கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி

OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும்.  OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன.

கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

புதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com ) ,  OpenStreetMaps.org ஐப் பயன்படுத்துதல், பங்களித்தல் பற்றி 03.12.2017 அன்று புதுவை கட்டற்ற மென்பொருள், வன்பொருள் அறக்கட்டளையின் சந்திப்பில் உரையாற்றினார். அந்நிகழ்வை காணொளியாகவும் பதிவு செய்தார். காணொளியை இங்கே காணலாம்.

https://i0.wp.com/discuss.fsftn.org/user_avatar/discuss.fsftn.org/prashere/120/20_1.png?w=1130&ssl=1

அருமையான அறிமுகத்துக்கு நன்றி பிரசன்னா!

 

%d bloggers like this: