எளிய தமிழில் WordPress- 10

கருத்துக்கள் (Comments):

எழுதுவதன் நோக்கம் அதன் பரவலான விவாதத்தில் இன்னும் சிறப்புறும். அவ்வகையில் WordPress-ல் பதிவுகளில் கமெண்ட் செய்வதும் எளிதான ஒன்றுதான். அவ்வாறு வாசகர்கள் பதிவிட்ட கருத்துக்களை நிர்வகிக்கும் மெனுவே Comments menu.

இந்த கமெண்ட் நல்ல விதமாக பாராட்டாகவும் இருக்கலாம். மாறாக (அல்ல விதமாக!)வும் இருக்கலாம். அதை அனுமதிப்பது குறித்து இப்பக்கத்தில் முடிவெடுக்கலாம்.

இப்பக்கத்தில்  Pending, Approved, Spam ,Trash எனும் நான்கு இணைப்புகள் இருக்கும். WordPress இலவசமாக அளிக்கும் Akismet எனும் செருகுநிரல் (Plugin) தளத்தின் ஸ்பாம்களை பிரித்தெடுக்கும்.

தளத்திற்கு வரும் கருத்துக்களை வெளியிடும் முன் நிறுத்தி வைக்க வசதி உண்டு, அப்படிச் செய்தீர்களேயானால், Pending பிரிவில் அந்த கருத்துக்கள் இருக்கும்.

comments

கருத்துக்களின் மேல் சுட்டியைக் கொண்டு சென்றால் சில இணைப்புகள் தோன்றும். அவையாவன.

கருத்தைப் படித்து Approve செய்யலாம். அல்லது unapprove செய்யலாம்.

அந்தக் கருத்துக்கான மறுமொழியை Reply செய்யலாம்.

Edit, Quick Edit மூலம் கருத்து சொன்னவரின் விபரங்கள், அவர் சொன்ன கருத்து ஆகியவற்ரை மாற்றியமைக்கலாம். ஒருவர் உங்களைப் பற்றி தவறாகவே கருத்து சொல்லியிருந்தாலும் அதை மாற்றியமைத்து விடலாம்! கருத்து சொன்ன நேரம் – காலம் ஆகியவற்றைக் கூட மாற்றி விடலாம்.

Spam  என்பதை தமிழில் எரிதம் என்கிறார்கள். இவற்றை Akismet எனும் செருகுநிரல் பார்த்துக்கொள்ளும்.நீங்கள் ஒரு கருத்தை எரிதமாக மாற்ற ஸ்பாம் இணைப்பைக் கிளிக்கினால் போதும். ஸ்பாம்களை மொத்தமாக நீக்க Empty Spam என்றொரு பட்டனும் உண்டு.

 

Trash என்பது கருத்தை நீக்குவதற்கு பயன்படும். இது Recycle Bin போல.

நிரந்தரமாக நீக்க Delete Permanently எனும் இணைப்பு உண்டு.

Bulk Actions மூலமாக பல்வேறு கருத்துக்களுக்கு மேற்கண்ட இணைப்புகளில் ஒரே கட்டளையைக் கொடுக்க முடியும்

%d bloggers like this: