எளிய தமிழில் WordPress -2

டந்த பதிவின் இறுதியில் Menu-களைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் காணலாம் என குறிப்பிட்டிருந்தேன் ஆகவே அதன் தொடர்ச்சி இங்கே.

Menu-களைப் பற்றி  இந்த பதிவில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அது மேலும் பதிவுகளை இடுவதில் உள்ள குழப்பங்களை நீக்கும்.

·Home (இல்லம் அல்லது முகப்பு)
முகப்பு குறித்த அதிகபட்ச விளக்கங்கள் தேவைப்படாது. அனைத்துவிதமான வழிகாட்டுதல்களும் நிறைந்த உங்கள் வலைதளத்திற்கான கட்டுப்பாட்டு பகுதிதான் Home. (Dashboard)

·Store (விற்பனை நிலையம்)
இந்த மெனு உங்கள் தளத்தின் உரிமை, வடிவமைப்பு உள்ளிட்டவற்றை கட்டணம் செலுத்தி மாற்றியமைக்க வழி செய்யும். தீம்கள் (Themes), எழுத்துரு (fonts), வடிவமைப்பு (Design) எல்லாமே இதில் அடங்கும். அனைத்து Upgraded மற்றும் கட்டண வசதிகளை உள்ளடக்கிய மெனு.

 

·Posts (பதிவுகள்)
இந்த மெனு உங்கள் பதிவை (Post) தளத்தில் இணைக்க உதவும். புதிதாக எழுத, எழுதியவற்றை திருத்த, (நீங்கள் தளத்தில் எழுதிய) அனைத்து பதிவுகளையும் காணவும் இந்த மெனு வழிசெய்யும்.

·Media (ஊடகம்)
              நீங்கள் தளத்தில் பதிவேற்றிய (Upload) படங்கள், கோப்புகள், ஆவணங்களை இந்த மெனுவில் காணலாம். அவற்றை பார்வையிடவும், மாற்றங்கள் செய்யவும் இந்த மெனு உதவும்.

  

·Links (இணைப்புகள்)
உங்கள் தளத்தில் கொடுக்கப்பட்ட உள்/வெளி இணைப்புகளை பார்வையிட, மாற்றியமைக்க இந்த மெனு உதவும்.

 

·Pages (பக்கங்கள்)
உங்கள் தளத்தின் (பதிவுகள் அல்லாத) தனிப்பட்ட பக்கங்களை பார்வையிட, சேர்க்க, மாற்றியமைக்க, நீக்க இந்த மெனு உதவும்.

  

·Comments (கருத்துகள்)
இந்த மெனுவில் உங்கள் கருத்துகள், மறுமொழிகள், பிறர் கூறிய கருத்துகள், எரிதங்கள் (Spams) உள்ளிட்டவை இருக்கும். அவற்றை மாற்றியமைக்கவோ, (ஆம். உங்களால் பிறரின் கருத்துகளை மாற்றியமைக்க முடியும்!) நீக்கவோ, இயலும்.

 

·Feedbacks (பின்னூட்டங்கள்)
பிறரிடம் கருத்துகள், வாக்கெடுப்புகள் (polls), மதிப்பீடுகள் (Ratings) பெற இந்த மெனு உதவும்.

  

·Appearance (தளத்தின் தோற்றம்)
தளத்தின் முழுமையான வடிவமைப்பையும் மாற்ற இந்த மெனு உதவும். இது பற்றி மேலும் விரிவாக இன்னொரு பதிவில்

காணலாம்.

·Users (பயனர்கள்)
தளத்தை நிர்வகிப்பவர்கள் (Admin) (ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து நடத்த முடியும். பங்களிக்க முடியும். இது குறித்தும் இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்ப்போம்.), பங்களிப்பவர்கள் (Contributors), தொடர்பவர்கள் (Followers) குறித்து இந்த மெனுவின் மூலம் அறிய முடியும்.        

 

·Tools (கருவிகள்)
சில கருவிகள் இந்த மெனுவில் கிடைக்கும். அதையும் விரிவாக பார்க்கலாம். அதோடு இந்த மெனுவை பயன்படுத்தி உங்களை தளத்தை நிரந்தரமாக நீக்க முடியும் என்பதும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று.   

 

Settings (அமைப்புகள்)
மேலே குறிப்பிட்ட வசதிகள் நீங்கலான, பிற வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மெனு இதுதான். இதுவே உங்கள் Dashboard-ன் கடைசி மெனு. இதையும் விரிவாகதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

 

அடுத்த பதிவில் இங்கே விரிவாக பார்க்க வேண்டிய சில மெனுக்களை அறிந்துவிட்டு மேலும் சில அடிப்படைகளைக் கற்போம்.

– தமிழ் 
<iamthamizh@gmail.com>

 

 

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: