வினவல் மரம்(QueryTree)

Query Tree என்பது தரவுத்தளங்களின் சக்திவாய்ந்த, பாதுகாப்பான ,நெகிழ்வான,அறிக்கையிடலிற்கும் காட்சிப்படுத்தலுக்குமான தொரு கருவியாகும், இது பொதுமக்கள் தங்களுடைய மென்பொருளின் அல்லது பயன்பாட்டின் தரவுகளை எளிதாக அணுகவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கின்றது. இதுநாம் உருவாக்க விரும்பும் நமது பயன்பாட்டிற்கான தற்காலிக அறிக்கைக்கும் காட்சிப்படுத்தலுக்குமான ஒரு திறமூல தீர்வாக அமைகின்றது. தனிப்பட்டநபர்களுக்குஇது கட்டணமற்றது , விண்டோ,இணையம்ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்க இதனை Github இலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க,இதனை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் மின்னனு நிலை அல்லது Docker ஐப் பயன்படுத்தி இயக்குக, பின்னர் அதை எந்தவொரு மைக்ரோசாஃப்ட் SQL சேவையாளர், MySQL அல்லது PostgreSQL தரவுத்தளத்துடன் இணைத்திடுக அதன்பின்னர் இதனை செயல்படுத்திடுக
பொதுவாக நம்முடைய பயன்பாடுகளின் அறிக்கைகளுக்கான திரையானது தனியாக இல்லாததால், எந்தவொரு தரவுத்தளத்திலும் உள்ள எந்தவொரு அட்டவணையிலிருந்தும் தரவை நாம் எளிதில் தேர்ந்தெடுத்துதல், வடிகட்டிடுதல், குழுவாக ஆக்குதல், ஒன்று திரட்டுதல், காட்சிப்படுத்துதல் ஆகிய பல்வேறுபணிகளை செயல் படுத்திடுவதற்காக தொழில்நுட்பம் தெரிந்த அல்லது தொழில்நுட்பம் தெரியாத ஆகிய இருவகை பயனாளர்களும் ஒரே மாதிரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இந்த QueryTreeஆனது கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக பயனாளர்கள் தங்களுடைய முடிவுகளை பதிவேற்றும் செய்யலாம், அறிக்கைகளை தங்களுடைய குழுவுடன் பகிர்ந்து கொள்ளலாம் மேலும் இணைப்பிலுள்ள அனைவரும் தங்களுடைய தரவுகளை புதுப்பிக்க வைப்பதற்காக அட்டவணையுடனான மின்னஞ்சல்களை அமைத்துகொள்ளலாம்.
பயனாளர்கள் தங்களின் தரவுகளை ஆராயவும், தேர்ந்தெடுக்கவும், சுருக்கவும் இதனுடைய உள்ளுணர்வு மிக்க, பயனாளர் நட்பு டனான அறிக்கை வடிகட்டியை பயன்படுத்திகொள்ளமுடியும்
நாம் உருவாக்க விரும்பும் பயன்பாட்டிற்கான குறியீட்டில் ஒரேயொரு வரியை கூட எழுதாமல் அந்த பயன் பாட்டில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை நம்முடைய பார்வைக்கு சுருக்கமாக பயனுள்ள ஊடாடும் விளக்கப்படங்களை இதன்வாயிலாக உருவாக்கிடமுடியும்
ஒரு சில நிமிடங்களில் நம்முடைய MySQL, PostgreSQL அல்லது Microsoft SQL ஆகிய சேவையாளர்களின் தரவுத்தளங்களுடன் இதன்வாயிலாக பாதுகாப்பாக இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
இதன்உதவியுடன் ஒரு சில நிமிடங்களில் பாதுகாப்பான மறைகுறியாக்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி MySQL, PostgreSQL அல்லது Microsoft SQL Server ஆகிய தரவுத்தளங்களுடன் இணைக்க முடியும். இதனுடைய உள்ளுணர்வுடன்கூடிய கீழிறங்கும் பட்டியலை பயன்படுத்தி மின்னஞ்சல் வழியாக அறிக்கைகளை உருவாக்க, பகிர்ந்துகொள்ள, பதிவேற்றும்செய்திட, திட்டமிட , தரவைப் பயன்படுத்த நம்முடைய குழு உறுப்பினர்களை அழைக்கலாம் மேலும் அறிக்கை உருவாக்குநர்களை நம்மோடு சேர்த்து கொள்ளலாம்.
நம்முடைய தரவுத்தளத்தில் உள்ள மதிப்புமிக்க தகவல்களின் வளத்தைப் பெறுவதற்கு நாம் நிரலாக்க திறன்கொண்டதொரு மேம்படுத்துநராக இருக்கத் தேவையில்லை: அதற்கு பதிலாக இந்த QueryTree இன் காட்சி சூழலை கொண்டு தொழில்நுட்பமற்றவர்கள் கூட எளிதாக இழுத்து விடுதல், இடைமுகம் செய்தல் ஆகிய இதனுடைய நெகிழ்வுத் தன்மையுடனான வசதிகளைப் பயன்படுத்தி வினவல்களையும் அறிக்கைகளையும் உருவாக்குவதற்கான சக்தியை இது வழங்குகின்றது. மேம்படுத்துநரின் உதவியில்லாமல் வெவ்வேறு தரவுத் தொகுப்புகளில் எளிதாக சேரவும், மாற்றங்களைப் பயன்படுத்தவும், முடிவுகளைக் காட்சிப்படுத்தவும் அறிக்கைகளை திட்டமிடவும் இது பேருதவியாக விளங்குகின்றது.
இந்த QueryTreeஆனது குழு மென்பொருள் , தொடக்க பின்னணிஆகியவற்றிலிருந்து வருகின்றது, எனவே தரவுகளிலிருந்து நுண்ணறிவைப் பெறும்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை இதன்வாயிலாக எளிதாக புரிந்து கொள்ளமுடியும். ஒரு அறிக்கையிடல் கருவியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும், இது முடிந்தவரை மதிப்புமிக்கஉதவியை வழங்க முயற்சிக்கின்றது. அதனால்தான் QueryTree இன் ஒரே நோக்கம் தொழில்நுட்ப குழு உறுப்பினர்களை அதிகம் நம்பாமல் தரவுகளிலிருந்தே மதிப்புமிக்க நுண்ணறிவைப் பெறுவதை எளிதாக்குகின்றது.
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்:
எளிய அறிக்கை கட்டமைப்பாளரைகொண்டுள்ளது (கீழிறங்கு பட்டியலின் இடைமுகம்)
மின்னஞ்சல் வழியாக திட்டமிடப்பட்ட அறிக்கைகள் (நாம் உருவாக்கிய அறிக்கைகளின் தானியங்கியான புதுப்பிப்புகள்) வழங்குகின்றது
ஒத்துழைப்பு தன்மைகொண்டது(குழு உறுப்பினர்கள் அல்லது வாடிக்கையாளர்களை வெவ்வேறு நிலை அனுமதியுடன் அழைக்கமுடியும்)
தரவுகளின் காட்சிப்படுத்தலைஎளிதாக்குகின்றது (ஏராளமான வாய்ப்புகள்,தரவுகளை ஒருசிலவினாடிகளில் மீண்டும் காட்சிப்படுத்துதல்)
நிறைவான பாதுகாப்பானதன்மை கொண்டது(QueryTree க்கு படிக்க மட்டும் அணுகுதல்)
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் querytreeapp.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: