கார் ஓட்டலாம் வாங்க Torcs

        ஒரு பரபரப்பான பந்தைய விளையாட்டை தேடுகிறீர்களா? இதோ TORCS (The Open Racing Car Simulator). இது 1997ஆம் ஆண்டின் 2டி பந்தைய விளையாட்டான soapbox derby simulator என்பதிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த 3D பந்தைய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இதில் பல championship போட்டிகள், நூற்றுக்கணக்கான ஓடுகளங்கள் (Tracks), மற்றும் ஆயிரக்கணக்கில் தரவிறக்ககூடிய பிற Tracks, மற்றும் கார்கள் போன்ற பல  வசதிகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் பிறரோடு விளையாடக்கூடிய இரு championship போட்டிகளும் உள்ளன. அதில் ஒன்று TORCS Driving Championship, மற்றொன்று The TORCS Racing Board. 

 

இதனை Ubuntu-வில் நிறுவுவதற்கு உங்களுக்கு விருப்பமான பேக்கேஜ் மேனேஜரில் (Ubunut Software Center, apt, aptitude, synaptic, adept, etc) ‘torcs’ என்பதை தேடி நிறுவவும் அல்லது கீழே உள்ளதை நகல் செய்து Terminal-ல் போடவும். 

 

$ sudo apt-get install torcs

 

இதனை பற்றி மேலும் அறிய torcs.sourceforge.net/ இணையதளத்திற்குச் செல்லவும்.   

 

             

       

   மணிமாறன். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்.

                        மின்னஞ்சல்          :  manimaran990@gmail.com

                        வலை          :   mani-g.blogspot.com

 

 

 

%d bloggers like this: