Author Archives: srikaleeswarar

அலைகளின் ஊடல் : ஃபோரியர் 

இயற்கையில் நாம் காணும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அலைகளால் ஆனவை. கடலில் எழும் அலைகள் முதல், நம் காதுகளில் ஒலிக்கும் இசை, கணினியில் நாம் பார்க்கும் காணொளிகள் வரை அனைத்தும் அலைகளின் விளையாட்டுதான். இந்த அலைகளின் பின்னால் இருக்கும் கணித ரகசியத்தை அவிழ்த்தவர்தான் ஜோசப் ஃபோரியர் (Joseph Fourier). இந்த பெயரைக் கேட்டு பள்ளி அல்லது கல்லூரி கணிதவியல் பாடத்தில் பயந்து போனவர்கள் பலபேர் இருப்பார்கள். உண்மையில் எதற்காக இதை படிக்கிறோம் என்றே தெரியாமல் படித்தவர்களுள்… Read More »

விக்கிமீடியாவில் அதிரடி சாதனை | 25000 புகைப்படங்களை இணைத்த ஏற்காடு இளங்கோ

திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமான தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். தொடர்ந்து 40 ஆண்டுகள் வரையில் தமிழ் அறிவியலுக்காக இயங்கி வருகிறார். அன்னாரை பற்றி ஏற்கனவே நமது வலைதளத்தில் சிறப்பு நேர்காணல் மற்றும் பங்களிப்புகள் பற்றி தெரிவித்திருந்தோம். கணியத்தின் படைப்பான freetamilebooks தளத்தில் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை,கல்வி நோக்கத்தோடு இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள். அன்னாரின் சமீபத்திய சாதனை தான். 25,000 புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்திருப்பது. அது பற்றி… Read More »

நிரல்களை திரைக்கு கொண்டு வரும் Streamlit

நம்மில் பலரும் பல்வேறு விதமான நிரல்களை எழுதி வருகிறோம். பைத்தான் போன்ற மொழியில் ஒரு நிரலை எழுதி அதை பிற பயனர்கள் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைப்பது கொஞ்சம் சிக்கலான காரியம் தான். Tkinter நூலகங்கள் இதற்கான தீர்வை வழங்கினாலும் கூட, இணையத்தில் இருந்தபடியே நீங்கள் எழுதிய நிரல்களை உலாவியின் திரைக்கு கொண்டு வருவது தான் ஸ்ட்ரீம்லிட்(Streamlit). அடிப்படையில் இயற்பியல் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளும் வகையிலான ஒரு சிறிய பைத்தான் நூலகத்தை நான் வடிவமைத்து வருகிறேன். ஆனால் அதை… Read More »

உங்கள் லினக்ஸ் கணினியில் Virtual Environment நிறுவுவது எப்படி? | லினக்ஸ் புராணம்

நம்மில் பலரும் பைத்தான் மொழியில் விரல்களை எழுதி வருகிறோம். என்னைப் போல பைத்தான் மொழியில் புதியதான விஷயங்களை கற்றுக் கொள்பவர்களுக்கு சில சிக்கல்களும் உடன் சேர்ந்தே வரத்தான் செய்யும். புதியதாக ஏதாவது ஒரு நூலகத்தை (library) நிறுவ முனையும் போது, உங்கள் லிநெக்ஸ் கணினியின் முனையத்திலிருந்து , “பைத்தான் தொடர்புடைய கோப்புகளை உங்களால் நேரடியாக கணினியில் நிறுவ முடியாது” என்பது போன்ற ஒரு செய்தி காண்பிக்கப்படும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் லினக்ஸ் கணினிகளின் முக்கியமான கோப்புகள்… Read More »

எளிய தமிழில் Arduino – அறிமுகம்

தொடர்ந்து 52 கட்டுரைகளில் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல்வேறு முக்கியமான மற்றும் அடிப்படையான தகவல்களை கணியம் வலைதளத்தில் எழுதி இருக்கிறேன். ஆனால் இன்றைக்கும் மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக்ஸ் என்றால் ஏதோ மெஷின்களுக்கு இடையே செய்யப்படும் விசித்திரமான தகவல் தொடர்பு என்ற கருதுகோள் நிலவுகிறது. அடிப்படையில், எம்படெட் (Embedded- உட்பொதிக்கப்பட்ட) மின்சுற்றுகளை உருவாக்குவதற்கு ஆழ்ந்த மின்னணுவியல் அறிவு தேவைப்படுகிறது. மேலும், பொறியியல் சார் நிபுணர்களால் மட்டுமே இவற்றை வடிவமைத்து, எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்க முடியும். ஆனால் இந்த சிக்கல்களுக்கு எல்லாம்… Read More »

குவாண்டம் கணினிகள் – பகுதி 4 | குவாண்டம் விதியில் இருக்கும் குழப்பங்கள்

இடையில் கொஞ்ச காலம் இந்த தொடரை தொடராமல் விட்டுவிட்டேன். பழைய உத்வேகத்தில், கொஞ்சம் செய்யறிவின் துணை கொண்டு திருத்தங்களை மேற்கொண்டு, இதோ உங்களுக்காக மீண்டும் எளிய தமிழில் குவாண்டம் கணினிகள். குவாண்டம்  இயற்பியல் என்றாலே நம் நினைவுக்கு வருவது ‘சூப்பர் பொசிஷன்’ (Superposition) எனப்படும் மேற்பொருந்துதல் நிலைதான். ஒ ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது அல்லது இரண்டு வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது என்பது கேட்பதற்கே ஏதோ பைத்தியக்காரன் சொல்லும் விஷயம் போல தோன்றலாம்.… Read More »

அறிவியல் மாணவர்களுக்கான பைத்தான் நூலகம்

பைத்தான் நிரலாக்க மொழியானது பல துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. பைத்தான் மொழியை பயன்படுத்தி நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை கூட உருவாக்க முடியும். ஆனால், பெரும்பாலும் பைத்தான் மொழியை கணினி துறை சாராதவர்கள் பயன்படுத்துவது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. பைத்தான் மொழியில் கணக்கீடுகளை மேற்கொள்வதற்காக Numpy,scipy போன்ற சக்தி வாய்ந்த நூலகங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இவை பெரும்பாலும் c/c++ போன்ற மொழிகளில் எழுதப்பட்டவை. இவற்றைக் கொண்டு சிக்கலான பல கணக்கீடுகளையும் மேற்கொள்ள முடியும். பைத்தான்… Read More »

நீ என்ன! துகளா? அலையா? | குவாண்டம் கணிமை – 3

ஹைசன்பர்க்(Heisenberg) வகுத்துக் கொடுத்த விதியானது என்னதான் ஒரே நேரத்தில் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் முடுக்கம் மற்றும் இருப்பிடத்தை சரியாக கணிக்க முடியாது என சொன்னாலும், குவாண்டம் உலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு இது மட்டும் போதுமானதாக இருந்திருக்கவில்லை. Scientist Werner Heisenberg இந்த இடத்தில்தான் எலக்ட்ரான்கள் பற்றிய முக்கியமான ஆராய்ச்சிகள் தேவையாக தொடங்கின. ஆரம்பத்தில் எலக்ட்ரான்கள் எனும் பெயரை யாரும் பயன்படுத்தவே இல்லை. கேத்தோடு கதிர்கள் என்று தான் எலக்ட்ரான்கள் ஆரம்பத்தில் அறியப்பட்டன. கேத்தோடு… Read More »

குவாண்டம் இயற்பியல் | எளிய தமிழில் குவாண்டம் கணிமை – 2

உலகம் தட்டையானது, பூமியை சூரியன் சுற்றி வருகிறது, நிலவு பூமியை விட பெரிதானது. நட்சத்திரங்கள் நிலையாக இருக்கக்கூடியவை. ஐந்து கிரகங்கள் மட்டுமே இருக்கின்றன என்பன போன்ற பல்வேறு விதமான அனுமானங்கள், அறிவியல் கருத்துக்கள் தோன்றுவதற்கு முன்பு உலகம் எங்கிலும் நிலைத்து இருந்தது. கலிலியோ கலிலி தொலைநோக்கியை கண்டறிந்ததோடு, பல்வேறு விதமான பௌதிகவியல் கருத்துக்களையும் முன்வைத்தார். அவருடைய காலத்தில் முற்போக்கான பல அறிவியல் கருத்துக்களை முன் வைத்ததற்காகவே பல இன்னல்களையும் அவர் சந்தித்திருக்கிறார். இதெல்லாம் நாம் வரலாற்றின் பக்கங்களில்… Read More »

எளிய தமிழில் குவாண்டம் கணிமை | தொடர் அறிமுகம்

வருங்காலத்தில் தொழில்நுட்பத் துறையை ஆட்டி வைக்கப் போவது குவாண்டம் கணினிகள் எனும் கருத்து வலுத்து வருகிறது. சாதாரண தர்க்க கணினிகளுக்கும் குவாண்டம் கணினிகளுக்கும் இருக்கக்கூடிய வேறுபாடு தான் என்ன? வருங்காலத்தில் குவாண்டம் கணினிகள் வருவதால் தொழில்நுட்பம் மாற்றங்கள் எத்தகைய வகையில் இருக்கும். எந்த அளவுக்கு வேகமாக நம்மால் மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும். நிரல்களின் வருங்காலம் எப்படி அமையப்போகிறது? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு தான் இந்த தொடர். ஏற்கனவே கணியம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை… Read More »