எளிய தமிழில் WordPress- 11

வெளித்தோற்றம் (Appearance):

உங்கள் தளம் பிறருக்கு எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதை இந்த மெனுவின் மூலம் தீர்மானிக்கலாம். ஆள் பாதி ஆடை பாதி எனும் பழமொழி போல உங்கள் தளத்தின் வெளித்தோற்றமும் உங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க உந்தும்.

தீம்கள்:

தீம்கள் விலைக்கும் உண்டு இலவசமாக பலரும் தீம்களை வெளியிடுவதும் உண்டு. வேர்ட்ப்ரஸ் நிறுவனம் கூட ஆண்டுக்கு ஒரு தீம் வெளியிடும். இப்போது twenty fifteen (2015). அவற்றை பயன்படுத்தலாம். தவிர்த்து third party தீம்களை upload செய்தும் பயன்படுத்தலாம்.. அது உங்கள் தனிப்பட்ட நம்பகத்தன்மையைப் பொறுத்தது.

Preview – Customize – Activate:

எந்தவொரு தீமையும் நாம் முன்னோட்டமாக பார்க்க இயலும். எவ்வாறாக ஒரு தீம் உங்கள் தளத்திற்கு பொருந்தும் (அல்லது தளத்தை மாற்றியமைக்கும்) என்பதை நீங்கள் Preview பட்டன் மூலம் காணலாம். அதில் சிறு சிறு மாற்றங்கள் (முக்கியமாக தீமின் வண்ணங்கள், பின்புல படம் ஆகிய மாற்றங்கள்) செய்ய Customize பட்டன் உதவும். தவிர்த்து தீமை உறுதி செய்ய Activate உதவும்.

themes

எந்தவொரு கட்டத்திலும் Save செய்யாவிடில் எந்த மாற்றமும் நிகழாது என்பதை மனதில் கொள்ளவும்.

%d bloggers like this: