க்னு/லினக்ஸ் கற்போம் – 5

யுனிக்ஸ், அதாவது லினக்ஸில் பிராசஸ் என்றால் என்னவென்றுப் பார்த்தோம்? ஓரு பயனாளிக்கு (யூசர் ) தனது தேவையை நிறைவேற்ற உயர் மட்ட கம்ப்யூட்டர் மொழியில் எழுதி, கம்பைல் செய்து, நேரடியாக பிராசசர் புரிந்து கொள்கிறமாதிரி செய்து இருக்கிற இரும நிரல் உள்ள ஒரு கோப்பு. இது உங்களுக்கு இப்போ நல்லாவே தெரியும்.

அது வட்டிலே (Hard Disk) இருக்குற வரை அதற்குப் பெயர் ஒரு எக்ஸிக்யூட்டபிள் பைல். அதை பிராசர் இயக்க தயார் செய்த பின் அதற்குப் பெயர், பிராசஸ் என்று பார்த்தோம். அல்லவா.

இதை முதல் பிராசஸ் என்று நாம் சொல்லிக்கொள்வோம். அடுத்து வேறு பல பிராசஸ்களை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

 

முதலில் பிரச்சினையைச் சொல்லுவோம்.

ஒரு கணினியிலேயே பத்து பயனாளர் நிரல் இயங்கிகொண்டிருந்தால், ஒவ்வொன்றுக்கும் சுமார் 200 மில்லி செகண்ட் நேரம் தான் கிடைக்கும். ஓவ்வொரு நிரலுக்கும் சுமார் 1 மணி நேரம் எடுத்துக்கொள்வதா வைத்துக்கொள்வோம்.எல்லா நிரல்ளும் முடிய சுமார் பத்து மணி நேரம் ஆகும்.சரிதானான்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க.

இப்பொழுது ஒரே ஒரு நிரலை மட்டும் இன்னும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொண்டு முடிக்க முடியுமா?

முடியும். எப்படி?

சாதாரணமாக நிரல் எழுதும் பொழுது படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக ஒரே சங்கிலித் தொடராக எழுதுவோம். இதை தொடர் நிரல் வகை என்போம். இன்னொன்று பேரலல் நிரல்.

இதை புரிந்துக்கொள்ள நமது உதவிபேராசிரியர் ராமசாமி (அவரும் பெர்கலி யுனிவர்சிட்டி ஆசாமிதான்) வீட்டில் திருமணம் நடந்தது அங்கே, என்ன ஆகியது என்றுப் பார்க்கலாம்.

ராமசாமியோட தங்கைக்கு திருமண வேலை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களின் அப்பாதான் எல்லா வேலையையும் பார்ப்பார்.

கடையிலே பலசரக்கு ஆர்டர். எல்லாமே ஒரே கடையிலே கிடைக்குதா என்ன? பல பலசரக்கு வாங்க பல கடையிலேயல்லவா ஏறி இறங்கணும். அதன்பிறகு நகைக்கடை, தெரிவு செய்ய வேண்டும் , ஆர்டர் கொடுத்து பின்பு பணத்தை வங்கியிலிருந்து எடுத்து நகையை வாங்கி வங்கிப்பெட்டகத்திலே போட வேண்டும்.

திருமண அரங்கம் கேட்டு பதிவு செய்ய வேண்டும், நாதஸ்வர வித்வான்கள் அனைவரும் கம்யூட்டர் படிக்கபோய் எண்ணிக்கையில் குறைந்துவிட்டார்கள். அவர்களிடம் தேதி கிடைப்பது சுலபம் இல்லே. பல தடவை நடந்து பேரம் பேசி, முன்பணம் கொடுக்க வேண்டும், கடைசி நாளிலே, மாலை, பழங்கள், காய்கறி வாங்குவது.

இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாதம் கூட இல்லை. ராமசாமி கலிபோர்னியாயுலே உக்காந்து ஒரு கணக்கு போட்டாரு. அப்பா மட்டும் ஒத்த ஆளா இதையெல்லாம செய்து முடிப்பதற்கு ஆறுமாதம் போதாது,

இது சரியா வராதுன்னு பட்டுனு லீவு கேட்டாரு. பெரிய புரொபசரிடம் லேவு கேட்டாரா. அவருக்கு ஒரோ கோபம் . யுனிக்ஸ் இன்னும் தயாராகல்லே லீவு போட்டுட்டு போனா எப்படின்னுட்டாரு.

ராமசாமி சொன்னாரு இப்போ எங்க வீட்டுலே ஒரு சோதனை செய்ய்யப்போறேன். அது சக்சஸ் ஆயிட்டா, திரும்பி வரும்போது யுனிக்ஸ். இயங்குதளத்திலே ஒரு புரட்சியையே செய்வோம் என்றாரு.

அப்படின்னா நானும் உன்னோட வரேன்னு இரண்டு பேருமா சான் பிரான்சிஸ்கொலே பிளைட் பிடிச்சு கும்மிடி பூண்டி வந்திறங்கிட்டாங்க. அதுதான் நம்ம ராமசாமிசார் ஊரு.

அப்பாவை கூப்பிட்டு ராமசாமி சொல்லிட்டாரு. “நீங்க தான் எல்லாம் தெரிஞ்ச வங்க, பெரியவங்க. உங்க தலைமையிலேயே எல்லாம் நடக்கும். ஆனா நான், தம்பி, என்னோட பசங்க எல்லோரும் திருமண வேலையிலே பங்கெடுத்துக்கொள்வார்கள்” என்கிறார்.

அப்பாவுக்கு யாரையும் நம்பி எந்த வேலையும் கொடுத்து பழக்கம் இல்லே. இதெல்லாம் வேலைக்கு உதாவதுன்னு மறுத்துப் பார்த்தாரு.

பெரிய புரொபசர் இதை எல்லாம் பாத்தாரு, கேட்டாரு.  சொல்றது சரிதானே என்கிறார்.ராமசாமி சொல்றாரு, நாம நடத்துற சோதனையே இதுதான் என்கிறாரு. திட்டப்படி,

அப்பா அவரு ஒரு வேலையை எடுத்துப்பாரு. மளிகை, காய்கறி,. நகை, இதர கல்யாண நாள் தேவை, இடம் ஏற்பாடு, மற்ற சில்லறை வேலைகள் என்று டிபார்ட்மெபண்டு வாரியா பிரிச்சுடுவாறு அதை தன் பிள்ளை பெண்களுக்கு பிரிச்சுக் கொடுப்பாரு.

நாங்க ஒவ்வொருவரும் அவங்க அவஙக பிள்ளைகளோட ஒரு டிபார்ட்மெண்டு வேலையை எடுத்துப்போம்.

ஏல்லோரும் ஒரே சமயத்துலே ஒரு அஞ்சு இல்லை ஆறு வேலையோட பொறுப்பை எடுத்துப்போம். வெளியிலே இறங்கி வேலையை ஆரம்பிப்போம்.

எங்களுக்கு எங்க பிள்ளைகள் உதவுவார்கள்.எங்க வேலையை தரம் பார்த்து எங்க பிள்ளைகளுக்கு பிரிச்சுக் கொடுப்போம். நாங்க எங்க்பிள்ளைகளுக்கு கொடுத்த வேலையை கவனித்து அவங்க வேலையையும் பத்திரமா சேகரிச்சு எங்க அப்பா கையிலே கொடுக்கணும்.அது எங்க பொறுப்பு.

எங்க அப்பாவின் பிள்ளை பெண்கள் எல்லோருக்கும் (அவங்க அவங்க பிள்ளைகளுக்கு பிரிச்சுக் கொடுத்த வேலையை கவனித்து சரியா முடிச்சவுடனே ஒண்ணு சேர்த்து ஒட்டு மொத்தமா) எங்க அப்பா கிட்டே சுத்தமா சேர்ப்பிக்கிறது முக்கிய பொறுப்பு.

அப்பா முக்கியமான வேலையை கையில் எடுத்துக்கிட்டு பிள்ளைகளுக்கு பொறுப்பை பிரிச்சுக்கொடுத்து, வேலை முடிந்த உடனே ஒண்ணு சேர்த்து கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவதுதான் அவரோட பொறுப்பு.

ஓடுற வேலை, அலையுற வேலை, சுமக்கிற வேலை எல்லாம் சிறுசுகளான நாங்க சுறு சுறுன்னு முடிச்சுடுவோம்.

அப்பா மொரண்டு பிடிச்சாரு. பெரிய புரொபசுருக்கு ராமசாமி திட்டம் பிடிச்சுது. அவரும் சேர்ந்து ராமசாமியோட அப்பாவை ஒப்புக்க வச்சிட்டாங்க. வெள்ளக்காரன் சொன்னா சரியாதான் இருக்கும்னு ராமசாமியின் அப்பா பெரிய சாமிக்கு பெரிய நம்பிக்கை. அதுனாலே ஒத்துக்கிட்டாரு.

ராமசாமி தன் பிள்ளைகளோட மளிகக்கடை போனாரு, அங்கே இல்லாத ஐட்டங்களுக்கு ஒரு பட்டியல் தயார் பண்ணி. அவனோட பெரிய  பையனிடம் கொடுத்தாரு. அந்த கடையிலே இருக்கிற சாமான்களுக்கு  காசு கொடுத்து, வாங்கி வண்டியிலே ஏத்திட்டாரு.

அதுக்குள்ளே ஒரு மகன் வேற ஒரு கடைக்குப் போனான். அங்கே பத்து பொருள் இருந்திச்சு, இரண்டு இல்லே. கூட வந்த அவன் தம்பி, இல்லாத இரண்டு பொருளை வேற கடையிலே வாங்கிட்டான். ராம சாமி வண்டியிலே அவரு வாங்கி வந்து. அவர் மகன்கள் வாங்கினது எல்லாமே ஏறிடுச்சு. மளிகை வேலை முழுவதும் முடிஞ்சுது.

அப்படித்தான் ஒவ்வொரு மகன் மகளும் தன் பிள்ளை குட்டிகளோடே போயி அதே நேரத்துலே துணிகள். ஆபரணங்கள், என்று எல்லா மேஜர் அயிடங்களையும் இரண்டே நாளில் முடிசாங்க, மூணாவது நாளைக்கு  ஒரு வேலையும் பாக்கி இல்லே. புரொபசருக்கு ரொம்ப சந்தோஷம் . ராமசாமியை பாராட்டி குடும்ப நபர்களுக்கு அமக்களமா ஒரு விருந்து கொடுத்துட்டு அமெரிக்கா திரும்பிட்டாரு.

ராமசாமி கல்யாணம் நல்ல விதமா முடிஞ்சு அமெரிக்க திரும்பினாரு.

அப்போ, பெரிய புரொபசர் யுனிக்சிலே ஒரு புதிய புரட்சி செய்ததை விளக்கி மத்தவங்களுக்கு விவரிச்சுகிட்டுருக்கிறாரு.

அதற்கு மூல காரணமா இருந்த ராமசாமிக்கு பாராட்டுதல்களை அள்ளி அள்ளி வீசினாரு. அது என்னன்னு இப்போ பாக்கலாமா? அவரு விளக்கமா  சொன்னது இதுதான்.

ஒரு நிரல் எழுதும்பொழுது அடுத்தடுத்து முதலிலிருந்து ஆரம்பித்து ஒரே நிரலாக எழுதலாம் – ராமசாமி அப்பா போல.

இல்லையென்றால், அதையே உடைத்து பல தொடர்புள்ள பாகங்களா பிரித்து தனித்தனி நிரல்ளாக செய்து , ஒரே நிரலுக்குள்ளே ஓட்ட வச்சி எழுதலாம்.

ஒரே புரோகிராமுக்குள்ளே , ஒரு பேரண்ட் பிராசஸ் இருக்கும் அது தேவைக்கு ஏத்தமாதிரி ஒண்ணோ இரண்டொ, பத்தொ சைல்டு பிராசஸ் உண்டாக்கிடும். அந்த சைல்டு பிராசஸுக்குள்ளே இன்னும் பல சைல்டு பிராசஸ் உண்டாக்கி புரோகிராம் எழுதலாம். .

இப்போ என்னாகும், மெயின் பிராசஸ் ஓடரப்போ, பிள்ளை பிராசஸ், பிள்ளை தன் பிள்ளையோட பிராசஸ் என்று எழுதிக்கலாம். பிராசஸ், சைல்டு பிராசஸ் ,சைல்டோட சைல்டு பிராசஸ்கள் ஒரே நேரத்துலே ஏகப்பட்டது ஓடும். இந்த எல்லாத்துக்குமே தனித்தனியா 200 மில்லி செகண்ட் கிடைக்கும்.

பாக்கி இப்படி புத்திசாலித்தனமா எழுதாத புரோகிராமுக்கு ஒரு சுத்திலே 200 மில்லி செகொண்ட் கிடைச்சா, இந்த ஓடச்சு ஓட்டவச்ச புரோகிறாமுக்குள்ளே எத்தனை பேரண்ட் சைல்டு பிராசஸ் இருக்கோ அத்தனை 200 மில்லி செகொண்ட் கிடைக்கும். இப்போசொல்லுங்க்க இதுனாலே வேகமா வேலை முடியுமா, முடியாதான்னு.

இதுவரை என்ன என்ன பிராசஸ் பாத்திருக்கோம்.

  • பிராசஸ்.

  • பேரெண்ட் பிராசஸ்

  • சைல்டு பிராசஸ்.

இனிமே , அடுத்ததா நாம பாக்கப் போறது டெமொன் பிராசஸ். இதோ அமெரிக்காலே படேல்ணு. குஜராத்திக்காரங்க நிறைய பேரு மோட்டல் (ஹோட்டலோடே வேறே ஒரு பேரு) வச்சு நடத்தரதைப் பாத்துட்டு பீட்டர் என்கிற ஒரு லாப் அஸிட்டண்ட் ஐடியா கொடுத்ததா சொல்லிக்கிறாங்க. உண்மையா இல்லையான்னு தெரியாது. ஆனா, இந்த டேமன் பிராசஸ் என்னான்னு சுத்தமா தெரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருந்திச்சு.

அடுத்தாப்புல இன்ஸ்டன்ஸ் ஒஃப் பிராசஸ் என்று ஒண்ணையும் பாக்கலாம். இனமும் நெறைய இருக்கு.

இதுவரைக்கும் எதாவது சந்தேகம் வந்தா எனக்கு மெயில் போடுங்க வாசகர்களே. விஷயத்தை புரிஞ்சிக்கிடுங்க ராமசாமி பெரிய சாமி விஷயத்தை எல்லாம் யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க.வீணா விஷயம் தெரிஞ்சா , பெர்கலி யுனிவனர்சிடி, எம்மேலே கேசு போட்டுடுவாங்க.

நடராஜன்

இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலைபதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.

வலைப்பதிவு : science-of-good-living.blogspot.com

education-a-pain.blogspot.com

science-of-spirituality.blogspot.com
sprituality-is-knowledge.blogspot.com

%d bloggers like this: