ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சிறந்த திறந்த நிலை கோப்பு மேலாளர்

கணியம் இணையதள வாசகர்களுக்கு வணக்கம்……………….

உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில், பலவிதமான கோப்பு மேலாளர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். காலத்திற்கு ஏற்ப கோப்பு மேலாளர்களும் பலகட்ட மாறுதல்களை சந்தித்து இருக்கின்றன.

பலரும் ES கோப்பு மேலாளர் (ES FILE MANAGER) ,solid explorer போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், நம்மில் பலருக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் கோப்பு மேலாளர் திருப்தி அளிப்பது இல்லை.

ஆனால், மேற்கூறிய தனியார் கோப்பு மேலாளர்களில், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான விளம்பரங்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.இதற்கான,சிறந்த மாற்றாக ஒரு ஆண்ட்ராய்டு கோப்பு மேலாளரை, இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

FOSSIFY கோப்பு மேலாளர் ( FOSSIFY FILE MANAGER) உங்களுடைய கோப்புகளை அணுகவும்/நிர்வகிக்கவும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பது சிறிதும் சந்தேகம் இல்லை.

சுயமாக செயலிகளை உருவாக்கும் மென்பொருள் பங்களிப்பாளர்களால்(open source developers community) உருவாக்கப்பட்ட எளிய கோப்பு மேலாளரின் (Simple file manager) ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்த FOSSIFY கோப்பு மேலாளர்.

எனவே, உங்களுடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒரு சிறந்த கோப்பு மேலாளர் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இதில் விளம்பரங்கள் கிடையாது, சிறப்பு அணுகல்கள் (inapp purchases) எதையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவைகள் இல்லை.

என்னுடைய(கட்டுரையாளர் உடைய) அனுபவத்தில், இதன் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அனைத்து விதமான கோப்புகளையும் மிக வேகமாக ஏற்றுகிறது.

மேலும், கவனிக்கத்தக்க சில சிறப்பு பண்புகளையும் பெற்றுள்ளது.

  • எழுத்துக்களின்(Font) வடிவமைப்பு மற்றும் செயலியின் வடிவமைப்பை (Theme) மாற்ற முடியும்.
  • உங்களுக்கு விருப்பமான முறையில் செயலியை இயக்க முடியும். (தற்போது வரை சில குறிப்பிட்ட மொழிகள் மட்டுமே உள்ளன)
  • தனிப்பட்ட கோப்புகளை நிர்வகிக்கவும்,பாதுகாக்கவும் முடியும்.
  • கோப்புகளை எளிமையாக நீக்கவும், அதை தொடர்பான செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும் முடியும்.

உங்களுடைய கோப்புகளை வரிசை கிரகமாக, தனித்தனியான பிரிவுகளில் காண முடியும். இது மிகவும் எளிமையாக நிர்வகிக்கும் வசதியாகும்.

மேலும், உங்களுடைய ஆண்ட்ராய்டு சாதனத்தின் சேமிப்பக(storage details) தகவல்களையும் அறிய முடியும்.

ஆனால், உங்களுடைய செயலி(Application list)பட்டியலில் இந்த செயலியின் பெயர், வெறும் கோப்பு மேலாளர்(Shows as only file manager) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மேற்குறிப்பிட்ட, பெயரான Fossify கோப்பு மேலாளர் என்று தேடினால் கிடைக்காது. ஒருவேளை, வரும் காலத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்படலாம். இதே பெயரில் வேறு கோப்பு மேலாளர்கள், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் நிறுவப்பட்டிருந்தால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

AMAZE கோப்பு மேலாளர்  செயலி உடன் ஒப்பிடும்போது FOSSIFY கோப்பு மேலாளர் சிறப்பாக செயல்படுவதாக நான் கருதுகிறேன்.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க விரும்பும் நபராக இருந்தால், உங்களுக்கான சிறந்த தேர்வாக FOSSIFY கூப்பு மேலாளர் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதை Play Store மற்றும் F-DROID ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்ய முடியும்.இதை Apk கோப்பாக Gethub தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேற்படி கட்டுரை யானது, ITSFOSS இணையதளத்தில் அங்குஸ் தாஸ் அவர்களால் எழுதப்பட்டது.

மொழிபெயர்த்தவர்:

ஶ்ரீ காளீஸ்வரர் செ

இளங்கலை இயற்பியல் மாணவர்.

வலைதளம்

மின்னஞ்சல் : srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: