒரு பின்னூட்டத்துக்கான(comment) தொடக்கம் மற்றும் முடிவினைக் குறிக்கும் குறியீடுகள் ஆகும். சிலசமயம் javascript-ஐ அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாத உலாவிகளில் இத்தகைய நிரல்கள் இயங்கும்போது, உலாவியானது குழம்பி ஏதோ தவறு எனும் செய்தியை வெளிப்படுத்தும். இதுவே அவையெல்லாம் ஒரு பின்னூட்டக் குறியீட்டுக்குள் கொடுக்கப்பட்டிருப்பின் javascript-ஐ புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இது ஒரு பின்னூட்டம் என்பதைப் புரிந்து கொண்டு அதற்குள் உள்ளவற்றைப் புறக்கணித்து மீதி உள்ளவற்றை செயல்படுத்தும். எனவேதான் javascript நிரலானது எப்போதும் பின்னூட்டக் குறியீட்டுக்குள் கொடுக்கப்படுகிறது.

மேற்கண்ட program-ஐ browser-ல் திறக்கும் பொழுது அது பின்வருமாறு அமைகிறது.

%d bloggers like this: