கட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன?
இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்?
கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன
0 – எவ்வித தடையும் இன்றி, எந்த ஒரு மென்பொருளையும் எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்க சுதந்திரம்.
1 – மென்பொருள் எப்படி வேலை செய்கிறது மற்றும் தெரிந்ததை மாற்றி உபயோகிக்க சுதந்திரம்.
2 – மாற்றி அமைத்த மென்பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விநியோகிக்க சுதந்திரம்.
3 – மென்பொருளை வளர்க்கவும், வளர்த்ததை பொதுமக்களிடம் வழங்கவும் ‘சுதந்திரம்‘.
இதன் மூலம் FOSS என்பதனை விலையில் மட்டுமல்ல, நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சுதந்திரங்களையும் தரம் ஒரு சிறப்பான அமைப்பாகும்.
Microsoft-ம் ஏகாதிபத்தியமும்:-
இதுவரை உலகின் முதல் (No. 1) பணக்காரராக விளங்கும் பில்கேட்ஸ் தொடங்கிய நிறுவனம் தான் ‘Microsoft’ இவரின் இந்த அதீத வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பிண்ணனிகளை நீங்கள் கேட்டால் அது உங்களை நிலைகுலையச் செய்யும். அது மிகவும் மனித நேயமற்ற செயல் மற்றும் அநீதி ஆகும்.
நாம் இப்போது ஒரு கனிணி வாங்க வேண்டுமெனில் அதற்கு ஆகும் செலவு ரூபாய். 30,000/- தான் ஆனால் வெறும் கனிணியை வைத்துக் கொண்டு நம்மால் எதுவும் செய்ய இயலாது. அது இயங்க இயங்குதளம்(Operating System) என்று அழைக்கப்படும் ‘OS’ தேவை. உதாரணமாக Microsoft’s Windows ‘OS’ நமக்கு தேவையெனில் அதை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதன் விலை 7,500/- ரூபாய் ஆனால் வெறும் ‘OS’ வைத்துக்கொண்டும் நம்மால் ஏதும் செய்ய இயலாது. ‘Home Edition’ எனப்படம் வீட்டில் மட்டும் உபயேகிக்கக்கூடிய ‘OS’ என்றாலும் அதை இயக்கக் தேவையான அடிப்படையான மென்பொளையும் நாம் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். அதுவும் சில வருட உபயேகத்திற்கு மட்டுமே, மற்றும் அப்படி விலைக் கொடுத்து வாங்கிய மென்பொருள்களை ஒரேயொரு கனிணிக்கு மட்டுமே நிறுவ வேண்டும் என்ற விதி உள்ளது மேலும் அதை நாம் யாருக்கும் இலவசமாகவோ பணத்திற்கோ விநியோகிக்கக் கூடாது, அண்ணன் தங்கையாக இருந்தாலும் கூடவே கூட!!!!!!!!!!!!!
மென்பொருள்களின் விலை:-
Microsoft Office – 15,000/- Photoshop – 50,000/- Multimedia Editors – 50,000/- Antiviruses – 1,500
Games – 3,000 இது போன்ற அடிப்படை மென்பொருள்களின் குறைந்தபட்ச தோராயமான விலை ஒரு லட்சம். இது நமது கனிணி இயந்திரத்தின் விலையை விட மூன்று மடங்கு அதிகம். இது வெறும் Home Edition என்று கூறப்படும் வீட்டு உபயோகத்திற்கு மட்டும் ஆகும் செலவு.
இதுவே ‘Enterprise Edition’ எனில் ஒரு கனிணிக்கு தேவையான ‘OS’ -க்கு ஆகும் செலவு தோரயமாக ரூபாய்20,000/- மற்றும் அடிப்படை மென்பொருள்களுக்கும் ஆகும் செலவு தோரயமாக ரூபாய் 1,50,000/- நமது நாட்டில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அதில் TCS, CTS, INFOSYS போன்ற நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 50,000கனிணிக்கள் உள்ளன(இருக்கலாம்) எனவே ஒரு நிறுவனம் சில குறிப்பிட்ட வருடங்களுக்கு செய்யும் செலவு ரூபாய் 75,00,000,000/- இது ஒரு நிறுவனத்திற்கு ஆகும் செலவு எனில் நமது நாட்டில் தோராயமாக 240000தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியும்!! 240000×75,00,000,000 என்று நீங்களே கணக்கு போட்டு பாருங்கள். 1800000000000000! என்ன தலை சுற்றுகிறதா?! இவ்வளவு பெருந்தொகை Microsoft போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே செல்கிறது. இப்போது சொல்லுங்கள் நமது நாடு “ஏழை நாடா…”? நமக்கு பின் சுதந்திரம் வாங்கிய சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் ‘FOSS’ எனப்படும் கட்டற்ற மென்பொருள் உபயோகிக்கின்றன. இந்நாடுகளின் வளர்ச்சி நமக்கு கண்கூடாகத் தெரியும்.
இவ்வளவு விவரங்கள் அறிந்தும் நம்மக்கள் பலர் கட்டற்ற மென்பொருக்கு மாறாததன் காரணம் அவர்கள் Window எனும் மாயைக்கு அடிமையானததுதான் நம்மக்களுள் பலர் Pirate எனப்படும் திருட்டுத்தனமான மென்பொருளை மட்டுமே உபயோகம் செய்கின்றனர். இவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் Microsoft-ன் விதியின்படி முதல் குற்றப்பத்திரிக்கை அறிக்கை(FIR) போடக்கூடிய அளவுக்கு திருட்டு செயல் ஆகும். நாம் ஏன் இன்னும் திருடர்களாகவே இருக்க வேண்டும்.
தேவை மாற்றம் மட்டுமே:-
கட்டற்ற மென்பொருளின் நான்கு விதிகளின் படி நீங்கள் இயங்குதளம் மற்றும் மென்பொருள்களை CD/DVD -ல் போட்டு இலவசமாகவோ/பணத்திற்கோ விநியோகம் செய்யலாம். LINUX என்பது கட்டற்ற மென்பொருளின் ஒரு முக்கியமான ‘OS’ ஆகும். LINUX ன் பெரிய பலம் என்னவெனில் அதனை VIRUS Attack செய்யாது. Windows வாடிக்கையாளர்கள் பெரிதும் பயப்படுவது ‘Virus’ களுக்கு மட்டுமே. ஆனால் ‘LINUX’ -ல் இந்த வார்த்தைக்கு இடமே இல்லை.
மேலும் Microsoft-ன் எந்தவொரு தொழிற்நுட்பத்தின் உட்தகவலும் (Source code) நமக்கு கிடைப்பதில்லை. இயந்திரங்களுக்கு மட்டும் புரியும் “BINARY CODE” களாக தரப்படுகிறது. ஆனால் ‘LINUX’ ல் “Source Code” நமக்கு தரப்பட்டு, நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உரிமம் தரப்படுகிறது.
நம்மக்கள் பெரும்பாலும் முயற்சி செய்வதே இல்லை ‘LINUX’ என்ற உடனே அதுவா? அதை இயக்க மிகவும் கடினம் என்ற எண்ணத்துடமே உள்ளனர். ஆனால் தற்போது மிகப்பெரிய மாற்றங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
LINUX -க்கு நீங்கள் புதியவரா? உங்களுக்கு உதவ இந்த ஒரு உலகமே காத்துகொண்டிருக்கிறது. அது ‘LUG’ எனப்படும் “LINUX USER GROUP”.இந்தியாவில் தற்போது எண்ணற்ற ‘LUG’ உருவாகிக் கொண்டு வருகிறது. இங்கு நமது சென்னையில் ‘ILUGC’ என்று அழைக்க படுகிற “Indian Linux user group chennai” எனும் குழுமம் சிறப்பாக செயல் பட்டுக் கொண்டு இருகிறது. ilugc.inஇங்கு சென்று ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும் உங்களுடைய LINUX தேவைகள்/கேள்விகள் பூர்த்தி செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது.
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.”
-எனும் வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.
-த. சுரேஷ்.
சுரேஷ், open source ஐ விரும்பும் ஒரு மென்பொருள் வல்லுநர். SlashProg எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல் : jemenisuresh@gmail.com
வலை : root2linux.com