inode என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற (‘சுட்டு முனை(‘index node’)’ ) என்பது ஒரு கோப்பின பெயருக்கும் சேமிப்பக சாதனத்தில் அதன் இருப்பிடத்திற்கும் இடையிலான இணைப்பாகும் .யுனிக்ஸ், லினக்ஸ் ஆகிய இயக்க முறைமைகளில், சுட்டு முனைகள்(inodes) என்பவை கோப்புகள், கோப்பகங்கள் ஆகிய விவரங்களை பற்றிய மீப்பெரும்தரவை வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்ற தரவு கட்டமைப்புகள் ஆகும். ஒரு கோப்பு முறைமை என்பது ஒரு இயக்க முறைமையானது ஒரு சேமிப்பக சாதனத்தில் கோப்புகளை எவ்வாறு ஒழுங்கமைத்து சேமிக்கிறது என்பதுதான். கணினியில் உள்ள ஒவ்வொரு கோப்பு முறைமையும் தனித்தனியாக அதனதன் சொந்த சுட்டுமுனையைக் கொண்டுள்ளது. சுருக்கமாக கூறுவதெனில், ஒரு கணினியில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கோப்பின் முறைமையும்கூட தனக்கென தனியாக அதன் சுட்டு முனைகளைக் கொண்டுள்ளன, ஒவ்வொரு சுட்டுமுனையை அடையாள படுத்திடுவதற்கும் தனித்துவமான எண் ஒதுக்கப்படுகின்றது அவ்வாறான சுட்டுமுனைகள்ஒரு பொதுவான அட்டவணையில் சேமிக்கப்படுகின்றன. ஒரு சுட்டு முனையின் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தலாம், ஆனால் ஒரே கோப்பு முறைமையால் அன்று. ஒரு தனித்துவமான அடையாள முத்திரையை உருவாக்க கோப்பு முறைமையின் சுட்டி ஆனது சுட்டு முனையின்ண்ணுடன் இணைக்கப்படுகிறது.
ஒரு கோப்பு முறைமை உருவாக்கப்படும்போது, ஒரு நிலையான எண்ணிக்கையிலான சுட்டு முனைகள்உருவாக்கப்படுகின்றன. பொதுவாக, கோப்பு முறைமையானது கணினியின் நினைவகவட்டில் தோராயமாக 1% அளவு சுட்டு முனையின் அட்டவணைக்காக ஒதுக்கப்படுகிறது. ஒரு கோப்பு முறைமையில் உள்ள ஒவ்வொரு கோப்பிற்கும் கோப்பகத்திற்கும் என ஒரு தனித்துவமான சுட்டு முனை ஒதுக்கப்படுகிறது, இதுவே ஒரு சுட்டு முனையின் எண் எனப்படும் முழு எண்ணால் அடையாளம் காணப்படுகிறது. ஒரு கோப்பு முறைமை பொதுவாக சுட்டு முனைகளாலும் தரவுத் தொகுதிகளாகவும் பிரிக்கப்படுகிறது.
கோப்பின் பெயர்களை சுட்டு முனைகளின் எண்களுடன் வரைபடமாக்கின்ற அட்டவணையாக இந்த கோப்பகம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கோப்பக அட்டவணையில் உள்ள ஒவ்வொரு கோப்பும் ஒரு கோப்பின் பெயர், சுட்டு முனைகளின் எண்களைக் கொண்ட ஒரு உள்ளீடாகும். கோப்பைப் பற்றிய மற்ற அனைத்து தகவல்களும் சுட்டு முனையின் அட்டவணையில் உள்ள சுட்டு முனையின் எண்ணைக் குறிப்பிடுவதன் மூலம் பெறப்படுகின்றன. ஒரு கோப்பு திறக்கப்படும்போது, இயக்க முறைமையானது சுட்டு முனையின் சுட்டிகளைப் பயன்படுத்தி நினைவகவட்டு வழியாகச் சென்று கோப்பின் உள்ளடக்கத்தை அதன் இருப்பிடத்திலிருந்து மீட்டெடுக்கிறது. இந்த செயல்முறையானது பயனர்களுக்கு தடையற்றது, ஆனால் சுட்டு முனைகளில் சேமிக்கப்பட்டுள்ள இந்த ‘வழிகாட்டுதல்களை(directions) ‘ பெரிதும் நம்பியுள்ளது.
சுட்டு முனைகளின்(inodes) மீப்பெரும்தரவு
சுட்டுமுனைகள் ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தைப் பற்றிய பல்வேறு வகையான மீப்பெரும்தரவை (கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி) சேமிக்கின்றன, ஆனால் பெயர் அல்லது உண்மையான கோப்பு ஆனது தரவைச் சேமிக்காது.
கோப்பின் வகை:கோப்புஆனது ஒரு சாதாரண கோப்பு, ஒரு கோப்பகம் அல்லது ஒரு குறியீட்டு இணைப்பாக இருக்கலாம்.
கோப்பின் அளவு: இது பைட்டுகளில் கோப்பின் அளவு இருக்கும்.
கோப்பின்உரிமை: கோப்பின் உரிமையாளர் , குழுவில் அவர்களின் பயனர் சுட்டி (UID), குழுவின்சுட்டி (GID) ஆகியவற்றின் மூலம் தீர்மாணிக்கப்படுகிறது.
கோப்பினை பயன்படுத்திடுகின்றஅனுமதிகள்:கோப்பிற்கான படிக்க, எழுத , செயல்படுத்த ஆகிய செயல்களின் அனுமதிகளுக்கான அணுகுதல் கட்டுப்பாட்டை வரையறுக்கின்றன.
நேர முத்திரைகள்:மாற்றம் (mtime), கடைசி அணுகல் (atime) ,சுட்டுமுனையின் மாற்ற நேரங்கள் (ctime) ஆகியவற்றை வழங்குகின்ற நேர முத்திரைகளை சுட்டுமுனைகள் பதிவு செய்கின்றன.
தரவுத் தொகுதியின் இருப்பிடங்கள்:தரவுத் தொகுதியின் இருப்பிடங்கள் கோப்பின் தரவு சேமிக்கப்படும் வட்டில் உள்ள இடங்களுக்கான சுட்டிகள் (முகவரிகள்) ஆகும்.
இணைப்புகளின் எண்ணிக்கை:இது சுட்டுமுனையானது சுட்டிக்காட்டும் கடினமான இணைப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
மீப்பெரும்தரவை திறம்பட சேமிப்பதன் மூலம், சுட்டுமுனைகள் வலுவான கோப்பு அணுகுதலின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை செயல்படுத்துகின்றன. கணினியானது பாதுகாப்பினையும் ஒருமைப்பாட்டையும் பராமரிக்கத் தேவையான தணிக்கை செயல்முறைகளை எளிதாக்குகின்றன.
சுட்டுமுனைகளின் மொத்த எண்ணிக்கை
ஒவ்வொரு அமைப்பிலும் ஏராளமான சுட்டுமுனைகள் உள்ளன, மேலும் சில முக்கிய எண்களைக் கவனத்தில் கொள்வது மிகமுக்கியமாகும். கோட்பாட்டளவில், சுட்டுமுனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை 2^32 (தோராயமாக 4.3 பில்லியன்) ஆகும். இது 32-பிட் கையொப்பமிடப்படாத முழு எண் தரவு வகையின் சாத்தியமான வரம்பால் ஏற்படுகிறது,பொதுவாக இது சுட்டுமுனையின் எண்களைச் சேமிக்கப் பயன்படுகிறது. ஒரு கோப்பு முறைமை உருவாக்கப் படும்போது (வடிவமைக்கப்படும்போது) அதில் உள்ள சுட்டுமுனைகளின் எண்ணிக்கை, பகிர்வின் அளவு, விரும்பிய தொகுதி அளவு , கோப்பு முறைமையின் வகை போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மாணிக்கப்படுகிறது. எனவே, ஒரு கோப்பு முறைமை உருவாக்கப்படும்போது சுட்டுமுனைகளின் எண்ணிக்கையில் ஒரு வரம்பு நிறுவுகைசெய்யப்படுகிறது. இதன் பொருள், நினைவகவட்டில் கட்டணமற்ற இடம் இருந்தாலும், ஏராளமான சிறிய கோப்புகள் உருவாக்கப்பட்டால், சுட்டுமுனைகள் தீர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது.
கோப்பு முறைமைகள் பொதுவாக சுட்டுமுனைகளின் இயல்புநிலை விகிதத்துடன் (எ.கா., 16KBக்கு 1 சுட்டுமுனைஎன்றவாறு) கட்டமைக்கப்படுகின்றன. கோப்பு முறைமை உருவாக்கப்படும்போது இந்த விகிதம் அமைக்கப்படுகிறது. பல்வேறு மிகச் சிறிய கோப்புகளைச் சேமிக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றோமெனில், கோப்பு முறைமை உருவாக்குகின்ற கருவிகள் அனுமதித்தால், 4KBக்கு ஒரு சுட்டுமுனை போன்ற வேறுபட்ட விகிதத்தைகூட தேர்வு செய்யலாம்.
சுட்டுமுனைகளின் முக்கியத்துவம்
லினக்ஸ் அமைப்பு கோப்புகளை திறமையாக நிர்வகிக்கவும் அணுகவும் சுட்டுமுனைகள் அவசியமாகும். அவை கோப்பின்மீப்பெரும்தரவினையும் உள்ளடக்கத்தையும் விரைவாக மீட்டெடுக்க உதவுகின்றன.
சுட்டுமுனைகள்ஆனவை அதற்கான உரிமை, அனுமதிகள், நேர முத்திரைகள் போன்ற பல்வேறு தகவல்களைச் சேமிப்பதன் மூலம் கோப்பு ஆனது மீப்பெரும்தரவை நிர்வகிக்கின்றது.
சுட்டுமுனைகளானவை சேமிப்பக சாதனத்தின் வெவ்வேறு பகுதிகளில் சிதறிக்கிடந்தாலும் கூட. இவை ஒரு கோப்பின் அனைத்து துண்டுகளையும் திறமையாகக் கண்டறிய கணினிக்கு உதவுகின்றன,
பல்வேறு கடிணமான இணைப்புகள் ஒரே சுட்டுமுனையை சுட்டிக்காட்டலாம். இது ஒரு கோப்பு ஆனது அவ்வாறான ஒரேயொரு கோப்பு முறைமைக்குள் பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்க அனுமதிக்கிறது.
கட்டளை வரி | விவரங்கள் | பயன்பாட்டின் எடுத்துக்காட்டு |
ls -l -i | இருப்பிடத்தின் கோப்புகள், கோப்பகங்கள் ஆகியவற்றின் சுட்டுமுனையின் எண்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. | ls -l -i |
stat | ஒரு கோப்பகம் அல்லது கோப்பைப் பற்றிய விரிவான தகவல்களை, அதன் சுட்டுமுனையின் எண் உட்பட, காட்டுகிறது. | stat filename |
df -hi | பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து கோப்பு முறைமைகளுக்கும் சுட்டுமுனையானது பயன்பாட்டுத் தகவலை வழங்குகிறது, இதில் மொத்த சுட்டுமுனைகள், பயன்படுத்தப்பட்ட சுட்டுமுனைகளின் எண்ணிக்கைகளும் அடங்கும் | df -hi |
du –inode | தற்போதைய கோப்பகத்தில் உள்ள கோப்புகள் ,கோப்பகங்கள்ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகின்ற சுட்டு முனைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. | du –inode |
find | சுட்டுமுனையின் எண்ணின் மூலம் கோப்புகளைத் தேடுகிறது, மேலும் காணப்படும் கோப்புகளில் கட்டளைகளை இயக்கவும் முடியும். | find / -inum inode_number -exec rm -i {} \; |
லினக்ஸ் கட்டளைகளைப் பயன்படுத்தி சுட்டுமுனைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை இந்த அட்டவணையானது காண்பிக்கிறது.
லினக்ஸில் சுட்டுமுனைகளுடன் செயல்படுவதற்காக பல்வேறு கட்டளைகளைப் பயன்படுத்திகொள்ளலாம்.
. ls -l -i: இந்தக் கட்டளையானது, வெளியீட்டின் முதல் நெடுவரிசையில் ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தின் சுட்டுமுனையின் எண்ணைக் காட்டுகிறது.
stat filename: இந்தக் கட்டளையானது, அதன் சுட்டுமுனையின் எண், அளவு, அனுமதிகள் , நேர முத்திரைகள் போன்ற ஒரு கோப்பைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
df -i: இந்தக் கட்டளையானது, ஒரு கோப்பு முறைமையில் உள்ள சுட்டுமுனைகள், பயன்படுத்தப்பட்ட சுட்டுமுனைகளின் எண்ணிக்கை , கிடைக்கக்கூடிய சுட்டுமுனைகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைக் காண்பிக்கிறது.
du –inode: இந்தக் கட்டளையானது தற்போதைய கோப்பகத்தில் கோப்புகள், கோப்பகங்கள் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகின்ற சுட்டுமுனைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
find / -inum inode_number -exec rm -i {} \;:கோப்புகளை அவற்றின் சுட்டுமுனையின் எண்ணின் அடிப்படையில் கண்டுபிடிக்க இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம்.
-exec rm -i {} \;: மேற்கூறியக் கட்டளையின் இந்தப் பகுதி, கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு கோப்பிலும் rm (remove) எனும்கட்டளையை இயக்குகிறது. ‘-i’ எனும் வாய்ப்பு, கோப்பை ஊடாடும் வகையில் அகற்ற உதவுகிறது. ‘{}’ என்பது கண்டுபிடிக்கப்பட்ட கோப்பின் பெயருக்கான ஒரு ஒதுக்கப்பட்டஇடமாகும், மேலும் ‘\;’ என்பது செயல்படுத்தப்பட வேண்டிய கட்டளையின் முடிவைக் குறிக்கிறது.
குறிப்பிட்ட சுட்டுமுனையின் எண்ணைக் கொண்ட கோப்பைக் கண்டுபிடித்து அகற்றுவதற்கான எடுத்துக்காட்டு பின்வருமாறு:
find / -inum 137589 -exec rm -i {}\;
இந்தக் கட்டளையானது 137589 என்ற சுட்டுமுனையின் எண்ணைக் கொண்ட கோப்பைத் தேடி அதை ஊடாடும் வகையில் நீக்குகிறது.
சுட்டுமுனையின் தற்போதைய பயன்பாட்டை காணுதல்
மேலும் இது ஒவ்வொரு கோப்பு முறைமையிலும் எடுக்கப்பட்ட ,கட்டணமற்ற சுட்டுமுனைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. சுட்டுமுனைகளின் எண்ணிக்கையின் வரம்பை அடைந்தால், நினைவக வட்டில் போதுமான இடம் கிடைத்தாலும் புதிய கோப்புகளை உருவாக்க முடியாது. இது ஒரு மின்னஞ்சல் சேவையகத்தில் நிகழலாம்.
சுட்டுமுனைகளை நீக்குதல்
ஒரு கோப்பு நீக்கப்படும்போது, அதன் சுட்டுமுனையும் விடுவிக்கப்படுகிறது, இதனால் அது மறுபயன்பாட்டிற்குக் கிடைக்கும். ஒரு கோப்பை அதன் சுட்டுமுனையின் எண்ணைப் பயன்படுத்தியும் அகற்றலாம், இது கோப்பிற்கு ஒதுக்கப்பட்ட சுட்டுமுனையின் எண்ணை விடுவிக்கிறது.
ஒரு கோப்பை நீக்கும் செயலானது கோப்பக உள்ளீட்டை நீக்கி, மறுபயன்பாட்டிற்கு சுட்டுமுனையினை விடுவிக்கிறது; இருப்பினும், தரவுத் தொகுதிகள் மேலெழுதப்படும் வரை அப்படியே இருக்கக்கூடும். எனவே, நீக்கப்பட்ட கோப்புகளை , அவை மேலெழுதப்படும் வரைமீட்டெடுக்க சுட்டுமுனையின் எண்களைப் பயன்படுத்திகொள்ளலாம்.
சுட்டுமுனைகளைப் பற்றி கவனிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்புகள்
சுட்டுமுனைகள் ஒரு கோப்பைப் பற்றிய மீப்பெரும்தரவைச் சேமிக்கின்றன, ஆனால், முக்கியமாக, கோப்பின்ப் பெயரையோ அல்லது கோப்பின் தரவையோ சேமிக்காது. அதற்கு பதிலாக, அவை தரவுத் தொகுதிகளுக்கான சுட்டிகளைக் கொண்டுள்ளன, அதாவது, கோப்பின் உள்ளடக்கம் இருக்கின்ற நினைவக வட்டில் உண்மையான கோப்பின் தரவு எங்கே சேமிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கின்ற முகவரிகளாகும்.
கோப்பு முறைமை உருவாக்கப்படும்போது சுட்டுமுனைகளின் எண்ணிக்கை கட்டமைக்கப்படுகிறது. இது கணினி வைத்திருக்கக்கூடிய கோப்புகளின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட வரம்பை நிறுத்திவைக்கிறது.
JFS, XFS, ZFS , btrfs போன்ற புதிய கோப்பு முறைமைகள், ஒரு தொகுப்பு அளவிலான சுட்டுமுனைகளின் அட்டவணையை விட நெகிழ்வான சுட்டுமுனைகளின் ஒதுக்கீட்டு வழிமுறைகளைப் பயன்படுத்திகொள்கின்றன.
நினைவகவட்டில் இடம் இருந்தாலும், ஒரு கோப்பு முறைமை அதன் அனைத்து சுட்டுமுனைகளையும் பயன்படுத்திகொள்ளலாம். பல்வேறு சிறிய கோப்புகள் உருவாக்கப்படும்போது இது நிகழ்கிறது.
நகலெடுத்து நகர்த்துதல்
ஒரு கோப்பை நகலெடுக்கும்போது, இயக்க முறைமை ஒரு புதிய கோப்பை உருவாக்குகிறது. இந்தப் புதிய கோப்பு அதன் தனித்துவமான சுட்டுமுனை எண்ணையும் கோப்பின் உள்ளடக்கத்தையும் சேமிக்க அதன் சொந்த தரவுத் தொகுதிகளின் தொகுப்பையும் பெறுகிறது. இது அசல் கோப்பிலிருந்து முற்றிலும் சுதந்திரமான ஒரு கோப்பாகும்.
ஒரு கோப்பு ஆனது அந்தஒரே கோப்பின் முறைமைக்குள் நகர்த்தப்படும்போது, கோப்பின் தரவு,மீப்பெரும்தரவு (சுட்டுமுனை எண் உட்பட) மாறாது. அதற்கு பதிலாக, இயக்க முறைமை வெறுமனே கோப்பக உள்ளீட்டைப் புதுப்பிக்கிறது. ஒரு கோப்பை நகர்த்துவது எந்த கோப்பகம் ஏற்கனவே உள்ள சுட்டுமுனையை சுட்டிக்காட்டுகிறது என்பதை மாற்றுகிறது. கோப்பின்சுட்டுமுனையும் தரவும் நினைவகவட்டில் அதே இடத்தில் இருக்கும். சுட்டுமுனை எண்ணும்கூட அப்படியே இருக்கும்.
நகலெடுப்பது ஒரு புதிய சுட்டுமுனையைக் கொண்ட புதியதொரு கோப்பை உருவாக்குகிறது, அதேசமயம் நகர்த்துவது கோப்பகத் தகவலை மட்டுமே புதுப்பிக்கிறது, சுட்டுமுனையைத் தொடாமல் விட்டுவிடுகிறது. ஒரு கோப்பு வேறு கோப்பு முறைமைக்கு நகர்த்தப்பட்டால், அது ஒரு நகலின் செயல்பாட்டை உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து அசல் கோப்பில் ஒரு நீக்குதல் செயல்பாடு செய்யப்படுகிறது. எனவே, இலக்கு கோப்பு முறைமையில் உள்ள புதியகோப்பிற்கு ஒரு புதிய சுட்டுமுனை ஒதுக்கப்படுகிறது.
சுட்டுமுனை இல்லாமல்போதல் (exhaustion)
நினைவகவட்டு நிரம்பவில்லை என்றாலும், ஒரு கோப்பு முறைமையில் இனி சுட்டுமுனைகள் இல்லை என்பதை சுட்டுமுனையின் இல்லாமல்போதல் (exhaustion) குறிக்கிறது. ஏராளமானஅளவில் சிறிய கோப்புகள் உருவாக்கப்பட்டால் இது நிகழலாம். இதை சரிசெய்ய, தேவையில்லாத கோப்புகளைக் கண்டுபிடித்து அகற்றலாம் அல்லது, முடிந்தால், கோப்பு முறைமையை மறுவடிவமைப்பு செய்வதன் மூலம் கூடுதல் சுட்டுமுனைகளை உருவாக்கலாம். தற்காலிக கோப்புகள், பழைய பதிவு கோப்புகள் ,தேவையற்ற சிறிய கோப்புகளை தொடர்ந்து அழித்துநினைவகத்தை சுத்தம் செய்தல் சுட்டுமுனை இல்லாமல்போவதைத் தடுக்க உதவும். du எனும் கட்டளையை அடிப்படையாகக் கொண்ட ncdu (Ncurses Disk Usage Analyzer) போன்ற கட்டளை வரி கருவிகள், ஆனால் ஒரு ஊடாடும் , பயனர் நட்புடனான இடைமுகத்துடன், பயனாளர்கள் கோப்பகங்கள் வழியாக செல்லவும், அவற்றை அதனதன் அளவுகளின் மூலம் வரிசைப்படுத்தவும், தேவையற்ற கோப்பகங்களையும் கோப்புகளையும் இடைமுகத்திலிருந்து நேரடியாக நீக்கவும் அனுமதிக்கின்றன.
சுட்டுமுனைகளை உருவாக்கி செயல்படுத்துதல்
மென்மையான இணைப்புகள்(Soft links)
ஒரு மென்மையான இணைப்பு உருவாக்கப்படும்போது, ஒரு புதிய சுட்டுமுனை பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு கோப்பு முறைமைகளில் இவ்வாறான மென்மையான இணைப்புகளை உருவாக்கலாம்.
கடினமான இணைப்புகள்(Hard link)
ஒரு கடினமான இணைப்பை உருவாக்கும் போது, அசல் கோப்பும் அதன் அனைத்து கடினமான இணைப்புகளும் ஒரே சுட்டுமுனையின் எண்ணைக் கொண்டுள்ளன, ஏனெனில் கடினமான இணைப்புகள் ஒரே தரவுக்கு ஒரு புதிய கோப்பின் பெயரை மட்டுமே வழங்குகின்றன. சுட்டுமுனைகளின் காரணமாக கடினமான இணைப்புகளை செயல்படுத்துவது சாத்தியமாகும். வெவ்வேறு கோப்பு முறைமைகளில் கடினமான இணைப்புகளை உருவாக்க இயலாமைக்கும் இதுவே காரணமாகும், இது ஒருமுரண்பட்ட சுட்டுமுனைகளின் எண்களுக்கு வழிவகுக்கும்.
சுட்டுமுனையின் ‘link count’ எனும் புலம் அதை நோக்கிச் செல்கின்ற கடினமான இணைப்புகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கிறது. ஒரேயொரு கடினமான இணைப்பை மட்டும் நீக்குவது இணைப்பு எண்ணிக்கையைக் குறைக்கிறது. அனைத்து கடினமான இணைப்புகளும் அகற்றப்படும் வரை கோப்பின்த் தரவு நீக்கப்படாது, மேலும் இணைப்பின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடையும் வரை. அசல் கோப்பு மறுபெயரிடப்பட்டாலும் அல்லது ஒரே கோப்பு முறைமைக்குள் நகர்த்தப்பட்டாலும் கடினமான இணைப்புகள் செல்லுபடியாகும், ஏனெனில் அவை ஒரு பாதையை விட சுட்டுமுனையின்எண்ணை நேரடியாகக் குறிப்பிடுகின்றன.
சுட்டுமுனைகளின் விண்டோவின் பதிப்பு
சுட்டுமுனைகள் UNIX போன்ற கோப்பு முறைமைகளுக்கு தனித்துவமானவை. கோப்பு விவரங்களைக் கண்காணிக்க விண்டோஇயக்கமுறைமையின் புதிய தொழில்நுட்ப கோப்பு முறைமை (NTFS ) ஆனது ஒரு முதன்மை கோப்பு அட்டவணையை (MFT) பயன்படுத்திகொள்கிறது. MFT என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பாகும், இது NTFS தொகுதியில் உள்ள அனைத்து கோப்புகளின், கோப்புறைகளின் பதிவுகளைக் கொண்டுள்ளது.
MFT ஆனது ஒரு சுட்டுமுனையின் அட்டவணை, கோப்பக அமைப்பு ஆகியவற்றினை ஒருங்கிணைக்கிறது. சுட்டுமுனைகளைப் போன்றில்லாமல், MFT ஆனது கோப்பின் சில மீப்பெரும்தரவை தரவுக்கான சுட்டிகளுடன் நேரடியாக MFT உள்ளீட்டிற்குள் சேமிக்கிறது. இது சிறிய கோப்புகளுக்கு NTFS ஐ விரைவுப் படுத்தலாம்; இருப்பினும், காலப்போக்கில் MFTஆனது துண்டு துண்டாக மாறக்கூடும். NTFS இன்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கோப்பையும் கோப்புறையையும பற்றிய தகவலை MFT சேமிக்கிறது. இதில் அளவு, நேர முத்திரைகள், அதை யார் அணுகலாம்,தரவு எங்கு சேமிக்கப்படுகிறது ஆகிய விவரங்கள் உள்ளடக்கமாக இருக்கும்.
சிறிய கோப்புகள், கோப்பகங்களின் உள்ளடக்கங்களை (512 பைட்டுகள் அல்லது அதற்கும் குறைவானது) நேரடியாக MFTஇன்உள்ளீட்டிற்குள் சேமிக்க முடியும். இது கூடுதலான நினைவக வட்டில் படிப்பதற்கான தேவையைக் குறைக்கிறது, சிறிய கோப்புகளை அணுகுவதற்கு சுட்டுமுனை அடிப்படையிலான அமைப்புகளை விட NTFS ஐ விரைவாக்குகிறது.
புதிய கோப்பு முறைமைகளில் சுட்டுமுனைகளை செயல்படுத்துதல்
இயக்கநேர சுட்டுமுனை ஒதுக்கீடு
XFS, ZFS, btrfs , APFS போன்ற நவீன கோப்பு முறைமைகள் நிலையான அளவு சுட்டுமுனையின் அட்டவணைகளிலிருந்து விலகிவிட்டன. அதற்கு பதிலாக, அவை தேவைக்கேற்ப சுட்டுமுனைகளை உருவாக்க அனுமதிக்கின்ற இயக்கநேர ஒதுக்கீடு வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இது சுட்டுமுனைகள் தீர்ந்துபோகும் அபாயத்தை அறவே நீக்குகிறது , மாறுபட்ட கோப்பு அளவுகளையும் பயன்பாட்டு முறைகளையும் கையாள அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
நீட்டிக்கப்பட்ட மீப்பெரும் தரவு
நவீன கோப்பு முறைமைகள் சுட்டுமுனைகள் அல்லது அதற்கு சமமான கட்டமைப்புகளுக்குள் கூடுதல் மீப்பெரும்தரவைச் சேமிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ZFS ஆனது தரவு ஒருமைப்பாட்டிற்கான சரிபார்ப்புகூட்டுத் தொகைகளை(checksums) உள்ளடக்கியது, அதே நேரத்தில் btrfs ஆனது திரைபடபிடிப்புகள், cloning, , சுருக்கம் , நகல் நீக்கம் போன்ற மேம்பட்ட இயல்புகளை ஆதரிக்கிறது.
உள்ளமைவுசெய்தல்(Inlining)
சில புதிய கோப்பு முறைமைகள் (எ.கா., XFS) உள்ளமைவை(Inlining) ஆதரிக்கின்றன, அங்கு சிறிய கோப்பின் தரவு நேரடியாக சுட்டுமுனையில் சேமிக்கப்படுகிறது. உள்ளமைவில் சிறிய கோப்புகள் தனித்தனி தரவுத் தொகுதிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றின் தரவை நேரடியாக அவற்றின் சுட்டுமுனையில் சேமிக்க அனுமதிக்கிறது. இது நினைவகவட்டின் I/O ஐக் குறைத்து சிறிய கோப்புகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது. கூடுதல் தரவுத் தொகுதிகள் ஒதுக்கப்படாததால், உள்ளமைவில் கோப்புகளுக்கு துண்டு துண்டாகக் குறைக்கப்படுகிறது, இதனால் அணுகுதல் விரைவாகவும் திறமையாகவும் இருக்கும். சிறியதாகத் தொடங்கும் ஆனால் காலப்போக்கில் பெரிதாக வளரும் கோப்புகளுக்கு, உள்ளமைவு அமைப்புகள் தேவைக்கேற்ப சுட்டுமுனையிலிருந்து தரவை தனித்தனி தரவுத் தொகுதிகளாக மாறும். ஒரு சுட்டுமுனைக்குள் இடக் கட்டுப்பாடுகள் இருப்பதால், மிகச் சிறிய கோப்புகள் மட்டுமே உள்ளமைவிலிருந்து பயனடைய முடியும்.
பெரிய கோப்பு முறைமைகள் , 64-பிட் சுட்டுமுனையின் எண்கள்
அதிக கோப்புகளைக் கொண்ட பெரிய கோப்பு முறைமைகளை ஆதரிக்க, சில நவீன அமைப்புகள் பாரம்பரிய 32-பிட் எண்களுக்குப் பதிலாக புதிய 64-பிட் சுட்டுமுனை எண்களைப் பயன்படுத்திகொள்கின்றன. இது சுட்டுமுனைகளின் எண்ணிக்கையின் தத்துவார்த்த வரம்பை விரிவுபடுத்துகிறது. சில நவீன கோப்பு முறைமைகள் பில்லியன் கணக்கான கோப்புகளுடன் மிகப்பெரிய சேமிப்பக திறன்களைக் கையாளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, XFS ஆனது exabytesஅளவு சேமிப்பை ஆதரிக்க முடியும் , ZFS ஆனது petabytes அளவு தரவை நிர்வகிக்க முடியும்.
Vnodes என்பதைப் பயன்படுத்தி மெய்நிகர் கோப்பு முறைமைகளுடன் ஒருங்கிணைப்பு
BSD அல்லது Linux இலிருந்து பெறப்பட்ட புதிய இயக்க முறைமைகளில், சுட்டுமுனைகள் ‘மெய்நிகர் முனைகள்’ (‘vnodes’) ஆக சுருக்கப்படுகின்றன. வகைப்பாட்டு சுட்டுமுனைகளுடன் பின்தங்கிய இணக்கத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு, வெவ்வேறு கோப்பு முறைமைகளை ஆதரிக்கின்ற கோப்பு மேலாண்மைக்கு Vnodes ஆனவை ஒரு ஒருங்கிணைந்த இடைமுகத்தை வழங்குகின்றன.
கோப்பு முறைமைகளையும் அவற்றின் கட்டமைப்புகளையும் பற்றி அறிய விரும்பினால் அதனை தொடங்குவதற்கு சுட்டுமுனைகள் ஒரு சிறந்த புள்ளியாகும். தரவு அலகுகளின் வகைப்படுத்தல் , அட்டவணைப்படுத்தலைப் புரிந்துகொள்வது நிர்வாகிகள் திறன்மிகு பயனாளர்களுக்கு மிகமுக்கியமாகும். இந்த பரந்த கண்ணோட்டம் சுட்டுமுனைகளைப் பற்றிய அடிப்படை புரிதலை வழங்கும் . கோப்பு முறைமைகளைப் பற்றி மேலும் அறிய, debugfs போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்க, இது ஒரு கோப்பு முறைமையின் மீப்பெரும்தரவை நேரடியாக ஆராய உதவும். முனைய அடிப்படையிலான கருவிகளுடன் பரிசோதனை செய்வது கோப்பு மேலாண்மை பற்றிய நமது புரிதலை வலுப்படுத்துகின்றது. இந்தக் கருத்துகளைக் கற்றுக்கொள்வது Linux பயனர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உதவக்கூடும்.