எளிய தமிழில் WordPress- 14

பயனர்கள் (Users)

Users எனும் மெனு உங்கள் தளத்தில் உள்ள பயனர்களைக் காட்டும். குழுவாக இயங்கும் தளத்தில் பல்வேறு பயனர்கள் இருப்பின் அவர்கள் வெவ்வேறு விதமான பொறுப்புகளில் இயங்குவர்.

அவை குறித்து,

Administrator (நிர்வாகி): அனைத்துவிதமான கட்டுப்பாட்டு முறைகளையும் கொண்ட பயனர். தளத்தை தொடங்கியவரே admin அதிகாரம் பெறுவார். வேறு பயனர்களுக்கும் இதே அதிகாரத்தை அளிக்கலாம். பொதுவாக ஒரு தளத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட adminகள் இருப்பதை wordpress ஆதரிக்கவில்லை என்றபோதிலும், நமக்குத் தேவையாயிருப்பின் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Editor (ஆசிரியர்): Admin-க்கு அடுத்த நிலை. Editor ஒரு தளத்தின் பதிவுகள், பக்கங்களை தாமே திருத்தி வெளியிட முடியும். பிற பயனர்களின் பதிவுகளையும் கூட.

Author (கட்டுரையாளர்): இவ்வகையில் தாம் எழுதிய பதிவுகளை மட்டும் வெளியிட முடியும். மற்றவர்களின் பதிவுகளைத் திருத்த இயலாது. இது Editor-க்கு அடுத்த நிலை.

Contributor (பங்களிப்பாளர்): இவ்வகையில் பதிவுகளை எழுத இயலும். அவற்றை வெளியிட இயலாது. Editor-, Admin-ஓ அவற்றை வெளியிடுவர்.

பயனர்களின் தன்விவரப் படங்கள் (Profile Pic) யாவும் gravatar.com மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

users

 

புதிதாக பயனர் சேர்க்க:

Users எனும் தேர்வின் உப தெரிவாக வருவது  Invite New என்பதாகும். இதன் மூலம் புதியதாக ஒரு பயனரைச் (User) சேர்க்க இயலும்.

அதில் நாம் சேர்க்க விரும்பும் நபரின் மின்னஞ்சலோ, WordPress பயனர் பெயரோ கொடுத்து அழைப்பு விடுக்கலாம்.

சேர்க்க விரும்பும் நபருக்கான Role-ஐ (பொறுப்பை) நாம் உறுதி செய்ய வேண்டும். Role என்பது முன்னர் குறிப்பிட்ட

Administrator

Editor

Author

Contributor ஆகியவற்றோடு

Follower (பின் தொடர்பவர் (அதாவது நமது வலைப்பக்கத்தைப் படிக்க மட்டும் செய்ய இயலுபவர்)) எனும் Role-ம் உண்டு.

அவர்களுக்கான ஒரு குறுந்தகவலையும் அழைப்போடு சேர்த்து அனுப்பலாம். (உதாரணம்: ‘தங்கள் சேவை என் தளத்துக்குத் தேவை. அழைப்பை ஏற்றுக்கொள்ளவும்’) அல்லது WordPress தன் Default ஆன தகவலை இணைத்து அனுப்பி விடும்.

invite

இதே பக்கத்தில் இதற்கு முன் அனுப்பிய அழைப்புகள் (Invitations) குறித்த தகவல்கள் காணக் கிடைக்கும்.

 

பயனரை நீக்குவது:

All Users எனும் தேர்வில் ஒரு பயனரை நீக்க முடியும். அப்படி நீக்கினால் அதன் பொருட்டு அவரெழுதிய பதிவுகளை வேறொருவருக்கு மாற்ற வேண்டும்.

%d bloggers like this: