Free Software – என்ன பயன்?

நான் ஒரு computer user, எனக்கு coding , programming-லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது, நான் Open Source இல்ல Free Software use பண்றதுனால என்ன பயன் ? “

என்ன பொருத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான கேள்வி.

சரி இதுக்கு பதில் பல விதங்களில் சொல்லாம். அதில் ஒன்றை மட்டும் நான் இங்கு சொல்கிறேன். ஏனென்றால் அதுதான் அடிப்படையான ஒன்று.

Public Collaboration – அதாவது, இன்றைக்கு இருக்கும் Open Source இல்ல Free Software-கள் பலவும், ஒருவரால் உருவாக்கப்படவில்லை. அதோட code-ஐ அனைவரும் பார்க்கலாம், மாற்றலாம், share பண்ணலாம். நாம எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்கிறது ஒரு Community ஆக அதாவது, சமூகமாக. Bus-ல் போய்க் கொண்டிருக்கிறோம், நம் சீட்டில் பக்கத்தில் உட்கார்ந்து வருபவருக்கு திடீரென்று வலிப்பு, உடனே சாவிக்கொத்து, ஆம்புலன்ஸ்-னு உதவி செய்யத் தானே செய்றோம். நான் மட்டும் வளர்ந்து, என் தினசரி வாழ்க்கை தரம் மட்டும் உயர்ந்தால் பத்தாது, நான் வளர்ந்த, நான் வாழ இடம் கொடுத்த இந்த சமுதாயமும் என்னோடு சேர்ந்து வளர வேண்டும் என்ற அடிப்படையோடு உருவான மாற்றம் தான் இந்த Open Source & Free Software. அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது.

நமக்கு coding, Programming தெரியவில்லை என்றாலும் open Source software-களை நாம் பலரும் பயன்படுத்தும் போது அந்த Software-ல் ஏதேனும் குறை இருக்கலாம் (நிச்சயம் இருக்கும்), எடுத்துக்காட்டாக, Mozilla Firefox use பண்ணும்போது, திடீரென்று அதில் ஏதோ பிரச்சனை. இந்த பிரச்ச்னை தொடர்ந்து கொண்டே இருந்தால் நாம் google-ல் இதற்கு தீர்வு தேடுவோம். தீர்வும் கிடைக்கும், சரி, இந்த தீர்வை சொல்லியது யார் என்று பார்த்தால் அவருக்கும் இந்த பிரச்சனை வந்து அவரே சரி செய்து இருக்க வேண்டும் இல்லை வேறு யாரிடமும் கேட்டிருக்க வேண்டும். மீண்டும் இந்த பிரச்சனை வராமல் இருக்க Firefox-இன் அடுத்த பதிப்பு வெளியிடும் போது இந்த தீர்வு அதில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நாம், அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Free and Open Source Software-இன் தரத்தை அதில் இருக்கும் சில குறைகளை சுட்டிக்காட்டி அந்த software-ஆனது இன்னும் மேன்மை பெற வழி வகுக்கிறோம். So Everyone gets a Quality Software.

இவை யாவும் ஏதோ ஒரு Company-க்கு மட்டும் சொந்தம் அல்ல, இதை மேன்மை படுத்துபவர்கள் பலரும் நம்மில் ஒருவர் தான்.

இன்று உலகெங்கும் அனைவரும் பயன்படுத்தும் Mozilla Firefox, VLC Media Player, போன்ற Free and Open Source Software களுக்கு நீங்கள் என்றாவது பணம் கொடுத்திருக்கீறர்களா? இல்லை ஏனென்றால் அவர்கள் ஒரு இலாப நோக்கம் இல்லாது புதிய உருவாக்கம், Quality Software அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர். நீங்களும் இவற்றில் ஏதேனும் குறை இருக்கிறது, அல்லது இதை மேன்மை படுத்தலாம் என்று வைத்திருந்தால் அதில் பங்கெடுத்துக்கொள்ளலாமே !!!

FirefoxForum:-support.mozilla.org/enUS/questions/new

Firefox Bugreport:- bugzilla.mozilla.org/

VLC Support Center:- www.videolan.org/support/

VLC Bug report:- wiki.videolan.org/Report_bugs

~பிரசன்ன வெங்கடேஷ்

 

%d bloggers like this: