வாட்ஸ்அப், சிக்னல் மற்றும்பாதுகாப்பான தகவல் தொழிநுட்பம் பற்றிய பொது விவாதம்

தேதி : 10/01/2021 – Sunday
நேரம்: 10:30AM
கூட்டத்தின் இணைய முகவரி: meet.jit.si/FSHMPublicDiscussion
Youtube Live: youtu.be/b9T8-_5RQLk
மொழி: தமிழ்

உலகின் அன்றாட டிஜிட்டல் தகவல்தொடர்புகளை கட்டுப்படுத்த பேஸ்புக் வாட்ஸ்அப்பை எடுத்துக் கொண்டது. பல ஆண்டுகளாக, பேஸ்புக் அதன் பயனர்களின் தனிப்பட்ட தரவைத் திருடி விற்பனை செய்வதாக அறியப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு தளமாக மாற பேஸ்புக் மெதுவாக வாட்ஸ்அப்பை கையிலெடுத்து வருகிறது. வாட்ஸ்அப் தனது விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றி இனி சட்டப்பூர்வமாக வாட்ஸ்அப் பேஸ்புக் உடன் தரவைப் பகிர்வது மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதற்கென மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றத்தை எதிர்கொண்டு, பின்வரும் கேள்விகள் எழும்புகிறது –

வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? பாதுகாப்பான தகவல்தொடர்பு தளம் என்றால் என்ன? சிக்னல் செயலி என்றால் என்ன? சிக்னலை விட சிறந்தது தளம் ஏதும் உண்டா? எனது தரவை வாட்ஸ்அப் திருடுவது / விற்பது எப்படி? வாட்ஸ்அப்பை விட சிக்னல் நம்பகமானதா? சொந்த தகவல் தொடர்பு தளம் சேவையயை எவ்வாறு இயக்குவது?
நமக்கான தனியுரிமையைப் பாதுகாப்பதற்கானசட்டங்கள் யாவை?

வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு தளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த எங்கள் பொது விவாதத்தில் பங்கேற்பீர்.

FSHM #FSHMPY #Puducherry #GPL #AGPL #WhatsApp #SaveOurPrivacy #TechInTamil #Privacy #Alternative #Signal #ByeByeWhatsApp

%d bloggers like this: