செய்யறிவை(AI) அதிக முயற்சிஇல்லாமல்எளிதாக கற்றுக்கொள்வதுஎவ்வாறு

புதிதாக செய்யறிவை(AI) கற்றுக்கொள்வது என்பது அதிகநேரத்தை எடுத்துக்கொள்வதுமட்டுமல்லாமல் சவாலானதாகவும் உள்ளது. அதற்கான மாதிரியை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், நிரலாக்கம், தருக்கங்கள், இயந்திர கற்றல், தரவைக் கையாளும் பல்வேறு வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இருப்பினும், இதோ ஒரு நல்ல செய்தி: இதற்காக கணினியின் பயன்பாட்டில் நாம் ஒரு மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது செய்யறி(AI)வின் அடிப்படைகளில் தேர்ச்சி பெற சிக்கலான கோட்பாடுகளைப் படிக்க எண்ணற்ற மணிநேரம் செலவிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அதிகமுயற்சி செய்திடாமலேயே அதனை கற்றறிந்தவரை அரவணைத்து, நம்முடைய நேரத்தையும் சக்தியையும் திறமையாக கையாளுவதில் அதிககவனம் செலுத்திடுக. நினைவில் கொள்க, சோம்பேறியாக இருப்பது பயனற்றது என்று அர்த்தமன்று. எப்படி கற்றுக் கொள்கிறீர்கள் என்பதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாகும்.செய்யறிவை(AI) எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதற்கான வழிமுறை பின்வருமாறு.

1. குறிமுறைவரிகளற்றற(No-Code) செய்யறிவு(AI) கருவிகளுடன் தொடங்கிடுக

தற்போதைய நிலையில் குறிமுறைவரிகளுடன் புதிதாக தொடங்குவதை மறந்து விடுக. Ollama, Jan, Stability Diffusion UI, n8n அல்லது FlowiseAI போன்ற குறிமுறைவரிகள் இல்லாத செய்யறிவு(AI) கருவிகளைப் பயன்படுத்தி நம்முடைய செய்யறிவு(AI) பயணத்தைத் தொடங்கலாம். இந்த இயங்குதளங்களில்நாம் எந்த குறிமுறைவரிகளையும் எழுதாமல் இவைசெய்யறிவு(AI) மாதிரிகளுடன் பரிசோதனை செய்ய நம்மை அனுமதிக்கின்றன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, செய்யறிவின்(AI) அடிப்படைகளை விரைவாகப் புரிந்துகொள்க நம்முடைய செயலிற்கான உடனடி முடிவுகளை திரையில் காணலாம். இந்த அணுகுமுறை முடிவில்லாத குறிமுறைவரிகளின் மூலம் போராடுவது, இயந்திர கற்றல் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வது தரவை எவ்வாறு செயலாக்குவது என்பதைக் கண்டுபிடிப்பதை விட மிகவும் எளிதானதாக மனதிருப்தி அளிக்க்செய்கிறது.

2. YouTube ஐப் பார்வையிடுக

நம்பினாலும் நம்பாவிட்டாலும், செய்யறிவை(AI) கற்க YouTube ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கின்றது. எண்ணற்ற செய்யறிவு(AI) பயிற்சிகள், விரிவுரைகள் , விவாதங்கள் ஆகியவை YouTube இல் கட்டணமில்லாமல் கிடைக்கின்றன. “3Blue1Brown,” “Sentdex,” , “Two Minute Papers” போன்ற அலைவரிசைகள் மிகவும் சிக்கலான தலைப்புகளை நமக்காக சிறுசிறு துண்டுகளாக உடைக்கின்றன. கூடுதலாக, நாம்நம்முடைய சொந்த வேகத்திலேயே கற்றுக்கொள்ளலாம், இடைநிறுத்தம் செய்து தேவைக்கேற்ப மீண்டும் இயக்கலாம். எனவே, கொஞ்சம் பாப்கார்னை கைகளில் வைத்துகொண்டே, வேடிக்கையாக தகவல் தரும் கானொளிகாட்சிகளை காணத்தொடங்கிடுக, .

3. ஊடாடும் கற்றல் தளங்களைப் பயன்படுத்திடுக

Codecademy, DataCamp, அல்லது Coursera போன்ற ஊடாடும் தளங்கள் கற்றல் செயல்முறையின் மூலம் நமக்கு வழிகாட்டுகின்ற செய்யறிவு(AI) படிப்புகளை வழங்குகின்றன. இந்த தளங்கள் பெரும்பாலும் கற்றலை வேடிக்கையாகவும் ஈடுபாட்டுடனும் செய்ய gamification பயன்படுத்துகின்றன. நாம் எவ்வளவு கற்றுக்கொள்கின்றோம் என்பதை உணராமல், சிக்கல்களைத் தீர்ப்பதையும் செயல்திட்டங்களை உருவாக்குவதையும் நாம் காணலாம். கூடுதலாக, அவைகள் பெரும்பாலும் சான்றிதழ்களை வழங்குகின்றன, அதை பெருமையுடன் நம்முடைய LinkedIn எனும் சுயவிவரத்தில் காண்பிக்கலாம்.

4. சிறியசெயல்திட்டங்களை உருவாக்குவதன் மூலம் கற்றுக் கொள்க

செய்யறிவை(AI) கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி அதை செயற்படுத்திடுவதுதான். நமக்கு விருப்பமான சிறிய, நிர்வகிக்கக்கூடிய செயல்திட்டங்களுடன் தொடங்கிடுக. இது எளிய chatbot முதல் அடிப்படை உருவப்பட வகைப்படுத்தி வரை எதுவானதாகவும் இருக்கலாம். செயல்திட்டப்பணிகளை உருவாக்குவது, நடைமுறையில் உள்ள இயந்திரக் கற்றல் கருத்துகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது, மேலும் உறுதியான முடிவுகளைப் காணும்போது கற்றுக்கொள்ள அதிக உந்துதல் பெற்றிடுவோம். நினைவில்கொள்க, அடுத்த GPT-4o நாமே உருவாக்கத் தேவையில்லை செயல்படுகின்ற ஒன்றை உருவாக்குவதில் மட்டும்கவனம் செலுத்திடுக.

5. தருக்கங்ளுக்கு பதில் அதன்செய்யறிவு(AI) பயன்பாடுகளை உருவாக்கு வதில் மட்டும் அதிககவனம் செலுத்திடுக

நாம் ஒரு தரவு அறிவியலாளர் அல்லது இயந்திர கற்றல் பொறியாளர் ஆக திட்டமிட்டுள்ளோம் எனில், சிக்கலான தருக்கங்களில் தேர்ச்சி பெற வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, நடப்புஉலக பிரச்சனைகளை தீர்க்கும் செய்யறிவு(AI) பயன்பாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திட்டாால் போதுமானதாகும். செய்யறிவின்(AI) தீர்வுகளைச் செயல்படுத்த, தற்போதுள்ள நூலகங்கள் , Transformers, PyTorch, , Keras போன்ற வரைச்சட்டங்களைப் பயன்படுத்திடுக. இந்த அணுகுமுறையின் வாயிலாக செய்யறிவு(AI) ஆய்வாளர்களின் கடின உழைப்பைப் பயன்படுத்திகொள்க, புதியதாக சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்காமல் நம்மை அனுமதிக்கின்ற ஏற்கனவே உள்ள நடைமுறை பயன்பாட்டு நிகழ்வுகளில் அதனை பயன்படுத்திடுக

6. “Copy-Paste” அணுகுமுறையைத் தழுவிடுக

குறிமுறைவரிகளை நகலெடுத்து ஒட்ட தயங்க வேண்டாம். GitHub , Kaggle போன்ற இணையதளங்கள் செய்யறிவின்(AI)செயல் திட்டங்களுக்கான, குறிமுறைவரிகளின் துணுக்குகளின் புதையல்களாகும். நமக்கான குறிமுறைவரிகளை உருவாக்க ChatGPT, பிற உருவாக்குகின்ற செய்யறிவு(AI) மாதிரிகளைகோரலாம்; அதை நகலெடுத்து நம்முடைய செயல்திட்டத்தில் ஒட்டிடுக. செய்யறிவு(AI) பயன்பாடுகளை உருவாக்க இவ்வாறான செய்யறிவு(AI) மாதிரிகளைப் பயன்படுத்த தயங்கிட வேண்டாம். பயன்பாடுகளை, சேவைகளை உருவாக்க Google கூட செய்யறிவு(AI) குறிமுறைவரிகளை உருவாக்க மாதிரிகளைப் பயன்படுத்தி கொள்கிறது. காலப்போக்கில், நம்முடைய தேவைகளுக்கு ஏற்றவாறு குறிமுறைவரிகளை நாமே மாற்றவும் மேம்படுத்தவும் தொடங்கிடுவோம், இது படிப்படியாக நம்முடைய புரிதலை ஆழப்படுத்திடுகின்றது.

7. செய்யறிவு(AI) சமூககுழுக்களில் இணைந்திடுக

செய்யறிவு(AI) மன்றங்கள் , Reddit இன் r/MachineLearning, LinkedIn இல் உள்ள செய்யறிவு(AI) குழுக்கள் அல்லது Discord அலைவரிசைகள் போன்ற சமூககுழுக்களில் இணைவதன் மூலம் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் நம்மைச் சுற்றி வைத்திடுக. இந்தச் சமூககுழுக்கள் கேள்விகளைக் கேட்பதற்கும், செயல்திட்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், சமீபத்திய செய்யறிவின்(AI) போக்குகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் சிறந்தவை. கூடுதலாக, இவ்வாறான குழுக்களில் ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கக்கூடிய ஏராளமான சக தோழர்களையும் இக்குழுக்களில் காணலாம்.

முடிவாக:செய்யறிவை(AI) கற்றல் என்பதுமுழுநேர பணியாக இருக்க வேண்டியதில்லை. நடைமுறை பயன்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், ஏற்கனவே உள்ள கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், போதுமான கோட்பாட்டைக் கற்றுக்கொள்வதன் மூலமும், நம்மை நாமே வருத்திடாமல் செய்யறிவில்(AI) தேர்ச்சி பெறலாம். செய்யறிவை(AI) திறம்பட பயன்படுத்துவதே குறிக்கோளாகும், ஒரு கோட்பாட்டு ஆய்வாளராக மாறுவது அன்று

%d bloggers like this: