Category Archives: AI

செய்யறிவின்(AI) மூலம் எழுதப்பட்டதா எனக் கண்டறியும் கருவிகள்

பொதுவாக கட்டுரைகளைத் திருத்துவது, நிறுவனத்தில் பணியாட்களை தெரிவுசெய்வதற்காக வேலைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்வது அல்லது இணையம் , சமூக ஊடகங்களில் உலாவரும்போது காணும் கட்டுரைகள் என எதுவாக இருந்தாலும், “இதை செய்யறிவு(AI) எழுதியதா?” என்று நாம் சிந்திக்கும் சூழல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் இயல்பான செயலாகிவிட்டது. செய்யறிவின்(AI) எழுத்து நடைக்குச் சில தனித்துவமான அடையாளங்கள் (எடுத்துக்காட்டாக, ’em dash’ எனப்படும் நீண்ட கோட்டின் குறியீடு) இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய செய்யறிவுக்கே(AI) உரிய பாணிகளை வைத்து, ஒரு உரை… Read More »

செய்யறிவுஆனது மனிதர்களை நிர்வகிக்கத் தொடங்கும் போது என்ன நடக்கும்?

செய்யறிவு, அடிப்படைத் தன்னியக்கத்திலிருந்து ஒரு செயல்திறன் மிக்க நிருவாகப் பாத்திரத்திற்கு வேகமாக மாறி வருகிறது. இது சரக்குப் போக்குவரத்து, சில்லறை வணிகம், சுகாதாரம் , அலுவலகப் பணியிடங்கள் போன்ற துறைகளில் ஆள்சேர்ப்பு, பணி அட்டவணை, செயல்திறன் மதிப்பாய்வுகளைக் கையகப்படுத்துகிறது. தருக்க மேலாண்மை உற்பத்தித்திறனையும் புறநிலைத்தன்மையையும் உறுதியளித்தாலும், வளர்ந்து வரும் பல்வேறு ஆய்வுகள் பணியாளர்களுக்கு ஏற்படும் சிக்கலான உளவியல், பொருளாதார, பாதுகாப்பு ஆகிய தாக்கங்களை வெளிப்படுத்துகின்றன. மறைக்கப்பட்ட செலவுகள்: தகுதிநிலை , ஊதியம் GPT-3 ஐப் பயன்படுத்திய ஆய்வுகள்… Read More »

செய்யறிவு (AI), இயந்திரக் கற்றலுக்கான சிறந்த லினக்ஸ் விநியோகங்கள்

அறிமுகம்   லினக்ஸ் (Linux) அதன் திறமூல இயல்பு, நெகிழ்வுத்தன்மை , சக்திவாய்ந்த கட்டளை வரி கருவிகள் ஆகியவற்றின் காரணமாகச் செய்யறிவு (AI) , இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களுக்கு முதன்மையான இயக்க முறைமையாக உள்ளது. 2026-ஆம் ஆண்டில், இத்துறைக்கான லினக்ஸ் விநியோகங்கள் (Distributions) மேலும் சிறப்புப் பதிப்புகளாக உருவெடுத்துள்ளன. ஏன் செய்யறிவிற்கும் (AI) , இயந்திரக் கற்றலுக்கும் லினக்ஸ் தேவை? திறமூல மென்பொருள்: உரிமக் கட்டணங்கள் இல்லை; வலுவான சமூககுழுவின் ஆதரவு உண்டு.      செயல்திறன்… Read More »

Webinar Series: The Architecture of Artificial Intelligence (செய்யறிவின் கட்டமைப்பு – வலையரங்குத் தொடர்)

செய்யறிவின் (AI) கட்டமைப்பு: தமிழில் 8 வார மெய்நிகர் பயிலரங்குத் தொடர் தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர்.  பதிவு பதிவு செய்யக் கட்டணம் இல்லை.  சூம் ஊடாக பதிவுசெய்ய வேண்டும். utoronto.zoom.us/meeting/register/wEgPI_hkSM-h-XK8fMM2ug  மேலோட்டம் இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம்… Read More »