எளிய தமிழில் WordPress-7

HTML இணைப்புகள் (links) கொடுக்க:

பதிவெழுதும் பக்கத்தில் உள்ள Insert/edit link button எனும் பட்டனை அழுத்தினால் கீழ்காணுமாறு விண்டோ கிடைக்கும். அதில் தேவையான இணைப்பைக் கொடுக்கலாம். அதை மற்றொரு tab-ல் திறப்பதற்கான தேர்வும் அதிலேயே இருக்கிறது. இணைப்பிற்கு அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், அதில் ஏதும் தலைப்பு வருமாறும் செய்யலாம்.

linkஏன் இணைப்பு கொடுக்க வேண்டும்?

நீங்கள் படித்த, அறிந்த தகவல்கள் வேறொரு தளத்தில் இருக்கலாம். அது ஒரு பதிவிறக்கக்கூடிய pdf கோப்பாக இருக்கலாம். அதையெல்லாம் நம் தளத்தில் கொடுக்க அவற்றின் இணைப்புகளை பயன்படுத்தலாம்.

ஏற்கனவே கொடுத்த இணைப்புகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். அதேபோல் கொடுத்த இணைப்புகளை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். அதற்கு அருகில் உள்ள unlink பட்டனை அழுத்தி நீக்கலாம்.

 

ஏற்கனவே உள்ள பதிவை திருத்துவது: (Editing existing content)

உங்கள் டேஷ் போர்டில் (Dashboard) ஏற்கனவே வெளியான பதிவுகளும், வெளியாகாமல் draft-ஆக உள்ள பதிவுகளும் இருக்கும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் திருத்த முடியும். திருத்த விரும்பும் பதிவின் அருகே சுட்டியைக் கொண்டு சென்றால் உங்களுக்கான தேர்வுகள் வரும். அதில் ‘edit’ தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் தொகுக்கலாம். திருத்தலாம்.

அழிக்க:

பதிவுகளை அழிப்பதற்கு அதே வழிமுறையில் Dashboard-ல் சுட்டியை அருகில் கொண்டு சென்றால், வரும் தேர்வுகளில் ‘trash’ எனும் தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் பதிவுகளை அழிக்கலாம். அவை நிரந்தரமாக முதல் முறையிலேயே அழியாது. அவை யாவும் trash எனும் பக்கத்தில் இருக்கும். அவற்றை அப்பக்கத்திற்கு சென்று delete permanently எனும் தேர்வை தேர்ந்தெடுத்து நீக்கலாம். இல்லையெனில் ’Restore’ எனும் வசதி மூலம் பதிவை அழியாமல் மீட்டெடுக்கலாம்.

பதிவை சேமித்தலும், வெளியிடுதலும்:

நம்முடைய பதிவுகளை எழுதி முடித்தவுடன், உடனே வெளியிடலாம் அல்லது சேமித்து வைத்து குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வெளியிடலாம். அல்லது தொடர்ச்சியாக எழுதி, எழுதி வெளியிடாமலே சேமிக்கலாம்.

புதிய பதிவு எழுதும் பக்கத்தில் வலது ஓரத்தில் கீழ்கண்டவாறான ஒரு பெட்டி இருக்கும்.

publishPublish எனும் அப்பெட்டியில்..

Save Draft பட்டனை அழுத்துவதன் மூலம், பதிவை ’வரைவு’ ஆகச் சேமிக்கலாம்.

Preview எனும் பொத்தான் மூலமாக பதிவின் முன்னோட்ட்த்தை (பதிவு எப்படி மற்றவர்களுக்கு காட்சியளிக்கும் என்பதனைப்) பார்க்க முடியும்.

Status எனுமிடத்தில் இயல்பாக (Default) Draft என்று பதிவாகியிருக்கும். அதில் இன்னொரு தேர்வு Pending Review என்றிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் இருப்பின் editor-ன் ஒப்புதலுக்காக Pending Review தேர்வைப் பயன்படுத்தலாம்.

Visibility என்ற தேர்வில், இயல்பாக (Default) Public என்றிருக்கும். அனைவரும் அப்பதிவைக் காண இயலும்.

அதை Password Protected எனுமாறு மாற்றினால், சரியான கடவுச்சொல் உள்ளிடுபவர்களுக்கு மட்டும் பதிவு காட்சி தரும்.

Private என்பது அனைவருக்குமான பதிவல்ல. குறிப்பிட்ட குழுவினருக்கான பதிவென்று பொருள்.

பதிவை உடனடியாக வெளியிடாமல் Scheduled செய்யலாம். அதற்கு குறிப்பிட்ட மாதம், நாள், தேதி நேரம் ஆகியவற்றை மாற்றினால் அந்த குறிப்பிட்ட தருணத்தில் பதிவு வெளியாகும்.

Publicize என்பதில் உங்கள் சமூகவலைத்தள கணக்குகளை இணைத்து அதன்மூலம் உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் பதிவினைச் சென்றடையச் செய்யலாம். ட்விட்டர், ஃபேஸ்புக்,  கூகுள் + உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்களை இதில் இணைக்க இயலும்.

%d bloggers like this: