அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்ட் – சென்னையில் ஒருநாள் பயிற்சி முகாம்

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தமிழ் வழியில் சென்னையில் நடக்கிறது.

கட்டற்ற மொழியான ஜாவா ஸ்கிரிப்டின் வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததே!  ஆங்குலர் போன்ற இணையத்தள வடிவமைப்பு நிரலாக்கத்தின் அடிப்படையாக ஜாவாஸ்கிரிப்ட் இருக்கிறது.  நம்மில் பலரும் ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்தவர்களாக இருப்போம்.

அதில் அடுத்த நிலைகளான கிளாஸ், அப்ஸ்டிராக்ட், டெக்கரேட்டர்ஸ் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது.  பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு ஜாவா ஸ்கிரிப்ட் அடிப்படைகள் முன்னரே தெரிந்திருப்பது இப்பயிற்சிக்கான ஒரு முன் தேவையாகும்.  கலந்து கொள்வோர் மடிக்கணினி, உணவு கொண்டுவர வேண்டப்படுகிறார்கள்.  மாலை தேநீர் வழங்கப்படும்.

பத்தாண்டுகளுக்கும் மேலான பணி அனுபவமும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இணையத்தள வடிவமைப்புப் பயிற்சியும் கொடுத்தவரான திரு. இராஜ வசந்தன் இப்பயிற்சி முகாமை நடத்துகிறார். கல்லூரிகளுக்குப் போய் மாணவர்களைக் கணினித்துறைக்கு ஆற்றுப்படுத்துவது, தொழில்நுட்பம் சார்ந்த ஒலி ஓடைகள்(Pod casts) வெளியிடுவது எனப் பன்முகத்திறன் கொண்டவர் இராஜ வசந்தன்.   ‘ஈச் ஒன் டீச் ஒன்‘ (Each One Teach One) யூடியூப் அலைவரிசையில் தொழில்நுட்பம், ஆங்குலர், பைத்தான் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய தமிழ் உரைகள், பாடங்களை நீங்கள் பார்க்கலாம்.

நாள்: 07.12.2019

இடம்: ஐஐடி, சென்னை (IIT Madras Research Park)

கட்டணம்: ரூ. 999 /-

முன்பதிவுக்கு: bit.ly/e1t1-events

பயிற்சி பற்றிய அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.

%d bloggers like this: