துவக்கநிலையாளர்களுக்கான சிறந்த லினக்ஸ் வெளியீடுகள்

பிரபலமான கருத்துக்கு மாறாக, லினக்ஸ் என்பது ஒரு இயக்க முறைமையாகும், இந்த இயக்கமுறைமைகளை விரும்பும் எவரும் பயன்படுத்த முடியும். அதாவது, உபுண்டு லினக்ஸைப் பயன்படுத்துவது எவ்வாறு என 79 வயதுடையவர்கூட கற்றறிந்துகொண்டு பயன்படுத்ததுவங்கிடமுடியும், இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென குறிப்பிட்ட ஒரு மொழி தெரிந்திருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடு எதுவுமில்லை.
நாம் பயன்படுத்த துவங்குவதற்கான சிறந்த லினக்ஸ் வெளியீட்டினைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான பிரச்சனையாகும். லினக்ஸில் நாம் தேர்வு செய்வதற்காக நூற்றுக்கணக்கான லினக்ஸ் வெளியீடுகள் உள்ளன. அவற்றுள் Gentoo ,Linux From Scratch, போன்ற சில பயன்படுத்த கடினமானவைகளாக உள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை எளிதானவை.
பாமரனும் சரியான பாதையில் செல்வதற்காக பயனத்தை துவங்கக்கூடிய லினக்ஸின் பதிப்பைத் தேர்வுசெய்ய இந்த கட்டுரை உதவக்கூடும், எனவே லினக்ஸின் பயனம் முடிந்தவரை எளிதானது மட்டுமல்ல, வேடிக்கையானது, நம்பகமானது பாதுகாப்பானது. இந்த பதிப்புகள் அனைத்தும் நன்கு பரிசோதித்து சரிபார்க்கப்பட்டவைகளாகும்,
இதுவரையில் விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திவந்ததால் சோர்வடைந்த துவக்கநிலையாளர்களுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த லினக்ஸ் வெளியீடுகள் பின்வருமாறு

1. Mint லினக்ஸ் எனும் இயக்கமுறைமை
இது ஒட்டுமொத்தமாக துவக்கநிலையாளர்களின் சிறந்த லினக்ஸ் வெளியீடாகும்.மேலும் துவக்கநிலையாளர்களின் சிறந்த லினக்ஸ் விநியோகத்திற்கான தேர்வு Linux Mint ஆகும், ஏனெனில் அதன் இடைமுகம் பயன்படுத்த எளிதானது, மேலும் அனைத்து லினக்ஸின் வெளியீடு போன்று இது நமக்கு ஒரு காசு கூட செலவு வைக்காதது. ஒரு லினக்ஸ் பயனராக இருந்தால் மேசைக்கணினியிலிருந்து நமக்கு தேவையான அனைத்து வசதிவாய்ப்புகளையும் இது வழங்குகிறதுஎன அறிந்து கொள்ளலாம்.

படம்-1
நன்மைகள்
• இது கட்டற்றது கட்டணமற்றது
• விண்டோஇயக்கமுறைமை போன்ற இடைமுகம் கொண்டது
• சிறந்த மென்பொருள் நிறுவுகைசெய்திடுகின்ற நிரலாக்கத்தை கொண்டுள்ளது
தீமைகள்
• தனியுரிமை இயக்கிகள் (Nvidia, ATI, முதலியன) சேர்க்கப்படவில்லை, ஆனால் அவற்றை மேலாளர் மூலம் இயக்கி எளிதாக நிறுவுகை செய்திடலாம்
• Snap ஆதரவுடன் வரவில்லை, ஆனால் தேவையெனில்அதைச் சேர்க்கலாம்
லினக்ஸ் Mint வசதிவாய்ப்புகள்: இதனுடைய உருவாக்கமையம் 5.15 ஆகும் இது ஒரு திற மூல இயக்கமுறைமையாகும்
விண்டோ இயக்கமுறைமையில் சோர்வாக உள்ளதெனில்Linux Mint க்கு திரும்பிடுக, குறிப்பாக,Cinnamonஇன் இடைமுகத்தைப் பயன்படுத்தும் பதிப்பு. மேலும் தற்போது Mint 21.3 எனும் பதிப்பு வெளியிடப்பெற்றுள்ளது, ஆனால் துவக்கநிலையில் இருப்பவர்களுக்கும் கூட இதனைப் பரிந்துரைக்கபபடுகின்றது.
Cinnamon போன்ற பல மேசைக்கணினி சூழல்களைக் கொண்ட Linux Mintஆனது, Windows XP அல்லது Windows 7 போன்று தோற்றமளிக்கிறது. இது Windows Icon, Menu , Pointer (WIMP) இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது, இது நமக்கு ஏற்கனவே தெரிந்த நாம் விரும்பிய விண்டோவைப் போன்றது. பொதுவாக WindowsXP , Windows 7 ஆகியவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாது, ஆனால் பெரும்பாலான Windows பயனர்கள் Cinnamonஐ ஒரு வசதியான பொருத்தமாக கருதுவார்கள். GNOME 2.x பாணி இடைமுகத்துடன் வளர்ந்த லினக்ஸ் பயனர்களும்Cinnamonஐ விரும்புவார்கள், ஏனெனில் அது வகைபடுத்தப்பட்ட லினக்ஸின் இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டது.
எல்லா லினக்ஸ் மேசைக்கணினிக்கானவெளியீடுகளைப் போன்றே, Linux Mint உம் ஒரு இயங்குதளத்தை விட அதிகவசதிகொண்டது — இது நமக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களுடனும் வருகிறது. அலுவலகபயன்பாட்டிற்காக LibreOffice 7.3.7, மின்னஞ்சல், நாட்காட்டிக்கு Thunderbird 115.16.0, வரைகலை பயன்பாட்டிற்காக GIMP 2.10.30 இணைய உலாவலுக்கு Firefox 121.0.1 என்பனபோன்ற பல்வேறு பயன்பாடுகளடன் இது கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் linuxmint.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

2.Chrome OS எனும் லினக்ஸின் இயக்கமுறைமை

படம்-2
நன்மைகள்
• கட்டற்றது கட்டணமற்றது
• பயன்படுத்த எளிதானது
• Chromebooks இலிருந்து தனித்தனியாக வழங்கப்படுகிறது
• 2007 முதல் தனிப்பட்ட கணினிகளுடன்(PC) இணக்கமானது
தீமைகள்
• இதில்overclocking CPUகள் அல்லது GPUகளுக்கு ஆதரவு இல்லை
இது Gentoo Linux ஐ போன்றது
நாம் எல்லாவற்றுக்கும் இணையத்தைப் பயன்படுத்துகின்றோமா? Google ஆவணத்தில் எழுதுகின்றோமா, தனிப்பட்ட நிதிபரிமாற்ற கட்டுப்பாட்டிற்காக NerdWallet ஐப் பயன்படுத்துகின்றோமா மின்னஞ்சலுக்கு Gmail ஐப் பயன்படுத்திடு கின்றோமா? அனைத்திற்கும் ஆம் எனில், நமக்குத் தேவையானது Chromebook அல்லது Windows ஐ ChromeOSஇன் Flex உடன் மாற்ற வேண்டும்.
இந்நிலையில் ChromeOS, ஆனது Linux ஆக இருக்காது என அதன் தோற்றத்தினை கொண்டு நாம் தவறாக முடிவெடுத்திடுவோம், உண்மையில் அதன் Chrome இணைய உலாவி இடைமுகத்தின் கீழ், ChromeOS என்பது Linuxதான் என்ற செய்தியை அறிந்துகொள்க. Chrome OS என்பது Chromebooks ஐ இயக்குகின்ற இயக்க முறைமையாகும் இது Gentoo ஐ அடிப்படையாகக் கொண்டது, இது நிபுணர்களுக்கு மட்டுமேயான Linux ஆகும். நல்ல செய்தி என்னவென்றால், Gentooஐ பயன்படுத்த, அதைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை அதேபோன்று. ChromeOS இலிருந்து பழைய லினக்ஸைப் பெற முடியும் என்றாலும், அதற்கும் கீழே பார்க்க வேண்டியதில்லை.
Chrome OSஐ யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதாவது, இந்தக் கட்டுரையை இணைய உலாவி வழியாகப் படிக்கின்றோம் என்றால், கண்டிப்பாக அதை லினக்ஸ் வாயிலாகப் படிக்கின்றோம், Chromebook உடன் பணிபுரியும் அளவுக்கு “Linux” ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும்.
Chrome OS ஐப் பயன்படுத்த Chromebook ஐ பணம் எதுவும் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. முன்பு இதுஒரு சுதந்திரமான நிறுவனம் , இப்போது Google இன் கிளை, ChromeOSஇன் Flex ஐ வழங்குகிறது. இந்த ChromeOSஇன் மாறுபாட்டின் மூலம், 2007 ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட எந்த கணினியையும்(PC) மிகவும் பாதுகாப்பான பயன்படுத்தக்கூடிய Chromebook நகலாக மாற்றலாம். எந்த வம்பும் இல்லை, வழக்கும்இல்லை, குழப்பமும் இல்லை, மேலும்தற்போது பழைய கணினியில் இயங்குவதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Chrome OS இல் Linux ஆதரவை இயக்கலாம் அதனோடு Linux பயன்பாடுகளை நிறுவுகைசெய்து இயக்கி பயன்பெறலாம்.
இதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, Chromebook இலிருந்து Linux பயன்பாடுகளையும் இயக்கலாம், இது மிகவும் பாரம்பரியமான OS ஆக மாற்ற உதவுகிறது. மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் support.google.com/chromebook/answer/9145439?hl=ta எனும் இணையதளமுகவரிக்கு செல்க

3.Ubuntu OS எனும் லினக்ஸின் இயக்கமுறைமை


படம்-3
நன்மைகள்
• தனிப்பட்ட கணினிகளுக்கும், நிறுவனங்களுக்கும் சிறந்தது
• சில சிறந்த வன்பொருட்களின் ஏற்புகையை கொண்டுள்ளது
• ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை நிறுவுகைசெய்வதற்கான Snap ஆதரவில் கட்டமைக்கப்பட்டுள்ளது
• 12 ஆண்டுகளுக்கான ஆதரவு கொண்டது
தீமைகள்
• புதிய பயனர்கள் இதனுடைய பயனர் இடைமுகத்தினை(UI) அறிந்துகொள்ள சிறிது நேரம் ஆகலாம்
தனிநபர்களுக்கு கட்டணமற்றது/வணிகத்திற்கு விலையுடனானது
லினக்ஸ்உருவாக்கமையம் 6.5.0 ஆகும் இது திறமூலஇயக்கமுறைமையாகும்
உபுண்டு நீண்ட காலமாக புதிய பயனர்களுக்கான சிறந்த லினக்ஸ் வெளி யீடாகக் கருதப்பட்டுவருகிறது, மேலும் இந்த நாட்களில் மற்றவர்கள் அந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டாலும், புதியவர்களுக்கு இது இன்னும் சிறந்த வெளியீடாகும். ஏனென்றால் இது எளிமையானது, துவக்கநிலையாளர்களுக்கும் , பயனர் நட்புடன் கூடியது, மேலும் சமூககுழுவின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஏதேனும் கேள்விகள் இருந்தால், அக்குழுவிலுள்ள ஒருவர் கண்டிப்பாக அதே பிரச்சனையை எதிர்கொண்டு அதற்கான பதிலைஅறிந்திப்பார்.
முன்னிருப்பாக, உபுண்டு GNOME 3.x இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது. நமக்கு முன்பே தெரிந்த அனைத்தும் விண்டோ மட்டுமே என்றால் அதற்கு சில கற்றல் தேவைப்படுகிறது, ஆனால் அது உண்மையில் கடினமானது அன்று. இதனுடைய இடைமுகத்துடன் பழகியவுடன், அது சரியான அர்த்தமுள்ளதாக இருப்பதை காணலாம் (மற்ற மேசைக்கணினி இயக்க முறைமைகள் ஏன் இதைப் பின்பற்றுவதில்லை என்று ஆச்சரியப்படலாம்).
இந்த லினக்ஸின் மிகச் சமீபத்திய பதிப்பு உபுண்டு 24.04 ஆகும்.
.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் ubuntu.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

4. Zorin OS எனும் லினக்ஸின் இயக்கமுறைமை


படம்-4
நன்மைகள்
• கட்டணமற்ற, கட்டணமுடைய வா.ய்ப்புகளை கொண்டது
• குறிமுறைவரிகளின் அனுபவம் எதுவும் தேவையில்லை
• ChromeOS, Windows தோற்றமும் உணர்வும் கொண்டுள்ளது
• தனிப்பட்ட கணினிகளிலும்(PC) செயல்படுகிறது
தீமைகள்
•Windows,macOS ஆகிய இடைமுகங்கள் கட்டண பதிப்பில் மட்டுமே கிடைக்கின்றது
இந்த Zorin OS இன் மூன்று பதிப்புகளில் இரண்டு கட்டணமற்றது;இதன் Proவெளியீட்டின் விலை $39 ஆகும் இது உபுண்டு அடிப்படையில் வெளியிட பெறுகின்றஒரு| திறமூலஇயக்கமுறைமையாகும்
உண்மையில், GNOMEஐக் கற்றுக்கொள்வது கூட பிடிக்கவில்லை. அப்படியானால், Zorin OS ஐ முயற்சித்திடுக. இது Mint ஐப் போலவே உபுண்டுவை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் மேசைக்கணினிபில் விண்டோவின் தோற்றம், உணர்வை வழங்க அதன் தனிப்பயன் தோற்றம் பயன்பாட்டைப் பயன்படுத்திகொள்ளலாம். அல்லது, அது நமக்கு Chromebook தோற்றத்தையும் உணர்வையும் தருகின்றது. இது மிகவும் நெகிழ்வானது.
இது தொடர்ந்து இருப்பதற்கான முழுக் காரணம், விண்டோவிலிருந்து லினக்ஸுக்குச் செல்ல நமக்கு உதவுவதே.யாகும். விண்டோவிருந்து லினக்ஸுக்குச் செல்ல நமக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆவணங்களுடன் இது வருகிறது. Zorin மூன்று வெவ்வேறு பதிப்புகளில் வருகிறது: Core , Lite,ஆகியஇரண்டும் கட்டணமற்றது Core பதிப்பே நமக்குத் தேவையான அனைத்தையும் தருகிறது, அதே நேரத்தில் Lite, பதிப்பு பழைய கணினிகளுக்கு புதிய வாழ்க்கையை வழங்குகிறது Core Pro பதிப்புகள் இரண்டும் சேர்ந்து கிடைக்கும் சமீபத்திய பதிப்பு Zorin OS 17 ஆகும்.
பழைய கணினியை பாதுகாப்பாக வைத்திட வேண்டுமா? இந்த லினக்ஸ் வெளியீடுகளை முயற்சித்திடுக
லினக்ஸ்-பாணி இடைமுகத்தை விரும்பினால், அனைத்து பதிப்புகளும் கட்டணமற்ற GNOME,KDE ஆகிய முன் முனைமங்களுடன் வருகின்றன. அவை நமக்குப் பழகியதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவை இன்னும் கவர்ச்சிகரமானவை, பயன்படுத்த எளிதானவை சக்திவாய்ந்தவை.
.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் zorin.com/os எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

5.MX லினக்ஸ் எனும் லினக்ஸின் இயக்கமுறைமை


படம்-5
நன்மைகள்
• மிகவும் பழைய கணினிகளுடனும் செயல்படுகிறது
• துவக்கநிலையாளர்களுக்கு சிறந்தது
• சிக்கல்களைப் புகாரளிக்க ஆவணங்கள் , dev குழுக்களுக்கான தொடர்புத் தகவல் ஆகியன கொண்டது
தீமைகள்
• விண்டோஸ் 8 , புதிய கணினிகளுக்கு இரட்டை துவக்க வாய்ப்பு இல்லை
• உபுண்டு PPAsகளுடன் நன்றாக ஒன்றிணைந்து செயல்படவில்லை
MX Linux கட்டணமற்றது இது Debian அடிப்படையிலான திறமூல இயக்கமுறைமையாகும்
சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் பிடித்த லினக்ஸ்வெளியீடுகளில் ஒன்று MEPIS லினக்ஸ் ஆகும். இந்த Debian லினக்ஸ் அடிப்படையிலான வெளியீடு நன்றாக செயல்பட்டது. இறுதியில், அதன் நிறுவனரும் பராமரிப்பாளருமான Warren Woodford தனது கவனத்தை மற்ற வணிகங்களில் திருப்பியதால். MEPIS இன் பயனாளர்கள் தொடர்புடைய antiX Linux சமூககுழுக்களுடன் இணைந்து, இந்த MX Linux ஆக செயல்திட்டத்தை புதுப்பித்தனர்.
இன்று, இது ஒரு நல்ல, உறுதியான இலகுரக மேசைக்கணினிஇயக்கமுறைமை ஆகும், இது மிகவும் பிரபலமான Xfce ஆனது அதன் இடைமுகமாகப் பயன்படுகிறது. இது நன்றாக செயல்படுகிறது . இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், இது துவக்கநிலையாளர்களுக்கு மிகவும்ஏற்றது, இதனை பயன்பாட்டிற்கு எடுப்பது எளிது, மேலும் அதை பழைய Pentium II இல் கூட இயக்கலாம். சுருக்கமாக, கூறுவதெனில் அலமாரியில் தூசியுடன் சேர்ந்திருக்கின்ற கணினியை இயக்க விரும்பினால் இது மிகச்சிறந்தது.
ஆனால் இங்கு கூறுவதை ஏற்க வேண்டியதில்லை. லினக்ஸ் வெளியீட்டில், அனைத்து லினக்ஸ் வெளியீடுகளையும் கண்காணிக்கும் ஒரு தளம், வெளியிட்ட சமீபத்திய ஆண்டுகளின் பட்டியலில், MX Linux எப்போதும் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில் ஏதாவது சரியாகச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
இன்று கிடைக்கும் மிக சமீபத்திய பதிப்பு MX-23 2″Libretto.”ஆகும்
.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் mxlinux.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க
துவக்கநிலையாளர்களுக்கு சிறந்த லினக்ஸ் வெளியீடு எது?
புதியவர்கள் துவக்கநிலையாளர்க்கான சிறந்த லினக்ஸ் விநியோகத்திற்கான தேர்வு Linux Mint ஆகும். இது எளிதாக மாற்றுவதற்கு விண்டோஸைப் போலவே தோற்றமளிக்கவேண்டுமென உணரும் ஒரு பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது, அத்துடன் நம்முடைய சொந்த மாற்றங்களைச் செய்வதற்கான கட்டணமில்லாத திற மூலக் குறிமுறைவரிகளையும் கொண்டுள்ளது. சிறந்த வசதி என்னவென்றால், Linux Mint நம்முடையதரவைச் சேகரிப்பதே இல்லை, எனவே நம்முடைய தனிப்பட்ட தகவல் விளம்பரதாரர்களுக்கு விற்கப்படுவதற்கு எங்காவது ஒரு சேவையாளரில் சென்று முடிவடையாது என நம்பிக்கையுடன் இதனை பயன்படுத்தலாம்.
எனவே, லினக்ஸை முயற்சிக்க தயாரா? 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது நன்றாக செயல்படுகின்றது, அடுத்த 30ஆண்டிற்கு இது நமக்கு நன்றாக செயல்படக்கூடும். பெரும்பாலான மேசைக்கணினிகள் DaaS மாதிரிக்குச் செல்வதாகத் தோன்றினாலும் — Windows உட்பட — நமக்கு லினக்ஸ் இன்னும் கிடைக்கும் என உறுதியளிக்கப்படுகின்றது.
கணினியில் துவக்கநிலையாளர்களுக்கு எந்த லினக்ஸ் வெளியீடு சரியானது?

இதை தேர்வு செய்க

நமக்கு இந்த பயன் வேண்டுமென்றால்..

Linux Mint

விண்டோஸ் போன்ற உணர்வு,ம் செயல்பாடும்

Chrome OS

தெரிவுசெய்தலும் இயக்குதலுக்குமான இயங்குதளம்

Ubuntu

கற்றல் குறியீட்டிற்கான மிகவும் ஆழ்ந்த OS

Zorin OS

ChromeOS, Mac , Windows பாணி இடைமுகங்களுக்கான ஆதரவு

MX Linux

திறமூலக் குறிமுறைவரிகளை நாம் விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கான வலுவான இணைய சமூககுழு

 

றுதியில், நமக்கான சிறந்த லினக்ஸ் வெளியீடு எது வெனமிகவும் lதொடர்புடையதாக உணர்வு எழுகிறது. இந்த பட்டியலில் உள்ள சில தேர்வுகளில் பயனர் இடைமுகங்கள் உள்ளன, அவை புதியவற்றைக் கற்றுக்கொள்வதை எளிதாக்கும் வகையில் Windows இன் பழைய பதிப்புகளுக்கு மிக மிக நெருக்கமாக உள்ளன. மற்றவை இரட்டை இயக்கமுறைமை-துவக்கத்தை அனுமதிக்கின்றன, எனவே லினக்ஸில் பிற்பகலில் விரும்பும் போது அல்லது விண்டோவில் சில பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும் போது இயக்க முறைமைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாற்றலாம். குறிமுறைவரியாளர்கள், ஆவணக் குழுக்கள், வழக்கமான பயனர்களின் வலுவான இணைய சமூககுழுவால் ஆதரிக்கப்படும் லினக்ஸின் பதிப்பையும் தேர்வு செய்ய விரும்புகின்றோம். அந்த வகையில், நிறுவுகைசெய்தல், நிரலாக்கங்களைப் பதிவிறக்கம் செய்தல் அல்லது பொதுவான கேள்விகள் ஆகியவற்றில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தேவையான உதவியைப் பெறலாம்.
துவக்கநிலையாளர்களுக்கு இந்த சிறந்த லினக்ஸ் வெளியீடுகளை எவ்வாறு தேர்வு செய்திடுவோம்?
இந்தத் தேர்வுகளைத் தொகுக்கும்போது, ​​ஒவ்வொரு லினக்ஸ் விநியோகத்தின் பயன்பாட்டின் எளிமை, விலை , முக்கிய குறிமுறைவரிகள் ஆகியவற்றில் கவனமாக கவனம் செலுத்திடுக: லினக்ஸ் விநியோகத்தின் 3 அடுக்கு உள்ளது
எளிமையாகப் பயன்படுத்துதல்: இந்த அமைப்புகள் துவக்கநிலைக்கானவை என்பதால், விண்டோஸ் இல்லாத இயக்க முறைமையின் பயனர் அனுபவத்துடன் ஒரு புதியவர் எவ்வாறு தொடர்புகொள்வார் என கருத்தில் கொள்ளப்படட்டது. இந்த துவக்க அமைப்புகள் நன்கு தெரிந்ததாக உணர வேண்டும் ஆனால் அதிகமாக இல்லை.
விலை: லினக்ஸுக்குப் புதியவராக இருந்தால், கணினியைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தால், அதில் ஒரு தொகையை முதலீடு செய்ய விரும்ப மாட்டோம். அதனால்தான் கட்டணமற்ற வாய்ப்புகள் ,கட்டண வாய்ப்புகளைக் கொண்டபட்டியல் தேர்வு செய்திட சேர்க்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிமுறைவரிகள்:
லினக்ஸில் பயன்பாடுகளை நிறுவுகைசெய்வது கடினமா?
முன்பெல்லாம் லினக்ஸில் நிரலாக்கங்களை நிறுவுகைசெய்வது மிககடினமாக இருந்தது, ஆனால் அவ்வாறு இனி இல்லை. hood இன் கீழ், செயல்கள் இன்னும் சிக்கலானதாக இருக்கலாம், ஆனால் இப்போது கிட்டத்தட்ட எல்லா வெளியீடுகளிலும் பயன்பாட்டுக் கடைகள் உள்ளன. இவை புதிய நிரல்களை நிறுவுகைசெய்வதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வது போன்று எளிதாக்குகின்றன.
Windows அல்லது MacOS ஐ விட Linux இலிருந்து அதிக பயன் பெற முடியுமா?
ஆம், shell நிரலாக்கம் ,போன்றபலவற்றை எவ்வாறு செய்வது என நமக்குத் தெரிந்தால் லினக்ஸிலிருந்து இன்னும் நிறையப் பெறலாம். ஆனால் இது விண்டோஸ் , PowerShell.இலும் உண்மை. இரண்டு இயக்க முறைமைகளிலும், செயல்பட, இரண்டின் ஆழமான நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
எனவே ஏன் மாற வேண்டும்? தொடக்கத்தில், லினக்ஸ் அதன் போட்டியாளர்களை விட மிகவும் பாதுகாப்பானது. Ed Bott குறிப்பிடுவது போன்று, Windows 10ஐ தொடர்ந்து பயன்படுத்தினால், பலர் பாதுகாப்பு பேரழிவை சந்திக்க நேரிடும்.
மேலும், Linux, Windows 11 போன்றில்லாமல், சுற்றி இருக்கும் எந்த கணினியிலும் இயங்கும். லினக்ஸுக்கு கணினியின் வழியில் அதிகம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, 2007-vintage HP Pavilion Media Center TV m7360n PC with a 2.8GHz Pentium D 920 dual-core processor, 2GBs of RAM, and a 300GB SATA drive கணினியுடன் இன்றுவரை லினக்ஸில் இயங்குகிறது. விண்டோவின் எந்த நவீன பதிப்பையும் இயக்க நல்ல வாய்ப்பு தேவையாகும்!

நமக்கு இன்னும் சில விண்டோ நிரலாக்கங்கள் தேவைப்பட்டால், அவற்றை லினக்ஸில் இயக்க Crossover Linux ஐ எப்போதும் முயற்சி செய்யலாம். இது எந்த வகையிலும் அனைத்து விண்டோஸ் பயன்பாடுகளையும் இயக்காது, ஆனால் இது பலவற்றை வியக்கத்தக்க வகையில் சிறப்பாக இயக்குகிறது.
எவ்வாறாயினும், அடோப் ஃபோட்டோஷாப் கூட இப்போது மென்பொருள்-ஒரு-சேவையாக (SaaS) கிடைப்பதால், Windows-சார்ந்த நிரலாக்கங்களுக்கு முன்பை விட குறைவான தேவை உள்ளது. உண்மையில், மேசைக்கணினி-ஒரு-சேவை (DaaS) இயங்குதளத்தைப் பயன்படுத்த நமக்கு உதவும் இணைய உலாவி மட்டுமே நமக்குத் தேவையான வணிக உலகத்திற்கு நாம் மாறுகிறோம்.
மேசைக்கணினிபின் எதிர்காலம் ஒருபுறம் இருக்க, விண்டோ போன்றில்லாமல், இன்று நம்முடைய ஒரே உண்மையான தேர்வுகள் Windows 10 அல்லது 11 ஆகும், நூற்றுக்கணக்கான லினக்ஸ் மேசைக்கணினி விநியோகங்கள் உள்ளன. அவற்றின் மேல் பல லினக்ஸ் மேசைக்கணினி இடைமுகங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான தோற்றம் KDE, GNOME, Cinnamon, Lxde, Xfce, போன்ற பல. பெரும்பாலான விநியோகங்களில் Fedora , GNOME ,OpenSUSE, KDE போன்ற முதன்மை பயனர் இடைமுகம் உள்ளது, ஆனால் ஒன்று முதல் மூன்று வரை தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. லினக்ஸில் தொடங்குவதால், வெளியீட்டின் முக்கிய இடைமுகத்துடன் இணைந்திருக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
லினக்ஸ் மேசைக்கணினி பயனர் என்ன செய்ய வேண்டும்? நமக்காக, ஒரு நல்ல பொருத்தமானதைக் கண்டறிய அனைத்தையும் முயற்சி செய்ய வேண்டிய தில்லை. முக்கிய கேள்வி: ” Linux எதற்காகப் பயன்படுத்த விரும்புகின்றோம்?” துவக்கநிலையாளர்களுக்கு, இதை தெரிவுசெய்வது எளிது, சிறந்த ஒட்டுமொத்த லினக்ஸ் மேசைக்கணினி, விண்டோஸ் பயனர்களுக்கு எளிமையான லினக்ஸ் , பழைய கணினிகளைக் கொண்ட பயனர்களுக்கு எளிதான லினக்ஸ் ஆகியவற்றைப் பார்த்தால் போதுமானதாகும்.
லினக்ஸில் விண்டோ நிரலாக்கங்களை இயக்க முடியுமா?
சில மைக்ரோசாப்ட் நிரலாக்கங்கள் இப்போது லினக்ஸில் சொந்தமாக கிடைக்கின்றன. இவற்றில் எட்ஜ் உலாவி , Teams.ஆகியவைகளும் அடங்கும்.
Linux இலிருந்து Windows 365 Cloud PC, முழு Windows 10 அல்லது 11 மேககணினி அடிப்படையிலான மேசைக்கணினியையும் இயக்கலாம். இந்த சந்தா சேவைக்கு அதிக தொகை செலவாகும். அல்லது, கட்டணமில்லாமல் கிடைக்கும், Microsoft 365 ஐ இணையத்திற்காக இயக்கலாம் (முன்னர் Office 365), இது Word, Excel, PowerPoint, Outlook , OneNote இன் செயல்பாடுகளின் துணைக்குழுவிற்கு அணுகலை வழங்குகிறது.
மேசைக்கணினி லினக்ஸில் பாதுகாப்பு மென்பொருள் தேவையா?
உண்மையில் தேவையில்லை. , விண்டோவை விட லினக்ஸ் மிகவும் பாதுகாப்பானது என்றாலும், அது தாக்குதல்களிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. ஆனால், அந்தத் தாக்குதல்கள் விண்டோ பாதிக்கும் தாக்குதல்களைக் காட்டிலும் மிகவும் அரிதானவை.
லினக்ஸில் உள்ளமைக்கப்பட்ட ஃபயர்வாலை இன்னும் இயக்க வேண்டும், மேலும் தீம்பொருளை அதன் தடங்களில் நிறுத்த, Linux அல்லது ClamAV க்கான ESET முடிவுபுள்ளி எதிர்நச்சுநிரலை நிறுவுவதை பரிசீலிக்கலாம்.

%d bloggers like this: