இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன.
ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள் கணினி அறிவியலைக் கற்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் மாபெரும் உதவியாளராக விளங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இப்போது இயந்திரமனிதன் அமைப்பிலும் இது பயன்படுத்தப் படுகிறது. ராஸ்பெர்ரி பைஆனது கிரெடிட் கார்டின் அளவிற்கு மிகவும் சிறியது – – மேலும் இதனை ஒரு நிலையான கணினி விசைப்பலகை அல்லது தொலைக்காட்சி பெட்டியில் செருகி பயன்படுத்திகொள்ளலாம். இது உட்பொதிக்கப்பட்ட செயல் திட்டங்களுக்கு ஏற்றது மேலும் மிகவும் மலிவானது.
குழந்தைகளுக்கான மிக அடிப்படையான பொருட்களிலிருந்து தொடங்கி சிக்கலான பணிகள் வரை பல்வேறு செயல்திட்டங்களுக்கு ராஸ்பெர்ரிபை யானது வெற்றிகரமாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மேம்பட்ட திறன்களைக் கொண்டவர்கள் அதை மேஜைக்கணினியாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம், இது வழக்கமான கணினியை போன்று விரிதாள்களை இயக்குகின்றது, ஆவணங்களை எழுதஉதவுகின்து மேலும் பொதுவாக கணினியிலிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து பணிகளையும் இது செய்கின்றது. மிக முக்கியமாக உயர்தர கானொளி காட்சிகளை இயக்கி காட்சி படங்களை காண்பதற்கு இந்த Raspberry Piஐ பயன்படுத்திகொள்ளலாம்.
பொதுவாக நிரலாக்கத்துடன் துவங்கிடும்போது செய்ய வேண்டிய முதல் செயலானது, ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழலை(IDE ) பெறுவதுதான். ராஸ்பெர்ரி பையில் நாம் விரும்பும் பணிகளைச் செய்ய, நாம் ஒரு சில குறிமுறைவரிகளை எழுத வேண்டும் மேலும் ஒரு IDEஎனும் நிரலாக்கத்திற்கான ஒருங்கிணந்தை சூழலில் நிரலாக்கத்தை செயல்படுத்துவதற்கு முன்பு வெவ்வேறு குறிமுறைவரிகளை எழுத, பரிசோதிக்க செயல்படுத்த உதவுகின்றது. ராஸ்பெர்ரி பைஆனது பல்வேறு கணினி மொழிகளுடன் இணக்கமாக செயல்படுகின்றது, அவை குறிமுறைவரிகளை எழுத பயன்படும்.
முதல் ஐந்து ராஸ்பெர்ரி பை IDE கள் பின்வருமாறு.
1.Geany IDE :இது GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுக அடிப்படையிலானது மேலும் மிகவும் இலகுரகமானது என்றும் கருதப்படுகிறது. இது அடிப்படையில் ஒரு உரை திருத்தியாகும், இது IDE ஆதரவுடன் GTK+ ஐயும் Scintilla வையும் பயன்படுத்துகின்றது. இது சுதந்திரமாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இது செயல்படுவதற்கு குறைந்த தொகுப்புகள்மட்டுமே தேவை.யாகும் அதாவாது GTK2 இயக்க நேர நூலகம் மட்டுமே இதனை செயல்படுத்தப்படுவதற்குத் தேவையாகும். இது எளிய வழி செலுத்துதலும் குறிமுறைவரிகளின் மிகுதி கட்டளைவரிகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடனும் அமைந்துள்ளது . இது சி ++, சி, ஜாவா, பைதான் போன்ற பல்வேறு நிரலாக்க மொழிகளை ஆதரிக்கிறது. இது தொடரியல் சிறப்பு வதியுடனும் மிகவும் தனிப்பயனாக்கவும் பட்டுள்ளது. இதில் நம்முடைய விருப்பப்படி, விருப்பங்களையும், சாளரங்களையும் பட்டைகளையும் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். இது எளிதாகக் கிடைக்கக்கூடிய பல்வேறு இலவச-பதிவிறக்க செருகுநிரல்களுடன் கிடைக்கின்றது.
2.Lazarus IDE : இது ஒரு குறுக்கு-தள வரைகலை பயனாளர் இடைமுக அடிப்படையிலான IDE என அழைக்கப்படுகிறது, இதனை விரைவான பயன்பாட்டு மேம்பாட்டிற்காக பயன்படுத்திகொள்ளலாம். இது மிகவிரைவாக செயல்படுத்திடும் வேகம், தொகுப்பு வேகம் குறுக்கு தொகுப்பு ஆகிய மூன்று முதன்மை வசதி வாய்ப்புகளுடன் கிடைக்கின்றது – . இது விண்டோஸ் முதல் லினக்ஸ் மேக் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
இந்த குறிப்பிட்ட IDE ஆனது Lazarus செயல் கூறு நூலகத்துடன் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் மேம்படுத்துநர்களுக்கு சில தளம் சார்ந்த பல்வேறு வசதி வாய்ப்புகளை வழங்குகிறது, இது மிகவும் விரைவாக செயல்படுகின்றது மிக வேகமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் பயன்படுத்த எளிதாகவும் அமைந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு பயன்பாட்டு மேம்பாட்டிற்கு ஏற்றது மேலும் பல்வேறு புதிய வசதிகளுடன் கூடிய இலவச Pascal பயன்படுத்தி கொள்கின்றது.
3.Greenfoot IDE : இது ஜாவா அடிப்படையிலான குறுக்கு-தள IDE ஆகும், இது உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரியில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்காக வும் உருவாக்கப்பட்டது. இது GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுகத்தை எளிதில் புரிந்துகொள்வதோடு, தானியங்கியாக மிகுதிகுறிமுறைவரிகளை நிறைவுசெய்கின்றது, திட்ட மேலாண்மை வசதிகளுடனும் தொடரியல் சிறப்புவசதிகளுடனும் அமைந்துள்ளது.
குறிப்பாக இது புதியவர்களுக்கும் துவக்கநிலை நிரலாளர்களுக்கும் ஏற்றது. ஜாவா குறிமுறைவரிகளை இயக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது KDE, X11 GNOME வரைகலை சூழலை ஆதரிக்கிறது. இது உண்மையில் இருக்கும் பொருளைக் குறிப்பதற்கான நடிகர் என்றும் முக்கிய செயல்படுத்திடும் வகுப்பை உலகம் என்றும் இரண்டு முக்கிய வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
4.Code::Blocks IDE: இது சி ++ இல் ஒரு கருவித்தொகுப்பாக wxWidgets ஐப் பயன்படுத்தி எழுதப்பட்டது, இது ஒரு குறுக்கு-தள IDE ஆகும், இது Clang, Visual C++ , GCC உள்ளிட்ட பல்வேறு தொகுப்பாளர்களை ஆதரிக்கிறது.
இது மிகவும் புத்திசாலித்தனமானது மேலும் குறிமுறைவரிகளை நிறைவு செய்தல், தொடரியல் சிறப்புவசதிகளையும் குறிமுறைவரிகளின் மடிப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் இதன் வாயிலாக எளிதாக செய்ய முடியும். இது தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு வெளிப்புற செருகுநிரல்களுடன் உள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ் மேக் ஆகியஅனைத்து இயக்கமுறைமைகலிளும் இயக்கலாம். இது GCC, போர்லேண்ட் சி ++, இன்டெல் சி ++ போன்ற பல்வேறு கணினி மொழிகளின் மொழிமாற்றிகளை ஆதரிக்கிறது. இது தகவல்களைச் சேமிக்க தனிப்பயன் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளையும் எக்ஸ்எம்எல் நீட்டிப்பு கோப்புகளையும் பயன்படுத்தி கொள்கின்றது.
5.Ninja IDE: இது மற்ற IDE:களிலிருந்து சற்று வித்தியாசமானது. இது பைத்தானில் எழுதப்பட்டுள்ளது மேலும் அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. குறிப்பாக இது பைத்தானை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது இதில் குறிமுறைவரிகள் நிலை , தாவல்கள், கோப்பு மேலாண்மை போன்ற செயல்பாடுகளைச் எளிதாக செய்ய முடியும்.இது பைதான் தவிர,மற்ற கணினி மொழிகளையும் ஆதரிக்கிறது. இதில்மிகுதி குறிமுறைவரிகளை நிறைவுசெய்தல் மறு நுழைவு போன்ற சிக்கலான செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்பதால், இது மிகவும் பயனுள்ள குறிமுறைவரிகளின் பதிப்பாளராகக் கருதப்படுகிறது. இது ஒரு கோப்பில் இருக்கும் நிலையான PEP8 பிழைகளைக் கண்டறிய உதவுகிறது.இது குறிமுறைவரிகளை உள்ளூராக்கல் செயல்பாட்டுடன் வருகிறது, இது எந்தக் கோப்பையும் நேரடியாகவும் விரைவாகவும் அணுக அனுமதிக்கிறது. இதில் பயனாளர்கள் ‘CTRL + K’ என்று தட்டச்சு செய்து அவர்கள் தேடுவதை எழுதினால் போதும், மேலும் IDE உரையை எளிதாக அடையாளம் காணும் திறன்மிக்கது. பெரும்பாலான IDE இக்களைப் போலவே, இது பயன்படுத்த மிகவும் எளிதானது. இது பல தனித்துவமான பயனுள்ள திட்ட மேலாண்மை வசதிகளுடன் கிடைக்கின்றது, மேலும் பயனுள்ள துணை நிரல்களுடன் IDE ஐ மிகவும் விரிவாக்கக்கூடியதாக ஆக்குகின்றது