வணிகநிறுவனங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், தற்போதைய நவீனதொழில்நுட்பத்திற்குஏற்ப எண்ணிம(digital ) நிறுவனங்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களை மாற்றிகொள்வதற்கு ‘choosing’ என்பது ஒரு பெரிய கேள்வி குறி அன்று; மாறாக,அவ்வாறான மாற்றத்துடன் தங்களுடைய நிறுவனம் எவ்வாறுமுன்னேறுவது என்பது பற்றியதே முக்கிய கேள்விக்குறியாகும். இவ்வாறான சூழலில்தான் AIOps என்பது வணிக நிறுவனங்களின உதவிக்கு வருகிறது. பொதுவாக ஒரு வணிக நிறுவனத்தை எண்ணிம(digital ) நிறுவனமாக மாற்றுவதில் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அர்ப்பணிப்புள்ள தகவல்தொழில்நுட்ப(IT) திறன்கள் இல்லாமை, நிறுவனத்தினை இவ்வாறான புதிய சூழலிற்கு மாற்றுவதை கண்காணிப்பதற்கான மேலாண்மை, வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகள் , கலப்பினச் சூழல்கள் ஆகியவை இவற்றில் சில. இந்த சவால்களைச் சந்திக்கவும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வணிகநிறுவனங்கள் தங்களுடைய தகவல் தொழில் நுட்ப செயல்பாடுகளை (IT operations (ITOps) மேம்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது.
எண்ணிம மாற்றமே AIOpsக்கான சிறந்த வழியாகும்:
வருங்காலத்தில், ITOps ஆனவை தருக்கபடிமுறையையும், மனித நுண்ணறிவையும் ஒருங்கிணைத்து தகவல்தொழில்நுட்ப(IT) அமைப்புகளின் செயல்திறனை வெளிப் படையானதாக்கி, தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக உதவகாத்திருக் கின்றன. வெற்றிகரமான எண்ணிம மாற்றத்திற்கு AIOps இன்றியமையாததாக விளங்க கூடும், இது நவீன வணிகநிறுவனங்கள் கோரும் வேகத்தில் கணினிகள் செயல்பட உதவதயாராகஇருக்கின்றது. இது, ஒரு நிறுவனம் எவ்வளவு விரைவாக சந்தையின் தலைமையைப் பெறுகிறது , தக்கவைக்கிறது என்பதை தீர்மாணிக்கின்றது
. நவீன AIOps தொழில்நுட்பங்கள் IT உள்கட்டமைப்பை வளாகத்தில், மேககணினியில் அல்லது கலப்பினச் சூழலில் வழங்குகின்றன. அவற்றின் தன்னியக்கமானது மேம்படுத்துநர்கள் அடிப்படை உள்கட்டமைப்பைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த தலைமுறை வணிக பயன்பாடுகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இந்நிலையில் AIOps என்றால் என்ன ?எனும் கேள்வி நம்மனதில் எழும் நிற்க.
AIOps என்பது தகவல்தொழில்நுட்ப(IT) செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறி வினைப்(AI) பயன்படுத்திகொள்வதற்கான ஒருசெயல்முறையாகும் அதாவது AIOps ஆனது செயற்கை நுண்ணறிவினையும் , இயந்திர கற்றலையும் ஒருங்கிணைத்து IT செயல்பாடுகளுக்கான தரவை பகுப்பாய்வு செய்கிறது. மேலும் இது அவ்வாறான பகுப்பாய்வின்போது நிறுவனங்களுக்கு பிழைகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது அதுமட்டுமல்லாது இறுதிப் பயனர்களை பாதிக்கின்ற முன்கூட்டியே எழுகின்ற சிக்கல்களைத் தடுக்க செயல்பாட்டுக் குழுக்களுக்கு உதவுகிறது. நடைமுறையில் இருக்கின்ற தற்போதைய பாரம்பரிய தகவல் தொழில்நுட்ப மேலாண்மை நுட்பங்களால் எண்ணிம வணிக மாற்றத்தைக் கையாள முடியவில்லை. IT செயல்பாடுகளின் செயலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் வணிக நிறுவனங்கள் தங்கள் IT சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதில் பெரிய மாற்றமும் ஏற்படும் என நிறுவனம் முன்கணிப்பு செய்துவிடும். AIOps இயங்குதளங்கள் மீப்பெரும் தரவைப் பயன்படுத்துகின்றன. பாரம்பரிய வரலாற்றுப் பகுப்பாய்வுகளை வழங்கும்போது, நிகழ்நேரத்தில் சிக்கல்களைத் தானாகக் கண்டறிந்து அதற்குப் பதிலளிப்பதற்காக அவை பல்வேறு IT செயல்பாடு களிலிருந்தும் சாதனங்களிலிருந்தும் தரவைச் சேகரிக்கின்றன. பின்னர் AIOps ஆனது ஒருங்கிணைந்த IT தரவுகளுக்கான இயந்திர கற்றலைப் பயன்படுத்தி விரிவான பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது. இதுதொடர்ச்சியான மேம்பாடு களுக்கும் பராமரிப்புகளுக்கும் வழிவகுக்கின்ற தன்னியக்கத்தால் இயக்கப்படும் நுண்ணறிவு விளைவு ஆகும். அத்தியாவசிய தகவல் தொழில்நுட்ப செயல்பாடு களுக்கான தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு, வரிசைப்படுத்தல் (CI/CD) ஆகியவை AIOps இல் ஆதரிக்கப்படுகிறது.
AIOps க்கான நோக்கம் என்ன?
AIOps உடன் தொடங்குவது ஆரம்பத்தில் சவாலாகத் தோன்றலாம், எனவே படிப்படியான அணுகுமுறையை மேற்கொள்வது சிறந்தது. IT செயல்பாட்டுத் தரவை அடையாளம் கண்டு புரிந்துகொள்வதன் மூலம் நாம் இந்த பணியை தொடங்க வேண்டும். AIOps அதன் மையத்தில் தரவு சார்ந்ததாகும். எனவே, கட்டமைக்கப்படாத தரவு, பதிவுகள், அளவீடுகள், நிகழ் நேரத் தரவு, API வெளியீடுகள் ,சாதனத் தரவு உட்பட, தொடர்புடைய அனைத்து செயல்பாட்டுத் தரவுகளுக்கும் சரியாான அணுகல் தேவையாகும். அவ்வாறே தரவுத்தளங்கள், சமூக நடவடிக்கைகள், பிற தொடர்புடைய தரவு போன்ற கட்டமைக்கப்பட்ட வணிகத் தரவுகளும் தேவையாகும். AIOps இயங்குதளங்கள் எவ்வளவு தொடர்புடைய தரவுகளைப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு துல்லியமாக அவற்றின் கணிப்புகள் இருக்கும்.
வணிகநிறுவனங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் தங்களின் மிகப்பெரிய பிரச்சனைகளை இதன்வாயிலாக எவ்வாறு தீர்வுசெய்திட முடியும் என்பதை வணிக நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் கடந்தகால தோல்விகளை மறுபரிசீலனை செய்ய AIOs ஐ செயல்படுத்த வேண்டும் மேலும் பிரச்சினை களுக்கான தீர்வை எட்ட உதவும் தரவு என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். செயலிழப்பு அல்லது கணினி மந்தநிலையின் மூலத்தைக் கண்டறிய தரவு பகுப்பாய்வு பயன்படுத்திகொள்ளலாம்.
AIOps இயங்குதளம் பொதுவான சிக்கல்களைக் கண்டறிவதற்கும் அவற்றின் தீர்வுகளுக்கும் பயன்படுத்திகொள்ளலாம். நிகழ்நேர கண்காணிப்பிற்கும் தானியங்கியான பதிலுக்காகவும் இயந்திர கற்றலையும் AI ஐ செயல்படுத்திடவும் வணிகநிறுவனங்கள் தங்களால் சேகரிக்கப்பட்ட நுண்ணறிவைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முழு செயல்முறையும் நிறுவனங்களுக்கு AI இன் அனுபவ முதிர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, பிழைகளை திறம்பட சரிசெய்கிறது, செயல்படா நேரத்தைத் தவிர்த்திடவும் செயல்திறனை மேம்படுத்திடவும் செய்கிறது.
2022 இல் AIOps ஏன் தேவை?
வணிகநிறுவனங்கள் தங்களுடைய எண்ணிம மாற்றத்தை விரைவுபடுத்துவதால், பயன்பாடுகளும் கணினி கட்டமைப்புகளும் மிகவும் மேம்பட்டதாக மாறுகின்றன. இந்த சிக்கலை நாம் சில வழிகளில் காணலாம்: நிறுவனங்கள் பாரம்பரிய பயன்பாட்டு கட்டமைப்பிலிருந்து ஒரு சொந்த மேககணினி(cloud-native), நெகிழ்வான, மீச்சிறுசேவை அடிப்படையிலான கொள்கலணாக(containerised) செய்யப்பட்ட பயன்பாடு அடுக்கிற்கு மாறுகின்றன. இந்த பயன்பாடுகள் வளாகத்தில், கலப்பின மேககணினி, பொதுவான மேககணினி, தனியார் மேககணினி ஆகிய இயங்குதளங்களிலும் பயன் படுத்தப்படுகின்றன. பயன்பாடுகளும் தகவல் தொழில்நுட்ப சூழல்களும் விரிவடையும் போது, அவை மிகப்பெரிய அளவிலான தரவை உருவாக்குகின்றன. IT செயல்பாட்டுக் குழுக்கள் தங்களால் நிர்வகிக்க முடியாத தரவுகளால் சோர்வடைகின்றன. இருப்பினும், AI கொண்டு அதிக அளவிலான தரவுகளை கையாள முடியும். தரவுகளின் அளவு விரிவடையும் போது, AI என்பதை IT செயல் முறைகளில் இணைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக அமைகின்றன. இயந்திரக் கற்றல் ஆழ் கற்றல் ஆகியமாதிரிகளைப் பயன்படுத்தி ஒழுங்கின்மை கண்டறிதல், வகைப்படுத்துதல், கணிப்பு ஆகிய பணிகளை செய்யலாம், அவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை பகுப்பாய்வு செய்வதிலும் நுண்ணறிவுகளை வழங்குவதிலும் சிறந்து விளங்குகின்றன.
AIOps இன் பல வசதிகளுள் ஒன்றான ஊடாடும் முகப்புத்திரை மூலம் நல்ல பயனர் அனுபவத்தை வழங்க இது நிறுவனங்களுக்கு உதவுகின்றது. AIOps செயல்படுத்தும் வணிகநிறுவனங்கள் முரண்பாடுஇல்லாத( frictionless) அனுபவங்கள், குறைந்த இயக்கச் செலவுகள், விரைவான வாடிக்கையாளர் சேவை, தீர்வுக்கான குறுகிய சராசரி நேரம் குறைவான பணியில்லா நேரங்கள் போன்ற பலன்களைப் புகாரளித்துள்ளன. முன்கணிப்பு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் உறுதியான முடிவுகளை எடுப்பதன் மூலம் AIOpsஆனது IT செயல்பாடுகளை ஆதரிக்கிறது.
இறுதி குறிப்பு AIOps என்பது ITஇன் செயல்பாட்டு பகுப்பாய்வுகளில் (ITOA) அடுத்த படிமுறையாகும். AI, அறிவாற்றல் திறன்கள் , RPA (இயந்திரமனித தானியங்கி செயல்முறை ) ஆகியவை உள்கட்டமைப்பு அல்லது IT செயல்பாடுகளின் சிக்கல்களை அவ்வாறானதொரு சிக்கலாக மாற்றுவதற்கு முன் அவற்றைத் தானாகவே சரிசெய்யப் பயன்படுகிறது. சுயமாக-சரிசெய்திடும் அமைப்புகள் என்பதேAIOps இன் இறுதி இலக்கு ஆகும்