விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். முதல் முறையாக, நவம்பர் 14, 2010 அன்று பல்வேறு இந்திய விக்கித் திட்டங்களில் இதனைச் சோதித்துப் பார்த்தோம்.
செப்டம்பர் 30, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாவது விக்கி மாரத்தான் நடைபெறுகிறது. செப்டம்பர் 30, காலை UTC நேரம் 00:01 தொடங்கி 23:59 வரை கணக்கில் கொள்ளலாம். அன்றைய நாளின் பங்களிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் பொதுவாக உரையாடவும் அன்று UTC நேரம் 14.30 முதல் 16.30 வரை கூகுள் hangout மூலம் இணையக் கூடல் ஒன்றும் நடைபெறும்.
இரண்டாவது தமிழ் விக்கி மாரத்தான்
‘நாள்’: ஞாயிறு, செப்டம்பர் 30, 2012 24 மணி நேரமும் (UTC)
(குறிப்பிட்ட நாள் அன்று பங்களிக்க இயலாதவர்கள் அதற்கு முன்போ பின்போ ஓரிரு நாட்களில் பங்களிக்க முடிந்தாலும் நன்றே )
இடம்: உங்கள் கணினி இருக்கும் இடம் 🙂 அல்லது அன்று விக்கி சந்திப்புகள் நடக்கக்கூடிய இடங்களில் இருந்து.
என்ன வகையான பங்களிப்புகளைத் தரலாம்?
- உங்கள் விருப்பம் போல்.
- பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவுக்கு உதவலாம்.