எளிய தமிழில் WordPress – 3

எளிய தமிழில் WordPress – 3

 

தமிழ்
<iamthamizh@gmail.com>
@iamthamizh
thamizhg.wordpress.com


கருவிப்பட்டி (Toolbar) உபயோகம்

கருவிப்பட்டி என்பதை ஆங்கிலத்தில் Toolbar என்று கூறலாம். இந்த கருவிப்பட்டியில் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய வசதிகளை (Features) எளிதாக அணுகலாம். கருவிப்பட்டியை நீங்கள் உங்கள் தளத்தில் காண வேண்டுமானால், நீங்கள் தளத்தினுள் உள் நுழைந்திருக்க (Log-In) வேண்டியது அவசியமாகும். அதன் பின் நீங்கள் உங்கள் தளத்தின் மேல்பகுதியில் ஒரு பட்டியைக் (bar) காண இயலும். நீங்கள் Log-In செய்யாவிடில் கருவிப்பட்டியைக் காண இயலாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இனி, இக்கருவிப்பட்டியின் துணையால் நாம் என்னவெல்லாம் அணுக முடியும்?

 • Dashboard-ஐ எளிதாக அடையலாம். அதன் மூலம், உங்கள் தளத்தின் காட்சியமைப்பை, தீம்களை, மெனுக்களின் வரிசை,

  widgetகள், தளத்தின் பின்புலம் (Background) முதலானவற்றை மாற்றியமைக்கலாம்.

 • புதிய பதிவையோ, பக்கத்தையோ, ஏன் புதிய பயனரையோ, இதன் உதவியால் சேர்க்க முடியும்.

 • உங்களின் தகவல்களை (Profile Details) மாற்றியமைக்க முடியும்.

 • தளத்தின் பார்வையாளர்கள் குறித்த முழுத்தகவல்களையும் பெற முடியும்.

 • தளத்தில் இருந்து வெளியேற (log-out) முடியும்

 • இதுதவிர இன்னும் சில வசதிகளும் உண்டு.

இந்த கருவிப்பட்டியை நீக்க வேண்டுமானால் உங்கள் Dashboard -இல் Users -> My Profile என்ற இணைப்பின் வழியே செல்ல வேண்டும். அங்கு தற்காலிகமாக கருவிப்பட்டியை மறைக்க (Hide) செய்ய இயலும். பொதுவாக இது அவசியமற்றதாகும். ஏனெனில் கருவிப்பட்டி என்பது அடிக்கடி நாம் பயன்படுத்தக்கூடிய வசதிகளை எளிதில் அணுக உதவும் என்பதை மனதில் இருத்தவும்.

தளத்தின் தோற்றத்தை (Appearance) மாற்ற:

தளத்தின் தோற்றத்தை மாற்றுவதென்பது அவசியமானதாகும். உங்கள் எண்ணங்கள் பிறரைச் சென்றடைய முதல் வழி உங்கள் தளத்தின் அழகிய காட்சியமைப்பும், வடிவமைப்புமே ஆகும். உங்கள் தளத்தின் தீம் (Theme) சிறப்பாக, பிறரைக் கவரும்படியாக இருத்தல் அவசியமானதும் கூட.

WordPress –ல் அவ்வாறு கவரக்கூடிய வகையிலான தீம்களைக் காணவும், அவற்றை Activate செய்யவும் என்ன செய்யலாம்?

உங்கள் Dashboard –ல் Appearance எனும் மெனுவைத் தேர்ந்தெடுத்து அதில் Themes எனும் தேர்வைத் (option) தேர்ந்தெடுத்தால் உங்களுக்குப் பிடித்தமான, விருப்பமான, பொருத்தமான தீம்-ஐ உங்கள் தளத்தில் Activate செய்யலாம்.

ஒரு தீம்-ஐ பயன்படுத்துவதற்கு முன்பு, அதனை முன்னோட்டம் (preview) பார்க்கும் வசதியும் உண்டு. சில தீம்கள் Premium தீம்களாகவும் இருக்கும். அவற்றை கட்டணம் செலுத்தி தளத்திற்கு பயன்படுத்தலாம். அதே நேரம் பல அழகிய தீம்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன.

அது மட்டுமல்ல….

 • தீம்-ஐ customize செய்யும் வசதியை Appearance -> Customize –ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் பெறலாம்.

 • தளத்தின் widget-களை தேவைக்கேற்ப, நம் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். Appearance -> Widgets

 • இதே Appearance மெனுவிலேயே தளத்தின் தலைப்பு (Header), பின்புலம் (Background), மெனுக்கள் (Menu), உள்ளிட்டவற்றையும் மாற்றியமைக்க முடியும்.

நம் தளம் மொபைல் போனில் எவ்வாறு தெரிய வேண்டும் (Mobile) என்பதையும் நாமே தீர்மானிக்க முடியும் என்பது எத்துணை சிறப்பான வசதி?

இன்னும் நிறைய பார்க்கலாம்.

அடுத்த பதிவில்…………………….

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: