நம்முடைய பயன்பாடுகளை பிறர் கண்காணிப்பது குறித்து நமக்கு அறிவித்தல், அதிகாரம் அளித்தல் அறிந்து கொள்ளுமாறு செய்வதே இந்த பின்தொடர்பவர்களை கட்டுபடுத்துபவர்(TrackerControl) எனும் பயன்பாட்டின் அடிப்படை நோக்கமாகும், அதாவது எந்தவொரு பயன்பாடும் அதனுடைய பயனாளரின் நடத்தை பற்றிய தரவு சேகரிப்பு செய்வது பற்றிய தகவளை அளிப்பதாகும் . இந்த கண்காணிப்பைக் காட்சிப்படுத்த, பேராசிரியர் மேக்ஸ் வான் கிளீக் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்) என்பவரால் உருவாக்கப்பட்ட ஊடுகதிர் செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு பயனாளர்களைக் கண்காணிப்பதன் பின்னணியில் உள்ள நிறுவனங்களை வெளிப்படுத்தவும், பயனாளர்கள் கண்காணிப்பைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கவும் பயன்படுகிறது. . தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து அறிவுறுத்துவதை இந்த பயன்பாடு மேலும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு சாதனத்தில் வளாக பயன்பாடுகளின் பிணைய தகவல்தொடர்புகளை பகுப்பாய்வு செய்ய, இந்த பயன்பாட்டின் கட்டுப்பாடு Android இன் VPN செயல்பாட்டைப் பயன்படுத்தி கொள்கின்றது. இது வளாக VPN சேவையகத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது, இதன் மூலம் அனைத்து பிணைய தகவல் தொடர்புகளும் பயனாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன, வேறு எளிய சொற்களில் கூறுவதெனில், இந்த பயன்பாட்டினுடைய கட்டுப்பாட்டின் பகுப்பாய்வை செயல்படுத்திடுவதற்காகவென. வெளிப்புற VPN சேவையகம் எதுவும் பயன்படுத்தி கொள்ளப்படவில்லை, எனவே இதனுடைய பகுப்பாய்வின் நோக்கங்களுக்காக எந்தவொரு பிணைய தரவும் பயனாளரின் சாதனத்தை விட்டு வெளியேறாது. – இது எந்தவொரு பயன்பாட்டையும் நிகழ்வுநேரத்திலேயே கண்காணிப்பு செய்கின்றது, பயன்பாடுகளின் தனியுரிமைக் கொள்கை வலைத்தளங்களுக்கான அணுகலை பெரும்பாலும் கொண்டிருக்கின்றன, இந்த பயன்பாடானது ஒத்த தீர்வுகளுக்கு மாறாக, SSL இணைப்புகளை இடைமறிக்காது, தனியுரிமை அபாயங்களைக் குறைக்கிறது Android சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. வலைபின்னல் தகவல்தொடர்புகள் பற்றிய பேரளவுதரவுகளை மட்டுமே உள்நுழைந்து பயனர்களுக்கு காட்டப்படும். இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் இது பயனாளர்களின் நடத்தை பற்றி கைபேசி பயன்பாடுகளில் பரவலாக, நடந்து கொண்டிருக்கும், மறைக்கப்பட்ட பல்வேறு தரவுகளின் சேகரிப்பை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பயனாளர்களை அனுமதிக்கிறது
இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் github.com/OxfordHCC/tracker-control-android எனும் இணைதள முகவரிக்கு செல்க