Wasm என சுருக்கமாகஅழைக்கப்படும் WebAssemblyஎன்பது தற்போது நாம் பயன்படுத்திகொண்டுவரும் பல்வேறு இணய பயன்பாடுகளுக்காக எழுதிய குறிமுறைவரி-களை கணினிக்கு புரியும் வகையில் இயந்திரமொழிக்கு எளிதாக உருமாற்றுவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதொரு புதிய கருவியாகும் இது குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற அனைத்து இணையஉலாவிகளிலும் இயங்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தியஇடங்களில் அதற்கு பதிலாக இந்த WebAssembly பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்கப்–பட்டுள்ளது சி ,சி ++, ரஸ்ட் போன்ற கணினிமொழிகளில் எழுதிய குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு உருமாற்றுவதற்கு இது பேருதவியாய் விளங்கு-கின்றது.இது கட்டளைவரி வாயிலாக பைத்தான் போன்ற கணினிமொழிகளின் குறிமுறை-வரிகளைகூட செயற்படுத்தி சரிபார்த்திடலாம் கணினியில் குறிப்பிட்ட கட்டமைவு இருந்தால்தான் செயல்படுத்தமுடியும் என்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் இது கைவசமிருக்கின்ற வன்பொருட்களின் திறன்களின் அடிப்படையில் குறிமுறைவரிகளை இயந்திர மொழியாகஉருமாற்றி மிகவிரைவாக மேலேற்றம் செய்திடும் திறன்கொண்டது இது அனைத்து தளங்களிலும் மிகத்திறனுடன் செயல்படக்கூடியது இது memory-safe, sandboxed, execution environment ஆகிய மூன்று வகையாக பிரிக்கப்பட்டு இயங்கினாலும் பின்புலத்தில் ஜாவாஸ்கிரிப்ட் எனும் மெய்நிகர் இயந்திரத்தை பயன்படுத்தி வழக்கமான இணைய உலாவிகளில் உள்நுழைவு செய்வதற்கான படிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு மிகபாதுகாப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது . இதில் குறிமுறைவரிகளின் பிழைகளை எளிதாக திருத்தம் செய்திடமுடியும் மேலும் இதில் மூலக்குறி–முறைவரிகளைஉரையாக இருப்பதால் அவைகளை பார்வையிட்டு எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும் இது பின்னோக்கு ஒத்திசைவை கொண்டிருப்பதால் இணையம் இல்லாத உட்பொதிவுகளையும் ஆதரிக்கின்றது இது பயன்படுத்து–பவர்களின் கற்பணைத்திறனிற்கேற்ற மேம்படுத்தி கொள்ளும் வசதி வாய்ப்புகளை கொண்டது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக பின்புலமாக மேககணினி சேவையிருப்பதால்backend, jqkungfu ஆகியவை நமக்கு தேவையில்லை நடப்பிலிருக்கும் கட்டளைவரி பயன்பாடுகளை இணையவழி பயன்பாடாக மாற்றி பயன்படுத்தி கொள்ளஉதவிடும்மிகச்சிறந்த கருவியாக இது விளங்குகின்றது. இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்ளாமலேயே மாதிரி செயல்பாட்டினை இயக்கி பார்த்திடும் வசதியை கூட இது வழங்குகின்றது மேலும் விவரங்களுக்கு webassembly.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க.