நடப்பு 2024 ஆம் ஆண்டில் உருவாக்க செயற்கை நுண்ணறிவு(Generative Artificial Intelligence(GenAI)) என்பதே பொதுமக்களால் தொடர்ந்து பேசப்படும் சொல்லாக இருந்துவரும், மேலும் நிறுவனங்கள் திறமூல தீர்வுகளை அடையும் போது, அவை உள்ளக திறமூல நிரலாக்கத்தினை நோக்கி திரும்பும்.
தற்போதைய தொழில்நுட்பத்தின் மிகவிரைவானபுதிய பதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியானது அடுத்து எதை பயன்படுத்துவது என முடிவுசெய்ய முடியாதவாறு மூச்சடைக்கக் கூடியதாக உள்ளது, மேலும் மென்பொருள் உள்கட்டமைப்பு, இயந்திர கற்றல் (AI உட்பட),தரவு தளங்களில் வெளிவரும் பல்வேறு திறமூல தொழில் நுட்பங்களுடன் இந்த 2024ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமூல தளத்தின் நிலையான பரிணாமம் நிறுவுகைசெய்யப்பட்ட விதிமுறைகளை சீர்குலைக்கும், புதிய சாத்தியக்கூறுகளைஉருவாக்கக்கூடும்.
உருவாக்க செநு(GenAI) என்பது பொதுமக்களால் பேசப்படுகின்ற கடந்த 2023 ஆண்டின் மிகமுக்கிய சொல்லாக இருந்தது, அது இந்த ஆண்டும் தொடரும் என்று உறுதியளிக்கப்படுகின்றது. இருப்பினும், எல்லாபுதிய கண்டு பிடிப்பையும் போன்றே, இது அனைத்து தொழில்துறைகளுடன் இணைந்து உருவாகி புதியவடிவம் பெறப் போகிறது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு துறையில் உள்ள மேம்படுத்துநரும், மென்பொருள் மதிப்பை விரைவாகவும் நம்பகத் தன்மையுடனும் வழங்குவதற்கான திறனை மேம்படுத்த சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பரிசோதனை செய்ய எப்போதும் ஆர்வமாக உள்ளனர். திற மூல தொழில்நுட்பங்கள் நன்றாக செயல்படுவது ஆச்சரியமாக இருந்தாலும், அவை அனைத்து தொழில்துறைகளிலுமுள்ள வணிகநிறுவனங்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அனைத்து தொழில்துறைகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளிலும் அதிககவனம் செலுத்துகின்றது.
தொழில்துறைகளின் போக்குகள்
‘குறைவானது என்பதைவிட அதிகமானது என்பதே சிறந்ததாகும்’ என்பதுதான் பொதுவாக அனைத்து வணிகநிறுவனங்களின் தாரக மந்திரமாகும். தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருவதால், நிறுவனங்கள் தங்களுடைய தொழில்துறையில் தனித்துவமான ,எங்கும் காணக்கூடிய தீர்வுகளுடன் தங்களுடைய வசதிகளை மேம்படுத்தவே விரும்புகின்றன. கடந்த பத்தாண்டில் மேககணினியின் வளர்ச்சியானது திறன்மிகு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வதில் நிறுவனங்களுக்கு வசதியாக இருந்துவருகின்றது. இந்த மாற்றம், இதுவரை கண்டிராத வேகத்தில் திற மூலத்தை மேம்படுத்துகின்ற பயன்பாடுகளை உருவாக்க துவக்கநிலை நிறுவனங்களை மேம்படுத்தியுள்ளது. உடல்நலம், பொருட்களின் உற்பத்தி, சில்லறை வணிகம், நிதிநிருவாகம், போக்குவரத்து, மின்னாற்றல், ஊடகம், பாதுகாப்பு, அரசின்நிருவாகம் , வேளாண்மை ஆகியவற்றில் புதிய போக்குகளை கொண்டுவருகிறது. எந்த முன்னறிவிப்பும் போன்றே, இது கடந்த சில ஆண்டுகளில் சிறந்த வணிக கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கின்ற முயற்சியாகும்.
பல்வேறுதொழில்துறைகள் தங்களின் பிரிச்சினைகளுக்கு இந்த AIஐமுக்கியமான தீர்வாக ஏற்றுக்கொள்கின்றன. சுகாதாரப் பாதுகாப்பில் உடல்நலபாதுகாப்பில் இயந்தர மனிதர்களின் பயன்பாடானது, துல்லியமான அறுவை சிகிச்சைகள், தொலைதூர நோயாளிக்கான சிகிச்சைகள்,ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது வேளாண்மையில், AI உடன் பயிர், கால்நடை ஆகியவற்றின் கண்காணிப்புக்கான கணினியின் பார்வையை நோக்கி தள்ளுகிறது. தொழில்துறை சார்ந்த தீர்வுகள் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அடிப்படை தேவையான மனிதவளநிருவாகம்(HR),விற்பனை, சந்தைப்படுத்தல், மட்டுமல்லாமல் வணிகநிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளுடனும் தொடர்புடைய தொழில்நுட்ப தீர்வுகளும் அதிகரித்துகொண்டே வருகின்றன. உருவாக்கAI, IoT, மேககணினி, 5G ஆகியவற்றுடன் கூடிய புதிய சாத்தியக்கூறுகள், நிறுவனங்களில் தன்னியக்கத்தையும் திறன்களையும் புதிய உயரத்திற்கு கொண்டுசெல்லுகின்றன.
தொழில்நுட்பத்தின் போக்குகள்
இந்த 2024 ஆண்டில், GenAI ஆனது அனைத்து தொழில்துறைகளிலும் தொழில்நுட்ப போக்குகளில் முன்னணியில் இருக்கும் என்று உறுதியளிக்கிறது. கார்ட்னர்என்பவர் இந்த2024 ஆம் ஆண்டில் AI ஆனது மிக முன்னோடியாக இருக்கும் என்று கணித்துள்ளார், இது பரிசோதனைக்கு அப்பால் செயலாக்கங்களை நோக்கி நகர்கிறது. மற்ற புதிய தொழில்நுட்பங்களைப் போன்றே, GenAI ஆனது, நிர்வகிக்கக்கூடிய அபாயங்களுடன் வணிக மதிப்பை உருவாக்கக்கூடிய பாதுகாப்பான , நம்பகமான தொழில்நுட்பமாக தன்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. 2024ஆண்டும் அதற்குப் பிறகும் AI-ஐ ஏற்றுக்கொள்வதை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டுவருவதால், பல ஆளுகை மாதிரிகளும் கட்டமைப்புகளும் உருவாகி வருகின்றன.
இந்த AI இன்போக்கு முன்னணியில் இருந்தாலும், மற்ற தொழில்நுட்பங்களும் பிரபலமாக உள்ளன, முக்கியமாக மேககணினி உட்பட SaaS தளபகுதியில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களின் பாதுகாப்பைப் பொறுத்து. நிறுவனங்கள் எப்போதும் தங்கள் முக்கிய வணிகத்திற்கு மதிப்பு சேர்க்க அதிகமுதலீடு செய்து வருகின்றன. எவ்வாறாயினும், பல சேவை வழங்குநர்கள் முழுவதும் பரவி வளர்ந்து வரும் தரவை நிர்வகிப்பதற்கான அதிகரித்த சிக்கல்களின் பாதுகாப்பில் முதலீடு செய்வதற்கும் தொழில்நுட்பத்தை நிலையான முறையில் ஏற்றுக்கொள்வதற்கும் புதியஅழைப்பை விடுகின்றன.
விர்ச்சுவல் ரியாலிட்டி ( Virtual reality (VR)) , ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented reality (AR)) ஆகியவை குறித்த செய்திகள் மீண்டும் தற்போது அடிக்கடி வருகின்றன, இவை அன்றாட பயன்பாட்டு நிகழ்வுகளை மேம்படுத்தும் புதுமைகளுடன் வேகம் பெறுகின்றன. எவ்வாறாயினும், இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியள்ளது, மிக முக்கியமாக, ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பமாக AR/VR ஐத் துவங்க பெரிய வாடிக்கையாளர்களின் தளத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
திறமூல தொழில்நுட்பத்தின் போக்குகள்
துடிப்பான திறமூலசூழல் அமைப்பு தொடர்ந்து உருவாகி வளர்ந்துவருகிறது. பல தொழில்நுட்பத்தின் போக்குகள் 2024 ஆம் ஆண்டில் முதன்மை நிலைக்கு வரவிரக்கின்றன, அவற்றில் சில ஏற்கனவே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன, மற்றவை இன்னும் செயல்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இந்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருந்தாலும், ஒன்று நிச்சயம் – வலுவான திறமூல சமூகம் அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் தேவையான மதிப்பினை கண்டிப்பாக சேர்க்கும்.
பரவலாக்கப்பட்ட இணையம், குவாண்டம் கணினி, தரவு அறிவியல் , இணையதள மேம்பாடு ஆகியவற்றில் AI ஆனது முன்னணியான கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது.
2024 இல் திறமூல தொழில்நுட்பத்தின் போக்குகள்
ஒட்டுமொத்தத்தில், 2024 ஆம் ஆண்டு AI இன் வளர்ச்சி , தத்தெடுப்பு, தொடர்ச்சியான எண்ணிம மயமாக்கல், மேககணினி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்ற ஆண்டாக இருக்கும். தொழில்நுட்பத்தைப் பொருட்படுத்தாமல், திறமூலமானது அதன் தத்தெடுப்பை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மென்பொருள் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட தொழில்துறை தலைவர்கள், தாமே முயன்று திறமூல நிரலாக்கங்களை உருவாக்கத் துவங்கும் அளவிற்கு திறமூலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
திற மூல நிரலாக்க அலுவலகம் (Open source program office (OSPO))
இது ஒரு புதியதான கண்டுபிடிப்பு அன்று . இது தற்போதைய நடைமுறைபயன்பாட்டில் இருந்துவருகின்றது! என்பதே உண்மையான களநிலவர மாகும் திறமூல நிரலாக்க அலுவலகம் (OSPO) ஆனது அதிகாரப்பூர்வமாக தலைமை திறமூல அலுவலர் (open source officer (COSO).) போன்ற தலைமைப் பாத்திரத்தைக் கொண்ட ஒரு குழு ஆகும். திறமூல கண்டுபிடிப்புகளின் வேகம் காரணமாக, நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றினை உருவாக்க தொழில்துறையானது மென்பொருள் நிறுவனங்களுக்காக காத்திருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளன, குறிப்பாக நாளைய வாய்ப்புகளுக்கான முன்னோடி தீர்வுகளின் மூலம் தொழில்துறையை வழிநடத்த ஆர்வமாக இருக்கின்ற அனைத்து நிறுவனங்களும் இதனை உணர்ந்துள்ளனஎன்பதே உண்மையான களநிலவரமாகும் . OSPO என்பது ஒரு நிறுவனத்தில் திறமூலக் கொள்கைகள், தீர்வுகள், நடைமுறைகளை புதியவழிமுறையில் செயல்படுத்துவதற்கு பொறுப்பான ஒரு குறுக்குவெட்டான-செயல்பாட்டு குழுவாகும். திறமுல மென்பொருள் பயன்பாட்டுடன் தொடர்புடைய பலன்களை அதிகப்படுத்தும் போது அபாயங்களை தவிர்க்க இது உதவுகிறது. திறமூல மென்பொருளானவை நிறுவனங்கள் அதிக வளர்ச்சியை அடைய உதவுகிறது என்பது வரவேற்கத்தக்க அறிகுறியாகும், இது கட்டணமின்றிப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி கூடுதலாக பல்வேறு மதிப்புகளையும் நிறுவனத்தி்ற்கு சேர்க்கிறது என்பதேஅதன் பிரபலத்திற்கு அடிப்படையாகும்.
AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், நிறுவன அமைப்புகள் முழுவதும் உட்பொதிக்கப்பட்ட கண்காணிப்பு, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை , பாதுகாப்பு ஆகியவற்றில் புகழ்பெற அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அனைத்து செய்திகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக இந்த 2024 ஆண்டு இருக்கும் என உறுதியளிக்கிறது. AI, IoT, மேககணினி, 5G ஆகியவற்றை செயல்படுத்துவதில் எண்ணிம மயமாக்கலும் மேககணினியும் தொடர்ந்து முக்கியமானவைகளாக இருக்கும். 2024 ஆம்ஆண்டு முடிவடையும் போது, செயல்திறனில் அதிககவனம் செலுத்துவது மேலும் தன்னியக்கமயமாக்கலுக்கு வழிவகுக்கும் , ஒரு பெரியதாக்கப்பட்ட எண்ணிம பணியிடம் முதன்மையான நிலையை கொண்டிருக்கும் என்பது திண்ணம்.