ஒவ்வொரு நிரலாளருக்கும் குறிமுறைவரிகளை எழுதவும், அதைபரிசோதிக்கவும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சில திறமையான கருவிகள் தேவை.
அவ்வாறானவர்களுக்கு உதவிடுவதற்காக சில திறமூலகருவிகளிலும் உள்ளன, அதாவது எவரும் அவற்றை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம்.
இந்தக் கட்டுரையில், ஒவ்வொரு நிரலாளரும் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான ஐந்து திறந்த மூலக் கருவிகளைப் பற்றி காண்போம்.
1. Git 🗂️
உருவப்படத்தை ஒரு whiteboard இல் வரைவதாக கொள்க, திரும்பிச் சென்று முன்பு செய்தபணியை காண விரும்புவதாகவும் மேலும் அதில் திருத்தம்செய்ய விரும்பவதாகவும் கொள்க இந்நிலையில் – அதைச் செய்ய Git எனும் திறமூலக்கருவியானது நமக்கு உதவுகிறது.
இது ஒரு பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பாகும், அதாவது இது நம்முடைய குறிமுறைவரிகளில் மாற்றங்களைக் கண்காணிக்க உதவுகிறது, பழைய பதிப்புகளைப் பார்க்க நம்மை அனுமதிக்கிறது அதே செயல்திட்டத்தில் மற்றவர்களுடன் கூட்டாக பணிசெய்வதை எளிதாக்குகிறது.
🔥இது ஏன் சிறப்பானது? நாம் உருவாக்கிய மென்பொருளின் பழைய பதிப்பை குழப்பாமல் இதில்புதிய ஆலோசனைகளை முயற்சி செய்யலாம்.புதிய பதிப்பு பிடிக்கவில்லை எனில், திரும்பிச் சென்று மீண்டும் பழையதை தொடரலாம்.
🧯 நமக்கு ஏன் இது தேவை? ஏனெனில் இது நம்முடைய பணியைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது செயல்திட்டத்தின் வெவ்வேறு பதிப்புகளை நிர்வகிக்க உதவுகிறது.
2. Visual Studio Code 📝
VS Code என சுருக்கமாக அழைக்கும் இது மிகவும் பிரபலமான குறிமுறைவரிகளின் பதிப்பான்களில் ஒன்றாகும். இது ஒரு திறமூல குறிமுறைவரிகளின் பதிப்பானாகும், இது வேகமாக தட்டச்சு செய்யவும், பிழைகளை கண்டுபிடிக்கவும், நம்முடைய குறிமுறைவரிகளை பரிசோதிக்கவும் உதவுகின்றது.
இது விண்டோ, மேக் , லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுகின்ற திறன்மிக்கது, எனவே நம்மிடம் எந்த வகையான இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினி இருந்தாலும், இதனை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
🦹♂️இதை பிரபலமாக்குவது எது? இந்த கருவியின் தோற்றத்தை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ளலாம் நீட்டிப்புகளுடன் நாம் விரும்புகின்ற புதிய வசதிகளை இதில் சேர்க்கலாம்.
🔫நமக்கு ஏன் இது தேவை? இது குறிமுறைவரிகளை எழுதுவதையும் சரிசெய்வதையும் எளிதாக்குகிறது குறிமுறைவரிகளை எழுதிடுகின்ற பணியை மிகவும் வேடிக்கையானதாக ஆக்குகின்றது.
3. Docker 🚢
இது மொழி, நூலகங்கள் , அமைவுகள் போன்ற இயங்குவதற்கு தேவையான அனைத்தையும் சேர்த்து நம்முடைய பயன்பாட்டை வைத்திடுகின்ற ஒரு கொள்கலன் ஆகும்.
நாம் இதனைப் பயன்படுத்தும்போது, பயன்பாட்டை ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குஎளிதாக நகர்த்தலாம், அவ்வாறு நகர்த்தினாலும் அந்த பயன்பாடு தொடர்ந்து சரியாக செயல்படச்செய்கின்றது!
💉ஏன் கட்டாயமாக்குகிறது? “Docker எனது கணினியில் செயல்படுகிறது” என தெரிந்து கொண்டால் போதும் நாம் உருவாக்கிடுகின்ற பயன்பாட்டிவல் எழுகின்ற பிரச்சனை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இது எல்லா இடங்களிலும் செயல்படுவதை இது உறுதிசெய்கின்றது.
நமக்கு இது ஏன் தேவை? இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது எழுகின்ற சிக்கல்களைத் தவிர்க்கிறது.
4. TensorFlow 🧠
இது மனித மூளை எவ்வாறு புதிய செய்திகளைக் கற்றுக்கொள்கிறது என்பதைப் போன்று கணினிகளுக்குக் கற்றுக்கொடுக்கப் பயன்படும் ஒரு கருவியாகும்.
இது பெரும்பாலும் இயந்திரக் கற்றலுக்குப் பயன்படுத்திகொள்ளப்படுகிறது, அதாவது கணினிகள் எவ்வாறு வடிவங்களைக் கற்றுக் கொள்ளலாம் , முடிவுகளை எடுக்கலாம் என கற்றுக்கொடுக்கின்றது . எடுத்துக்காட்டாக, படங்களை எவ்வாறு அடையாளம் காண்பது அல்லது உரையைப் புரிந்துகொள்வது என்பதை கணினிக்குக் கற்பிக்க குறிமுறைவரிகளின் தொகுப்பை எழுதுதலாகும்.
🔥ஏன் சிறப்பானது? தரவிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய திறன்மிகு நிரலாக்கங்களை நாமே உருவாக்கலாம்.
🤖நமக்கு ஏன் இது தேவை? நாம் செயற்கை நுண்ணறிவு (செநு(AI)) , மனிதர்களைப் போன்றே சிந்திக்கக்கூடிய இயந்திரங்களை உருவாக்க விரும்பினால், TensorFlow நமக்கான கருவியாகும்.
5. Selenium 🧪
இது நமக்காக இணையதளங்களை பரிசோதிக்கும் ஒருஇயந்திர மனிதனை போன்றது.
ஒரு இணையதளத்தை உருவாக்கி, எல்லா பொத்தான்களும் செயல்படுவதையும், பிழைகள் எதுவும் தோன்றாமல் இருப்பதையும் உறுதிசெய்ய விரும்பினால், இந்த கருவியைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுமாறுச் செய்யலாம்.
🔥ஏன் சிறந்தது? எல்லா செயல்களையும் பணிகளையும் நாமே பரிசோதிக்க வேண்டியதில்லை – இந்த கருவி அவ்வாறான பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்கின்றது.
🐛 நமக்கு ஏன் இது தேவை? ஏனெனில் இது நம்மமுடைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது பிழைகளை விரைவாகக் கண்டறிய உதவுகிறது.
முடிவாக நமக்கு இந்த கருவிகளை நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் 🍂என்ற கேள்வி எழும் நிற்க
Git, Visual Studio Code, Docker, TensorFlow , Selenium ஆகிய இந்த திறமூல நிரலாக்கக் கருவிகள் அனைத்தும் கட்டற்றது——பயன்படுத்துவதற்கு முற்றிலும் கட்டணமற்றது, மேலும் அவற்றை மேம்படுத்துவதற்காக பெரிய சமூககுழுக்கங்கள் உள்ளன. இந்த கருவிகள் குறித்து அறிந்துகொள்வது நம்மை சிறந்த,திறமையான நிரலாளராக மாற்றிவிடும் என்பது திண்ணம்.