வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
இடம்
Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில்.
நேரம்
ஞாயிறு 23.07.2017 காலை 10.00 முதல் மாலை 5 வரை.
அவசியமானவை
- மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.
- குறைவான இணைய இணைப்பே இருப்பதால், திறன்பேசி அல்லது இணையக் கருவிகள் வழியே சொந்த இணைய இணைப்பு கொண்டுவந்தால் மிக நன்று.
- ஏதேனும் ஒரு நிரலாக்க மொழி அறிந்திருப்பது அவசியம்.
முன் தயாரிப்புகள்
கீழ்க்கண்ட இணைப்புகளை ஆய்ந்து விட்டு வருதல் மிக நன்று.
- மீடியாவிக்கி நிறுவுதல்
- Installing Mediawiki on XAMPP
- wikitools – Python Library
- Mediawiki API
- Gadgets
நிரல் தேவைகள்
உங்களுக்கோ, தமிழ் விக்கி, பிற மொழி விக்கி சூழலுக்கோ, தேவையான நிரல்கள் ஏதேனும் இருப்பின் இங்கே எழுதுக. நிரல் திருவிழாவில் கலந்து கொள்ளும் நிரலர்களுக்கு நிஜமான சிக்கல்களை தீர்க்கும் ஆர்வம் தர இயலும்.
- தமிழக ஆசிரியர்களின் பங்களிப்பு விவரப் பட்டியல். ஒவ்வொரு பயனரும் உருவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை, பைட் அளவு முதலானவை. உதாரணம் – ta.wikipedia.org/s/
6s9e - தலைப்புகளை தானாகவே திருத்துதல் – துப்புரவு பணியில் தற்போது புள்ளி உள்ள தலைப்புகள், வளைவு அடைப்புகுறிகள், ஆங்கில எழுத்தை இணைத்து எழுதுவது, பக்கத்தில் தொடங்கும் போது தாள்களில் எழுதுவது போல இடம் விட்டு எழுதுகின்றனர். அதனை சேமிக்கும் போது, இடப்பக்க பத்தி சீரமைவு தானாகவே அமையும் படி செய்து கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கி, இதுபோன்ற பொது விதிகளை தானியங்கிகள் சரி செய்து கொள்ளும் படி செய்யலாம்.
- காாி, மாாி, பொி, மேடேந்தாிகை, கதிைர, வாிகள், கையாிய, சிறாா் போன்ற பிழைகளைத் திருத்துதல் – ta.wikipedia.org/s/
6svo - தமிழ் உரை ஒலி மாற்றியை நிறுவி, விக்கிப் பக்கங்களை ஒலியாக மாற்றுதல் – www.iitm.ac.in/donlab/
tts/index.php - ORES Scoring Platform ஐ தமிழ் விக்கியில் சோதித்தல் –
phabricator.wikimedia.org/T166048
blog.wikimedia.org/2015/11/30/artificial- intelligence-x-ray-specs/
fr.wikipedia.org/wiki/ORES
தொடர்புக்கு
த.சீனிவாசன் – 98417 9546 எட்டு, tshrinivasan@gmail.com
பங்கு பெறுவோர்
பங்கு பெற விரும்புவோர் தங்கள் பெயரை இங்கு பதிவு செய்க.