படம்-1
உருவாக்கசெயற்கைநுண்ணறிவு (Gen AI)என்பது மிகவும் அற்புதமான தொழில் நுட்பமாகும். இது , கலை,இசை போன்ற பலவற்றையும் எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு இயந்திரமனித பயிற்சியாளரை போன்றது! இருப்பினும், மக்களின் படைப்புத் திறன்களை செநு(AI)க்கு பொருத்த இன்னும் ஏராளமான அளவில் தரவு, கணினிக்கும்திறன் , கற்றல் ஆகியன தேவையாகும். ஆனால் மனித படைப்பாற்றலின் பல்வேறு எடுத்துக்காட்டுகளை அறிந்து கொள்வதால், ஒவ்வொரு நாளும் இந்தஉருவாக்கசெநு(AI) மேம்பட்டுகொண்டே வருகிறது. மிகவும் வியப்பான செய்தி என்னவென்றால்,செநு(AI) என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளை நகலெடுப்பது மட்டுமல்லாமல். அவ்வாறு கற்றவற்றை அடிப்படையாகக்கொண்டு செநு(AI)ஆல் புதிய வடிவங்களையும், புதுமைகளையும் கொண்டு வர முடிகிறது. இதுவரை கண்டிராத புதிய கலை, உள்ளடக்கம் ஆகியவற்றினை உருவாக்க இந்த உருவாக்க செநு(AI) உதவுக்கூடும்!
திறமூல உருவாக்கசெநு(AI)
திறமூல உருவாக்க செநு(AI)ஐ உருவாக்கிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் குறிமுறைவரிகளானவை, புதிய செயல்களை காண, மாற்றியமைத்திட பயன்படுத்திகொள்ள அனைவருக்கும் கிடைக்கின்றன. இது ஒரு எந்தவொரு நிறுவனத்தாலும் இரகசியமாக வைக்கப்படவில்லை. திறமூலம் என்பது பகிர்தலும் ஒன்றாக இணைந்துபணி செய்வதும் ஆகும். திறமூல உருவாக்க செநு(AI) இன் செயல்திட்டங்களின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
RunwayML: இது பொதுமக்களுக்குசெநு(AI)இன் மூலம் புதிய வரைபடங்கள், இசைகள், கானொளி காட்சிகளை உருவாக்க உதவுகிறது. செநு(AI) இன் கலைத்திறனைத் தனிப் பயனாக்க குறிமுறைவரிகளை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திடலாம்!
StyleGAN: இந்த செநு(AI)ஆனது இயல்பான போலி மனித முகங்களை உருவாக்குகிறது. இதன்குறிமுறைவரிகள் பொதுமக்கள்அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு இருப்பதால் தாம் விரும்பியவாறு யார்வேண்டுமானால் புதிய செயல்களை இதில் உருவாக்கி பயன்பெற முடியும்.
Magent:இது செநு(AI) உடன் இசையை உருவாக்க கூகுள் வழங்கும் ஒரு கருவியாகும். நாம் செநு(AI)க்கு புதிய வழிகளில் பயிற்சி அளிக்க இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
TensorFlow: இந்த பிரபலமான நிரலாக்க நூலகம் அனைத்து வகையான செநு(AI) மாதிரிகளையும் உருவாக்க எல்வோரையும் அனுமதிக்கிறது. உருவாக்க செநு(AI)கள் அதனுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன.
GAN Lab, Mimetic, Lexica , VQGAN ஆகியவை வேறு சில coolஇன் திறமூல செயல்திட்டங்களாகும். இவை அனைத்தையும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் குறிமுறைவரிகளை பயன்படுத்தவும் மாற்றியமைத்திடவும் செய்திடலாம்! திறமூலத்தின் முக்கியநன்மை என்னவென்றால், இந்த செயல்திட்டங்களிலிருந்து பொதுமக்களில் யார்விரும்பினாலும் கற்றுக்கொள்ளலாம், அவற்றை தாம் விரும்பியவாறு மேம்படுத்தலாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம் என்பதேயாகும்.
“யாரும் அறிந்து அல்லது தெரிந்து கொள்ளாதவாறு மூடப்பட்ட மூலக்குறி முறைவரிகளுடனான பயன்பாட்டினை விட திறமூல உருவாக்க செநு(AI)ஐ நான் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?” என்ற கேள்வி இதை பயன்படுத்த துவங்கிடும் நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க.
. திறமூல உருவாக்க செநு(AI)இன் முக்கிய நன்மை தன்னார்வலர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து அதன் வளர்ச்சிக்கும் பாடுபடுவதும் வெளிப்படையான தன்மையுமாகும். இதன் குறிமுறைவரிகளும் மாதிரிகளும் பொதுவாக அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு இருப்பதால், மேலும் பல மேம்படுத்துநர்கள் இதில் பங்களிக்கலாம், இதிலுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அதனை தீர்வு செய்வதற்கான, மேம்பாடுகளைப் பரிந்துரைக்கலாம் மேலும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தனிப்பயன் தீர்வுகளை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம். தன்னார்வாளர்கள் பலரின் பட்டறிவு ,முயற்சி ஆகியவற்றினை ஒன்றாக சேகரித்தல் என்பது மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தம்முடையநிறுவனங்களல் செய்யக்கூடியதை விட மிகஅதிகமானக செயலாகஇருக்கின்றது.
GPT-3 ஐப் தெரிந்துகொள்வோம்
சொற்றொடர்களை தட்டச்சு செய்யும் போது அடுத்த சொல் என்னவாக இருக்கும் என நம்முடைய கைபேசி எவ்வாறு கணிக்க முடியும் எனஎப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அல்லது ஒரு இணையதளம் எவ்வாறு வெவ்வேறு மொழிகளில் தானாக மொழிபெயர்க்க முடியும்? என்பதையாவது ஆலோசத்து இருக்கின்றீர்களா? ஆகியன நம்முன் உள்ள மிக முக்கிய கேள்விகளாகும்
நாம் பயன்படுத்தி கொள்கின்ற இந்த பயன்பாடுகள் ஆனவை திரைக்குப் பின்னால், நரம்பணுபிணையங்கள்(neural networks)எனப்படும் மிகவும் சிக்கலான செயற்கை நுண்ணறிவு அமைவுகளைப் பயன்படுத்திகொள்கின்றன என்பதால்தான. GPT-3ஆனது இதுவரை உருவாக்கப்பட்ட புதிய, மிகவும் மேம்பட்ட நரம்பணு பினையங்களில் ஒன்றாக திகழ்கின்றது! GPT-3, என சுருக்கமான பெயரால் அழைக்கப்பெறும் உருவாக்கத்திற்கான முன்கூட்டியே பயிற்சியளிக்கப்பட்ட மின்மாற்றி- 3(Generative Pre-trained Transformer3 (GPT-3)) என்பது ஒரு மீத்திறன்மிகு கணினி(super-smart computer) போன்றதாகும், இது மனிதனைப் போன்ற உரையைப் புரிந்துகொள்வதற்கும் புதிய உரையை உருவாக்குவதற்கும் மிகவும் சிறந்தது. இது திறமூலசெநு(OpenAI)ஆல் உருவாக்கப்பட்டது, இது நம்முடன் அரட்டையடித்தல், கதைகளை எழுதுதல்ம், கேள்விகளுக்கு மிகச்சரியாகபதிலளித்தல் போன்ற பல அருமையான செய்திகளை சொற்களால் செய்யக்கூடிய எண்ணிம நண்பராக இதை கருதிக்கொள்க..
நரம்பணுபிணையம் என்பது வடிவங்களை அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட ஒரு வகை செநு(AI) இன்தருக்கமாகும். இது ஏறத்தாழ மனித மூளையை போன்று செயல்படக்கூடியது. ‘நரம்பணுக்கள்(neurons)’’ என்பவை மனிதர்களின் தலையில் உள்ள உண்மையான நரம்பணுபிணையங்களைப் போன்றே சிக்கலான வழிகளில் இணைக்கின்ற கணித செயலிகளாகும். டன்கணக்கிலான தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நரம்பணுபிணையம் வெளிப்படையான நிரலாக்கம் எதுவும் தேவையில்லாமல் கணிப்புகளையும் முடிவுகளையும் செய்திட கற்றுக்கொள்கிறது. OpenAI இன் GPT-3 பணிபரியும் வழி இதுவேயாகும்.
GPT-3 ஆனதுஇணையத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான உரையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இது பில்லியன் கணக்கான புத்தகங்களை, கட்டுரைகளை ,உரையாடல்களைப் படித்தது போன்றது. இந்தப் பயிற்சி மனித மொழியின் வடிவங்களையும் பாணிகளையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. இப்போது, நாம் இந்த GPT-3 உடன் அரட்டையடிக்கும்போது, பதில்களை உருவாக்க இது தான்இதுவரை பெற்ற அறிவைப் பயன்படுத்திகொள்கிறது. நாம் அதனிடம் வரலாறு, அறிவியல் போன்று எதைபற்றியும் கேள்விகளைக் கேட்கலாம் அல்லது புதியதாக ஒரு கதையை உருவாக்கச் சொல்லலாம், மேலும் ஆர்வமூட்டக்கூடிய ,பொருத்தமான பதில்களைக் கொண்டு வர அது தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றது. இது இணையபக்கங்கள், புத்தகங்கள், விக்கிபீடியா போன்று அனைத்து வகையான இணைய உரைகளிலிருந்தும் கிட்டத்தட்ட அரை டிரில்லியன் சொற்களில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது! வேறு எந்த செநு(AI)உம் இதற்கு முன் கற்றுக் கொள்ளாத உரையின் தரவு இதுவேயாகும்
. இந்த மிகப்பெரிய பயிற்சி தரவுத்தொகுப்புடன், GPT-3ஆனது மனித மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய மிகவும் மேம்பட்ட புரிதலைப் பெற்றுள்ளது. இதன்மூலம் புதிய சொற்றொடர்களை உருவாக்கலாம், உரையாடல்களை செய்யலாம், நீண்ட கட்டுரைகளை மூன்றில் ஒன்றாக சுருக்குதல்செய்திடுக ஆகிய பணிகளை மிக எளிதாக செய்திடலாம்,அதனோடு மனிதர்கள் பேசுகின்ற மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எளிதாக மொழிபெயர்க்கலாம் போன்ற பல்வேறு பணிகளைகூட இதன்மூலம் அதிக சிரமமின்றி எளிதாக செய்யலாம். இந்தGPT-3 ஆனது மனிதர்கள்எழுதிடுகின்ற கையெழுத்து , பேசுவதின் நுணுக்கங்களையும் சிக்கலான தன்மையையும் உண்மையாகவே புரிந்து கொள்வதாகத் தெரியவருகிறது. ஒரு எடுத்துக்காட்டினைஇப்போது காண்போம். GPT-3 க்கு பின்வருமாறான அறிவுறுத்தலை நாம் வழங்கிடுவோம்: ‘ஒரு தொலைந்து போன நாய் தனது வீட்டிற்கு செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதைப் பற்றி குழந்தைகளுக்கான ஒரு சிறிய கதையை எழுதுக’. எனக்கோரியவுடன் அதற்கான பதிலாக GPT-3ஆல் உருவாக்கக்கூடிய முடிந்தஅளவு பொருத்தமானதொருகதை பின்வருமாறு:
“மணி எனும் பெயர்கொண்ட நாய் ஒன்று அதிக போக்குவரத்து நெருக்கடியுள்ள பரபரப்பான சாலையில் சோகமாகவும் தனியாகவும் அலைந்து கொண்டிருந்தது. ஏனெனில் அது தன்னுடைய முதலாளியுடன் குடும்பத்தனுருடன் மிகப்பெரிய கடைள் உள்ள சாலைக்கு வந்தபோது தற்செயலாக ஒரு வித்தியாசமாக தோற்றமளித்த ஒரு காரைத் துரத்திச் சென்றதால் தனது முதலாளியின் குடும்பத்தனரிடமிருந்து தொலைந்துபோய்விட்டது ! அதனால் வழக்கமாக அது தன்னுடைய முதலாளியின் குழந்தைகளுடன் விளையாடுவதையும் இரவில் சோபாவில் தூங்குவதையும் தவறவிட்டுவிட்டது.
மணிஎனும் நாய்க்கு தன்னுடைய முதலாளியின் வீட்டிற்கு எந்த வழியில் செல்வது என்று தெரியவில்லை. அது நீண்ட நேரம் அலைந்து திரிந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை,அதனால் தனது முதலாளியின் வீட்டைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் பலரிடமும் உதவி கேட்டது. ஆனால் எல்லோரும் இந்த நாய்க்கு உதவி செய்வதற்காக கவனம் செலுத்த முடியாத அளவிற்கு மிகவும்பிஸியாக இருந்தார்கள். அவ்வாறு அலைந்து திரி்ந்ததால் அந்த மணி எனும் நாய் அதிகபசியும் மிகுந்த சோர்வும் அடைந்தது. இருந்தபோதிலும் தனது முதலாளியின் குடும்பத்தினர் தன்னை விரைவில் எப்படியாவது தன்னைகண்டுபிடித்து அழைத்து சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் நடைபாதையில் படுத்தூங்கியது.
ஆனாலும் அதன்முதலாளியின் குடும்ப உறுப்பினர் யாரும் தன்னை தேடிவரவில்லை என்பதால் மணி எனும் நாய் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தபோது, அந்த நாய்க்கு நன்கு தெரிந்த வழக்கமான சத்தம் ஒன்று கேட்டது -இந்த சத்தம் தனது முதலாளியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஜஸ்கிரீம் கடையிலிருந்து வருவது என்பதையும் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு அருகிலேயே தனது முதலாளியின் வீடு இருப்பதையும் நினைவு கூர்ந்தது.அதனால் மணி எனும் நாயானது தனது முதலாளியின வீடுஇருக்கும் தெரு வரை ஐஸ்கிரீம் கடையின் ஓசையை பின்தொடர்ந்துசென்று தன்னுடைய முதலாளியின்வீட்டை கண்டதும் அந்த நாயினுடைய வால்ஆனது பழக்கமானவர்களை கண்டால் ஆடுவதை போன்று ஆடியது.
உடன் தனது முதலாளியின் வீட்டிற்குள் மிகவேகமாக தாவிகுதித்து ஓடிச்சென்றது அந்த தொலைந்து போன நாயை கண்டதும் முதலாளியின் குடும்பத்தினர் அனைவரும் தொலைந்து போன மணி வந்துவிட்டது எனமகிழ்ச்சியுடன் கூச்சலிட்டனர் மேலும் மணி எனும் நாய் வீட்டிற்குள் வந்ததும் அவ்வீட்டிலுள்ள குழந்தைகள் அதனை கட்டிப்பிடித்து விளையாடினர். இதற்குபிறகு மணி எனும் நாயானது மீண்டும் ஒருபோதும் கானாமல் போக வில்லை, இதன்மூலம் அந்த மணி எனும் நாயானது தான் வெளியில் தனியாக வழிதவறி சுற்றி அலைந்து போதும் தன்னுடைய முதலாளியின் குடும்பத்தினர் தன்னுடன் நெருக்கமாகவும் அன்பாகவும் இருப்பதை உறுதிசெய்துகொண்டது. ஆனால் அது வீட்டிற்கு வந்து சேருவதற்கான வழிமட்டும் தெரியாமல் குழப்பமடைந்தால், தன்னை வழிநடத்த ஐஸ்கிரீம் கடையின் ஓசையை கேட்டு அடையாளம் கண்டுகொள்ளலாம் தெரிந்துகொண்டது. தான் வாழும் இடத்திற்குத் திரும்பிவந்ததில் மணி எனும் நாயானதுமிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.”
GPT-3 ஆல் உருவாக்கப்பட்ட இந்த சிறுவர்களுக்கான கதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது, அல்லவா? கதையின் துவக்கம், உள்ளடக்கம், முடிவு ஆகியன மிகவும் சுவராசியமாக இருக்குமாறு மனிதர்களால் எழுதப்படுகின்ற வழக்கமான சிறுவர்களுக்கான கதைபோன்று மிகத்தெளிவாக உள்ளதல்லவா.இது விளக்கமாக மொழியை , உணர்ச்சியை , வேடிக்கையான குழந்தையுடனான நட்பு விவரங்களைக் கொண்டுள்ளது அல்லவா.
GPT-3 ஆனது மனிதர்களால் எழுதப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதன் மூலம் அவை அனைத்தையும் கற்றுக்கொண்டு தனது நினைவகத்தில் பதிவேற்றி கொண்டது. இந்த கதை சரியானதாக இல்லாவிட்டாலும், அதன் எழுதும் திறன் செநு(AI) க்கு நம்பமுடியாத அளவிற்கு மேம்பட்டுள்ள தல்லவா!
GPT-3க்கான திறன்கள் முடிவற்றவை. இது தந்திரமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம், நீண்ட அறிக்கைகளின் ஒட்டுமொத்துகருத்துகளை தனித்தனி கருத்துரைகளின் கோர்வையாக சுருக்கலாம், நிரலாளர் களுக்கான குறிமுறைவரிகளின் திருத்தங்களை பரிந்துரைக்கலாம் போன்ற பலவற்றை செய்யமுடியும். மனிதர்களைப் போன்றே உண்மை யிலேயே சிந்திக்கவும் அவ்வாறு சிந்திக்கக்கூடிய செநு(AI) க்கு இது ஒரு அடிப்படையிலான படிக்கல்லாகும் என சிலர் நம்புகிறார்கள். Hugging Face’s Transformers நூலகம் போன்ற மேம்பட்ட மொழி மாதிரிகளை அதனோடு GPT-3 உள்ளிட்டதையும் சேர்த்த மாதிரிகளை மேம்படுத்துநர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பயனாளர்களின் ஒத்துழைப்பை வளர்க்கிறது செநு(AI) சமூகத்தில் புதுமைகளை துரிதப்படுத்துகிறது.
GPT-3 இன் பயன்பாடுகள்
GPT-3 போன்ற கருவிகள் பொதுவாக உள்ளடக்க உருவாக்கம், குறிமுறைவரிகளின் உதவி, மொழி மொழிபெயர்ப்பு ,அரட்டையரங்குகளுக்குப் (chatbots) ஆகியவற்றிற்காக பயன்படுத்திகொள்ளப்படுகின்றன. அதனோடு GPT-3 இன் வேறு சில பயன்பாடுகளும் உள்ளன.
பேச்சு ஒருங்கிணைவு: GPT-3 ஆனது உரையிலிருந்து ஒருங்கிணைவாகப் பேசுவதை உருவாக்க முடியும், அது மனிதர்கள் பேசுவதை போன்றே மிகவும் இயற்கையானது, மேலும் சிறந்த ஒலிப்பும் முக்கியத்துவமும் கொண்டது.
இயந்திர மொழிபெயர்ப்பு: GPT-3 இன் நுணுக்கமான பதிப்புகள் முந்தைய மாதிரிகளுடன் ஒப்பிடும்போது மொழிபெயர்ப்புகளின் தரத்தை கணிசமாக மேம்படுத்துகின்றன.
கேள்விகளுக்கான பதில்: இது கேள்விகளுக்கு பொருத்தமானதும் ஒத்திசை வானதுமான பதில்களை வழங்குகிறது, உரை ஆதாரங்களில் இருந்து முடிவுகளை எடுக்கிறது. இது தேடுதல்,கல்வி, ஆராய்ச்சி ஆகிய பணிகளுக்கு உதவியாக இருக்க்கக்கூடும்.
சுருக்கமாகதொகுத்தல்: இது நீண்ட அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள் போன்ற பிற ஆவணங்களில் இருந்து முக்கியமான கருத்துரைகளை சுருக்கமான சிற்றுரையாக வடிகட்டி தொகுக்கின்றது.
புத்தாக்கமும் கருத்துகளை உருவாக்குதலும்: GPT-3 ஆனது கதைகள், கட்டுரைகள், விளம்பரங்கள், உற்பத்தி பொருட்களுக்கானப் பெயர்கள் போன்ற பிற ஆக்கப்பூர்வமான படைப்புகளுக்கான ஆலோசனைகளை உருவாக்கிடுவதற்காகத் தூண்டுகிறது.
GPT-3 இன் செயல்வரம்புகள்
சில பயன்பாடுகளில் இது நம்மனைவரையும் அதிகம் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தாலும், GPT-3 ஆனது பல்வேறு குறைபாடுகளையும் கொண்டுள்ளது, அவை ஏற்புகை வேண்டியவைகளாகும். முதல் பார்வையில், GPT-3 வியக்கத்தக்க திறன் கொண்டதாகத் தெரிகிறது இருந்தபோதிலும்
– மிகைப்படுத்துதல்: மனித-நிலையிளான பேச்சொலி போன்றே செநு(AI)இன் பேச்சு ஒலியும் செயலும் மிகைபடுத்துதல் செய்யப்படுகிறது. ஆனால் நெருக்கமான ஆய்வுகளின் கீழ், அதன் பல்வேறு அடிப்படை பலவீனங்களும் தெளிவாகத் தெரியவருகின்றது. ஏனெனில், பயிற்சியளிக்கப்பட்ட தரவிற்கேற்ப அது போன்றுமட்டும் சிறப்பாக செயல்படுகின்றது.
துல்லியமானதன்று: GPT-3 ஆனது நம்பத்தகுந்ததாக இருக்கும் ஆனால் எப்போதும் துல்லியமானதாக இருக்காது. தகவலின் உண்மையைச் சரிபார்க்கும் திறன் இதற்கு இல்லை, எனவே அதன் பதில்கள் சரியானதா என சரிபார்க்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட பட்டறிவுகளை உருவாக்க இயலாமை: GPT-3 ஆனது தனது தனிப்பட்ட பட்டறிவுகளை அல்லது உணர்ச்சிகளைக் கொண்டிருக்க வில்லை. அதன் சொந்த உணர்வுகள் அல்லது பட்டறிவுகளைப் பற்றி கோரினால், அது தனிப்பட்ட புரிதலை விட இதுவரை தானறிந்துகொண்ட பொது அறிவின் அடிப்படையில் மட்டுமே பதில்களை உருவாக்குகின்றது என தெளிவடையலாம்.
மிகைமையாக்கம்: சில சூழ்நிலைகளில், GPT-3 தேவையானதை விட கூடுதல் தகவலை வழங்கலாம் அல்லது வாய்மொழியிலான பதில்களை உருவாக்கலாம். இது நம்பத்தகுந்ததாக ஒலிக்கும் ஆனால் தேவைக்கு அதிகமாக இருக்கின்ற வெளியீடுகளுக்கு இதுவழிவகுக்கக்கூடும்.
நிகழ்நேரக் கற்றல் இல்லை: GPT-3 ஆனது ஒரு நிகழ்வின் நிகழ்நேரத்தில் கற்கவோ மாற்றமோ செய்வதில்லை. குறிப்பிட்டதொரு பயிற்சி பெற்றவுடன், அடுத்த மேம்படுத்துதலுக்கான பயிற்சி வரை அது நிலையானதாகஅப்படியே இருக்கும். இதுஅதன் முந்தைய பயிற்சி தரவிற்கு பிறகு புதிய தகவல் அல்லது பட்டறிவுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது.
பைத்தானைக் கொண்டு GPT-3 ஐ உருவாக்குதல்
இப்போது முனையத்தில் GPT-3 ஐ உருவாக்குவது பற்றி விவாதிப்போம். இதற்காக, கணினியை இயக்கி, நமக்குப் பிடித்தமான நாம் விரும்புகின்ற IDE ஐத் துவங்கிடுக. இங்கு விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளைப் பயன்படுத்தி, main.py என்ற கோப்பை உருவாக்கி, குறிமுறைவரிகளைத் துவங்கிடுவோம்.
படம்-2
இதற்கான முன்நிபந்தனைகள்:
OpenAI GPT-3 API திறவுகோள்: OpenAI இணையதளத்தில் (beta.openai.com/signup/) GPT-3 APIக்கான அணுகுதலுக்கு பதிவு செய்ய வேண்டும். பதிவுஏற்புகை செய்யப்பட்டதும், API இன் திறவுகோளைப் பெற்றிடலாம்.
பைதான்: கணினியில் பைதான் எனும் கணினி மொழி நிறுவுகை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.
GPT-3 உடன் எளிய அரட்டையரங்கை (chatbot) உருவாக்குதல்
தேவையான தகவமைவுகளை நிறுவுகைசெய்திடுக: கணினியைமுனைமத்தில் அல்லது கட்டளை வரியில் திறந்திடுக. OpenAI பைதான் நூலகத்தை நிறுவுகைசெய்திடுவதற்காக pip3 install openai அல்லது (கணினியில்உள்ளவாறு) pip install openai என தட்டச்சு செய்திடுக. தொடர்ந்து தகவமைவானது (module) வெற்றிகரமாக நிறுவுகைசெய்யப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் செய்தியை திரையில் பெற்றிடுக. அவ்வாறு முடிந்ததும், நாம் கணினியில் பைத்தானை நிறுவுகைசெய்துள்ளோமா இல்லையா என்பதை சரிபார்க்க மீண்டும் ஒருமுறை அதற்கான கட்டளைவரியை தட்டச்சு செய்திடுக.
அதாவது OpenAI பைதான் நூலகம் கணினியில் நிறுவுகை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிந்துகொள்க. GPT-3 உட்பட OpenAI இன் மொழி மாதிரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு இந்த நூலகம் வசதியானதொரு வழியைஇது வழங்குகிறது. இது OpenAI இன்API க்கு கோரிக்கைகளை அனுப்புதல், பதில்களைக் கையாளும் செயல்முறையை எளிதாக்குகிறது.
படம்-3
புதிய கோப்பு ஒன்றினை உருவாக்கிடுக: பைதான் உரைநிரலை உருவாக்கிடுக; நாம் விரும்பியவாறு அந்த கோப்பிற்கு ஒரு பெயரிடுக (எ.கா., main.py), GPT-3 உடன் தொடர்பு கொள்ள OpenAI பைதான் நூலகத்தைப் பயன்படுத்திகொள்ளலாம். இப்போது குறிமுறைவரிகளுடன் நம்முடைய புதிய பணியை துவங்கிடலாம். முதலில், நாம் ஏற்கனவேபெற்ற API திறுவுகோளினை கட்டளைவரி 3 இல் ஒட்டிடுக. துவக்கத்தில், ‘generate_response’ எனப்படும் செயலியை நாம் அறிவித்துள்ளோம், இது ஒரு நினைவூட்டுதூண்டுதலை உள்ளீடாக எடுத்துக் கொண்டு, அந்நினைவுட்டு தூண்டுதலின் அடிப்படையில் OpenAI பயன்படுத்தி பதிலிற்கான API உருவாக்குகின்றது. இது தன்னால் உருவாக்கப்பட்ட பதிலை வெளியீடாக வழங்குகிறது.
செயலியின் குறிமுறைவரிகளின் தகவமைவு பின்வருமாறு:
def generate_response(prompt):
response = openai.Completion.create(
engine=”davinci-codex”,
prompt=prompt,
max_tokens=150,
n=1,
stop=None
)
return response.choices[0].text.strip()
நாம் இதைச் செய்தவுடன், இது பயனாளர் உள்ளீட்டை ஒரு வரியில் சேகரித்து வெளியீட்டுடன் முடிக்க வேண்டிய நேரமாகும். இதை அடைய, ‘chat_with_bot()’ எனப்படும் மற்றொரு செயலியை அறிவித்து, பயனாளருடன் அதற்கான முடிவு பகிர்ந்துகொள்ளப்பட்டவுடன், நிபந்தனையை ஒரு மடக்கியில் செயல்படுமாறு செய்திட, while எனும் மடக்கியுடன் செயல்படுவேண்டும். அதைச் செய்ய, ‘while True:’ என்ற தொடரியல் கொண்ட ஒரு சுழற்சியை அறிவித்திடுக, மேலும் ‘chat_with_bot()’ எனும் செயலியின் உள்ளே ஒரு எளிய அரட்டையரங்கைச் செயல்படுத்துகின்ற பைதான் செயலி உள்ளது. இது பயனாளரின உள்ளீட்டை எடுத்துகொள்கிறது, OpenAI ஆனதுCodex API ஐப் பயன்படுத்தி பதிலை உருவாக்கி பணியகத்திற்கான பதிலை அச்சிடுகிறது. பயனாளர் ‘exit’. என தட்டச்சு செய்திடும் வரை அரட்டையரங்கானது தொடர்ந்து பயனாளருடன் தொடர்ந்து தொடர்பு கொள்கிறது.
அதாவது இது முதலில் பணியகத்திற்கு வாழ்த்து செய்தியை அச்சிடுவதன் மூலம் இந்த செயலியானது தன்னுடைய பணியை துவங்குகிறது. தொடர்ந்து பயனாளர் ‘exit’. என தட்டச்சு செய்திடும் வரை இது ஒரு while எனும் சுழற்சியில் நுழைந்து செயல்படுகிறது. இ்நத while எனும் சுழற்சியின் உள்ளே, input எனும் செயலியைப் பயன்படுத்தி பயனாளரை உள்ளீடு செய்திடத் தூண்டுகிறது. பயனாளர் ‘exit’. என தட்டச்சு செய்தால்,இந்த செயலியானது ஒரு “goodbye” என்ற செய்தியை அச்சிட்டு இந்த சுழற்சியில் இருந்து வெளியேறுகின்றது. இல்லையெனில், இது பயனாளர் உள்ளீட்டை ‘User:’ என்ற சரத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு நினைவூட்டு தூண்டுதலை உருவாக்குகிறது மேலும் அதை ‘prompt’எனும்மாறி க்கு ஒதுக்குகிறது. இது OpenAIஆனது Codex API ஐப் பயன்படுத்தி ஒரு பதிலை உருவாக்க, நினைவூட்டு தூண்டுதலை ஒரு தருக்கமாக கடந்து, ‘generate_response’ எனும் செயலியை தனக்கு துனையாக அழைக்கிறது. பதில் API ஆனது மறுமொழியின் பொருளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு பதிலின் மாறிக்கு ஒதுக்கப்படுகிறது. பதிலானது பணியகத்தில் ‘Chatbot:’.. என்ற முன்னொட்டுடன் அச்சிடப்படுகிறது.
செயலியின் குறிமுறைவரிகளின் தகவமைவுபின்வருமாறு:
def chat_with_bot():
print(“Chatbot: Hi there! Ask me anything or just chat with me.”)
while True:
user_input = input(“You: “)
if user_input.lower() == ‘exit’:
print(“Chatbot: Goodbye!”)
break
prompt = f”User: {user_input}\nChatbot:”
response = generate_response(prompt)
print(f”Chatbot: {response}”)
மிக இரத்தின சுருக்கமாக கூறுவதெனில், நம்முடைய முழுமையான குறிமுறைவரிகளின் தகவமைவானது படம்-4இல் கொடுக்கப்பட்டுள்ள குறிமுறைகளை போன்றே இருக்க வேண்டும்,
படம்4
மேலும்இந்த குறிமுறைவரிகளில் எந்த தொடரியல் பிழையையும் காண்பிக்கக்கூடாது. அனைத்தும் மிகச்சரியாக நடந்தால், அரட்டையரங்கிலிருந்து பதிலைப் பெற நாம் தயாராக இருக்கிறோம் என்பதாகும். எனவே ‘python3 main.py’ (சில நேரங்களில் ‘python bot.py’ அல்லது ‘py bot.py’ போன்றவையும் செயல்படும்) கட்டளையைவரியை தட்டச்சு செய்து இந்தஅரட்டையரங்கினை இயக்கிடுக. அதனால், கணினியில் பைதான் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்க. இவையனைத்தையும் நாம் மிகச்சரியாகச் செய்திருந்தால், greeting எனும் வெளியீட்டைப் திரையில் பெற்றிடலாம். chatbot ஐ உருவாக்க OpenAI இன் GPT-3 குறிமுறைவரிகளை எவ்வாறு இணைக்கலாம் என்பதற்கான அடிப்படை எடுத்துக்காட்டு இதுதான் என்பதை நினைவில் கொள்க.
முக்கிய குறிப்புகள்
OpenAI இலிருந்து நாம் பெற்ற உண்மையான API திறவுகோளினை ‘SK_API_KEY’ என்றவாறு மாற்றியமைத்துகொள்க.
விரும்பிய அரட்டையரங்கின் நடத்தையை அடைய வெவ்வேறு தூண்டுதல்கள், கணினிகள் அளவுருக்கள் ஆகியவற்றின் மூலம் பரிசோதனை செய்து சரிபார்த்து கொள்க.
இவ்வாறு அரட்டையரங்குகளை உருவாக்கி பயன்படுத்திகொள்ளும்போது OpenAI இன் பயன்பாட்டுக் கொள்கைகள் , வழிகாட்டுதல்களின் நெறிமுறைகளைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்க.
இதன் மேம்படுத்துதல்கள் மேலும்தொடர்கின்றன என்பதை நினைவில் கொள்க; எனவே ஏதேனும் மாற்றங்கள் அல்லது கூடுதல் வசதிகளுக்கு சமீபத்திய OpenAI இன் ஆவணத்தைப் பார்த்து தெரிந்து கொள்க
GPT-3 மூலம் எடுத்துக்காட்டப்பட்ட செநு(AI) இன் திறனானது தொழில்நுட்பம், வணிகம் , சமூகம் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. எதிர்கால மறு செய்கைகளை நாம் எதிர்நோக்கும்போது, பலதன்னார்வாளர்களின் கூட்டு முயற்சிகள், நெறிமுறைக் கருத்தாய்வுகள் ஆகியவை நமது உலகில் உருவாக்க AI இன் மாற்றத்தக்க தாக்கத்தை வடிவமைக்கவிருக்கின்றன.