மார்க் ஷட்டில்வொர்த்துடன்(Mark Shuttleworth) ஒரு நேர்காணல்

மார்க் ஷட்டில்வொர்த், தாவ்ட்(Thawte), என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஆவார். இந்த நிறுவனம் தான் முதன் முதலாக பொது SSL சான்றிதழ் விற்பனை செய்த Certificate Authority ஆகும். தாவ்டை வெரிசைனிற்கு (Verisign) விற்ற பிறகு, மார்க் விண்வெளியில் பறக்க, விண்வெளி வீரராக ரஷ்யாவில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் திரும்பி வந்த பிறகு, உபுண்டுவை ஏற்படுத்தினார். அதன் விளைவாக ஜி.என்.யு/லினக்ஸ் (GNU/Linux) பகிர்வு உண்டானது. பின்பு ஃபிரீ சாப்ட்வேர் இதழுடன் (FREE SOFTWARE MAGAZINE) ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டார்.

நேர்காணல்:

 

மார்க், உங்கள் ஆரம்ப காலம் பற்றி கூறுங்கள். தாவ்ட் நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள், அது மிகவும் பிரபலம் ஆகி பின் வெரிசைனால் வாங்கப்பட்டது. தாவ்ட்கான program-கள் இயற்றும் போது உங்களுக்கு மிகவும் சுவாரசியமானதாக தோன்றிய நிகழ்வு எது?

அதிகாலை இரண்டு மணி இருக்கும், என்னுடைய பைதான் RSA நிரல் (program) ஒரு இலக்கமுறை குறியொப்பத்தை (digital signature) உருவாக்கியது. அதை OpenSSL (அப்போது SSLeay) பின்பு சரிபார்க்கும். அந்த நிகழ்வு மிகவும் சுவாரசியமானது.

தாவ்ட்டை விற்ற பிறகு, செல்வச் செழிப்பாய் வாழ்வதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது என எண்ணுகிறேன். அதை கொண்டு நீங்கள் செல்வங்களை பெருக்கியிருக்கலாம். மாறாக பத்து மாதம் ரஷ்ய விண்வெளி ஆய்வகத்தில், பயிற்சி மேற்கொண்டு, விண்வெளி சென்ற முதல் தென் ஆப்ரிக்க குடிமகன் ஆனீர்கள். நான் இதை சில காலங்களுக்கு முன், ஒரு இதழில் படித்து தெரிந்துகொண்டு, கடவுளே இதற்கு அதிகமான உழைப்பு தேவைப்படும் என எண்ணிக் கொண்டேன். அதன் பிறகு, சிறந்த GNU/Linux பகிர்வு ஏற்படுத்த நினைத்து வெற்றியும் பெற்றீர்கள். இத்தகைய சவால்களுக்கு உங்களை இட்டுச் செல்வது எது?

நான் ஒவ்வொரு முறையும் ஓட்டப் பயிற்சி செய்யும் போது, மூச்சு வாங்கி நிற்கையில் நினைப்பதுண்டு, “நான் மாட்டும் உடல் வலுவேறியவனாக இருந்தால், இந்த பயிற்சி எவ்வளவு எளிமையாக இருந்திருக்கும்!”, என்று. ஆனால், உண்மையில் நான் உடல் வலுவேறியவனாக இருந்திருந்தாலும், மேலும் சிறிது தூரம் அல்லது விரைவாக ஓடி மூச்சு வாங்கி நின்றிருப்பேன். 🙂

 

நாம் எல்லோரும் எதாவது ஒரு வகையில் ஒரு சுவாரசியமான யோசனை அல்லது செயல்பாட்டை வேகமாக ஆராய உந்தப்பட்டு வருகிறோம், என நான் நினைக்கிறேன். இப்படியாய்பட்ட ஒவ்வோன்றிலும், நான் நினைப்பது அடுத்து என்ன செய்யலாம் என்பதுதான்.

நான் உடல் வலுவேறியவனாக இருந்திருந்தாலும், மேலும் சிறிது தூரம் அல்லது விரைவாக ஓடி மூச்சு வாங்கி நின்றிருப்பேன். 🙂

உபுண்டுவை பொறுத்த வரையில், நாம் வெற்றி பெற்று விட்டோம் என இப்போதும் கூற முடியாது. என் சுய இலக்கு, நிலையான தொகுப்புகள் (distro sustainable) ஏற்படுத்துவது தான். அதன் பிறகு, ஒரு குழு அதன் விருப்பத்திற்கு ஏற்ப, அதன் வேலையில் கவனம் செலுத்தி, எனது குறுக்கீடு இல்லாமல் உலகிற்கு ஒரு சிறந்த கட்டற்ற மென்பொருளை தர முடியும்.

தாவ்ட், விண்வெளிப் பயணம் அல்லது உபுண்டு… இவற்றில் நீங்கள் எதையாவது வித்தியாசமாக செய்திருக்கலாம் என நினைக்கிறீற்களா?

கண்டிப்பாக, அனுபவம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. ஆனால் நான் செய்த பிழைகளுக்கு, மாற்று விருப்பங்கள் எதையும் நான் சிந்திக்கப் போவதில்லை. 🙂

சிந்தித்து பாருங்கள், பல முறை நடக்க விருப்பது தெரியும் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், நடப்பது முற்றிலும் வேறொன்றாக இருக்கும். ஒருவேளை, நம் இறந்த காலத்திற்கு திரும்ப சென்று, நடந்தவற்றை மாற்ற முடியும் என்றால். இது கால விரையத்தை குறைக்கும் என நாம் நினைக்கலாம். ஆனால் உண்மையில், அது நம்மை முற்றிலும் வேறெங்கோ எடுத்துச் செல்லலாம். அது எந்த இடமாக இருக்கும் என நினைத்துப் பார்ப்பது சாத்தியமே இல்லை.

உபுண்டு நன்றாய் வளர்ந்து விட்டது, அது தன்னை தானே பார்த்துக் கொள்ளும் என்று நான் திருப்தி அடைவதற்கு, நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். அதுவரை, நான் அதனுடன் இருந்து, அதை மேம்படுத்துவதில், என்னால் இயன்ற அளவு முயற்சிப்பேன்.

இதனால், நான் இந்நிலையை அடைந்திருப்பது, அதிஷ்டதாலே என்று நினைத்துக் கொள்வதும் இல்லை. இன்று எந்த திசையில் செல வேண்டும் என்பதிலேயே நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன்.

என் கருத்தின்படி, மைகிரோசாப்டை(Microsoft) முடிவுக்கு கொண்டுவரும் ஒரு பகிர்வுதான் உபுண்டு. உபுண்டுவிற்கான உங்கள், இறுதி இலக்கு என்ன?

நீங்கள் கனிவாய் சொல்கிறீர்கள், ஆனால் நாம் எதிர்காலத்திற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றியும், இப்போது என்ன குறைகிறது எனவும் சிந்திக வேண்டும். உபுண்டு நன்றாய் வளர்ந்து விட்டது, அது தன்னை தானே பார்த்துக் கொள்ளும் என்று நான் திருப்தி அடைவதற்கு, நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். அதுவரை, நான் அதனுடன் இருந்து, அதை மேம்படுத்துவதில், என்னால் இயன்ற அளவு முயற்சிப்பேன். அது நிறைவேறிய பின், மைக்கிரோசாப்ட் கூட தங்கள் அடுத்த திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன். பரந்த கிடைப்புத் தன்மை உடைய, இலவசமான, கட்டற்ற, நம்பத்தகுந்த, தன்னைத்தானே பார்த்திக் கொள்ளக் கூடிய, உயர் தர தொகுப்புகள் நிறைந்த (distro of high quality) மென்பொருதான் உலகத்திலேயே சிறந்ததாக இருக்க முடியும்.

நீங்கள் இப்போது இங்கிலாந்தில் தங்கி இருக்கிறீற்கள். தென் ஆப்பிரிக்காவில் இப்போது உள்ள உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரையேனும் இழந்ததாக எண்ணுகிறீர்களா? அல்லது அங்கு நீங்கள் அடிக்கடி செல்வதுண்டா?

கண்டிப்பாக, ஆப்பிரிக்காவை உங்கள் இரத்தத்திலிருந்து உங்களால் எடுத்துவிட முடியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் அங்கு செல்லும் போதும், மனம் லேசாகிறது. நான் மீண்டும் என்றாவது ஒரு நாள் கேப் டௌனில் குடி பெயர வாய்ப்புகள் உள்ளன. அல்லது, அப்படி நினக்கவாவது விரும்புகிறேன்.

ஆம், நான் பலமுறை சிந்தித்ததுண்டு, காற்று எப்படி பலதிசைகளில் மாறி மாறி உலகில் சுற்றுகிறது, அவற்றை எப்படி நாம் நினைத்தாற் போல் சுற்ற வைப்பது. அது மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு மிக மிக நெருக்கமானதாக இருக்கும். 🙂

www.freesoftwaremagazine.com/articles/shuttleworth_interview

~ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி

%d bloggers like this: