மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக

ஹேக்கட்டி ஹேக்(Hackety Hack) ஒரு கட்டற்ற மென்பொருள் மற்றும் திறவூற்றாகும்(open source). இதை பயன்படுத்தி ரூபி நிரலாக்க மொழி(Ruby Programming language) மூலம் GUI application(Graphical User Interface application நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால், “வரைபட பயனர் இடைமுகப்பு”) உருவாக்கும் முறையை பயிலலாம். மேலும் இது ஒரு IDE-ஐ(Integrated Development Environment அதாவது ஒருங்கிணை விருத்திச் சூழல்) விரிவான பாடத் தொகுப்புடன் சேர்ப்பதால் கற்றலை மிக மிக எளியதாகவும், விளையாட்டாகவும் ஆக்குகிறது.

 

ஹேக்கட்டி ஹேக்கை லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸ் எக்ஸ் போன்ற இயங்குக் தளங்களில் (operating systems) பயன்படுத்தலாம். நிரலாக்கர்கள்(programmers) தங்கள் அனுபவங்களை பகிர, கேள்விகள் கேட்க, விமர்சனங்களை தெரிவிக்க வகை செய்யும் வண்ணம் இது வலைத்தளத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

 

ஹேக்கட்டி ஹேக்கை கொண்டு ரூபி மொழியின் அடிப்படைகளை கற்று எளிய செயலிகளை(apps) விரைவாக உருவாக்க முடியும். இது எளிய செயலிகள் உருவாக்க மட்டுமல்ல, ஹேக்கட்டி ஹேக் மூலம் நீங்கள் அடிப்படையை கற்றுவிட்டால், ஹேக்கட்டி ஹேக்கை போலவே மிகப் பெரிய மற்றும் சிக்கலான செயலிகளை உருவாக்கத் துவங்கலாம்.

 

நீங்கள் நிரலாக்கத்தில் ஈடுபடவும், பல் தளங்களில் இயங்கும் செயலிகள்(cross platform apps) உருவாக்கவும் விழைபவரானால், ஹேக்கட்டி ஹேக் ஒரு நல்ல துவக்கத்தை தரும்.

 

ஹேக்கட்டி ஹேக்கை உபுண்டு/லினக்ஸ் மின்ட்ல் தரவிறக்கி நிறுவ:

 

இதனை அதிகாரபூர்வ வலைப்பக்கத்திலிருந்து(official website) தரவிறக்கலாம்.

 

hackety.com/downloads/latest/linux

இது ஒரு இருமை கோப்பை(binary file) தரவிறக்கும். நிறுவும் முன் அதற்கு இயக்க அனுமதி(executable permission) வழங்க வேண்டும். இதற்கு, முனையத்தில்(terminal),

sudo chmod +x hacketyhack-1.0.1.run என்றும்,

நிறுவ ./hacketyhack-1.0.1.run என்றும்

கட்டளைகளை பயன்படுத்தவேண்டும்.

ஹேக்கற்றி ஹேக்கால் உருவாக்கப்பட்ட ஒரு எளிய செயலியின்(app) திரைப்பிடிப்பு(screen shot) இதோ:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு: hakety.com/faq

நிரலாக்கம்() தொடர்பான பொதுக் கேள்விகளுக்கு:hakety.com/questions

நான் ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி. நான் ஒரு CollabNet மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2011 -ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். கணியம் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

வலை பதிவு : jophinepranjal.blogspot.in/

மின்னஞ்சல் : jophinep@gmail.com

%d bloggers like this: