கணியம் – இதழ் 8

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அடுத்த மாதம் நடக்க இருக்கும் மென்பொருள் விடுதலை விழா(Software Freedom Day) க்கான வேலைகளை தொடங்கி விட்டோம். September 15 அன்று மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிரல் திருவிழா(Hackathon), விக்கி பீடியாவிற்கான புகைப்படப் போட்டி, IRC Training என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. Ilugc.in மற்றும் kaniyam.com தளங்களில் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

திரு.கென்னத் அவர்களின் மறைவு இந்திய சுதந்திர மென்பொருள் விரும்பிகள் அனைவருக்கும் பெரும் வருத்தம் தருகிறது. அவர் ஆற்றிய அரும்பணிகளை நாமும் தொடர்ந்து நடத்த வேண்டும்.

இந்த இதழை சிறப்பாக வடிவமைத்து தந்த திரு இனியன் அவர்களுக்கு நன்றிகள். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o திருத்தி எழுதி வெளியிடலாம். o வணிக ரீதியிலும் பயன்படுத்தலாம்.

ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் ஒத்த உரிமையில் வெளியிட வேண்டும். ‘கணியம்’ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

நன்றி.

ஸ்ரீனி
ஆசிரியர்,
கணியம்
tshrinivasan@gmail.com

%d bloggers like this: