உபுண்டு மென்பொருள் மையம்

 

இந்த, கட்டுரையில், உபுண்டு மென்பொருள் மையம்(Ubuntu Software Center) செய்ய முடியும் விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம். உபுண்டு பயன்படுத்தி  இருந்தால், உபுண்டு மென்பொருள் மையம் பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் பயன்பாடுகளை(Applications) சேர்க்க அல்லது நீக்க இது பயன்படுகிறது. உங்கள் உபுண்டு ல் நிறுவப்பட்ட மென்பொருள்களைப் பார்த்தல் மற்றும் மாற்றுதல், மேம்படுத்துதல், நீக்குதல் மற்றும் அனைத்தையும் பற்றி வரலாற்றில் பெற முடியும். 

 

உபுண்டு மென்பொருள் மையம் திறக்க: 

 Go to Applications>Ubuntu Software Center இது திறக்க சிறிது நேரம் பிடிக்கும். 

 உபு  ண்டு மென்பொருள் மையம் இவ்வாறு காட்சியளிக்கும்.

Image031

 

  

 

மென்பொருள்களை  நிறுவ:

 

            உங்கள் முகப்புத்திரையில் உபுண்டு window திறந்தவுடன் Get Software பிரிவில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கும். மேலும் புதிய மென்பொருட்களையும், அதன் சிறப்புகளையும் மற்றும் மேலும் சில  ஸ்லைடுகளை காட்டுவதையும் பார்க்க முடியும். குறிப்பிட்ட பிரிவுகள் மீது க்ளிக் செய்தவுடன் அப்பிரிவிலுள்ள மென்பொருள்களை ஆராய்ந்து பட்டியலிடும்.

 

            மேலும், நீங்கள் வலது புறம் தேடல் பெட்டியில் மென்பொருளின் பெயரை பயன்படுத்தி தேடலாம். நீங்கள் கிளிக் செய்த பிறகு, உங்கள் விருப்பத்திற்கேற்ப மென்பொருட்களைப் பற்றி நிறைய தகவல்களை பார்க்க மற்றும் நிறுவ முடியும். மேலும் தகவல் திரைக்காட்சிகளுடன் உட்பட மென்பொருள் பற்றிய விவரங்களை அளிக்கிறது. பிறகு, நீங்கள் மென்பொருள் நிறுவ தயாரானவுடன், install என்பதை கிளிக் செய்யவும், நீங்கள் உங்கள் கடவுச்சொல்லினை அளித்து அங்கீகரிக்க வேண்டும் பிறகு மென்பொருள் உங்கள் உபுண்டு கணிணியில் நிறுவப்படும்.

 

மென்பொருள் பார்வையிட மற்றும் அதை நீக்க :

 

 நீங்கள் நிறுவிய மென்பொருட்களை பார்ப்பதற்கு Installed Softwares என்பதை கிளிக் செய்யவும். பிறகு நீங்கள் Linux கணிணியில் நிறுவப்பட்ட மென்பொருள் பார்க்க முடியும்.

 மேலும் நீங்கள் மென்பொருள் பற்றிய தகவல்களை பார்க்க முடியும், மேலும் அதனை நீக்குவதற்கான பொத்தான் இருக்கும். அதனை கிளிக் செய்து மென்பொருளை நீக்க முடியும்.

 

 

நீங்கள் வரலாறு அல்லது மென்பொருள் மாற்றங்களை சரிபார்க்க இயலும். நீங்கள் மென்பொருள் நிறுவிய, நீக்கிய, மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேதியினையும் காண இயலும். Edit மெனுவின் கீழ் மென்போருள் மூலங்களை(Software Sources) விருப்பத்தேர்வினைக் காண முடியும்.

 

 

சரவணன், காஞ்சிபுரம் பச்சையப்பன் கலை அறிவியல் கல்லூரியில் B.Sc Computer Science இறுதி ஆண்டு படிக்கிறார்.

மின்னஞ்சல்  :   seesaravana7@gmail.com

 

 

கோப்புகளின் வடிவமைப்பு

 

    உபுண்டு பயன்படுத்த ஆரம்பிக்கும் ஒவ்வொரு புதிய பயனருக்கும் ஆரம்பத்தில் உபுண்டுவின் ஆவணங்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கும்.

     Linux-ன் ஆவண வடிவமைப்பு முதலில், குறிப்பாக விண்டோஸ் பயனருக்கு, கடினமாக இருக்கும்.

    

    முக்கிய கோப்புகளின் பட்டியலுடன், அவைகள் என்னென்ன என்பதையும் சுருக்கமாக இங்கே கூறப்பட்டுள்ளன.

   

    /      (Forward Slash) இது உபுண்டு இயங்குதளத்தின் முதல் மற்றும் அடிப்படையில் வரும் மற்ற ஆவண கோப்புகள் அனைத்தும் இதனுள் வைக்கப்பட்டிருக்கினறன.

   

    /root      இங்கு root என்பது உபுண்டு இயங்குதளத்தை நிர்வகிப்பதற்கு உபுண்டுவால் உருவாக்கப்பட்ட ஒரு பயனர்(Administrative User) ஆகும். root user என்பது உங்கள் கணிணியின் கடவுள் ஆகும். ஏனெனில் root-ஆனது உங்களின் முழு filesystem- நீக்குதல் போன்று எது வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆதலால் root user-ஆக செயல்படும்போது கவனமாக இருக்க வேண்டும். 

     /bin       Linux-ன் அனைத்து program-களும் இங்கு இருக்கும். இவையனைத்தும் binary வடிவிலான file-ஆக இருக்கும். அதாவது கணிணியால் மட்டுமே read செய்யக்கூடிய file-ஆக இருக்கும். இதிலுள்ள file-களைப் பற்றி அறிய வேண்டுமெனில் Applications -> Accessories -> Terminal சென்று $ man <binay_filename> என்பதை கொடுத்தால் அதை பயன்படுத்தும் வழிமுறைகளைக் காணலாம்.

       

    /etc       இங்கு linux-ன் நிர்வாக பயன்பாடுகள் மற்றும் configuration file-கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்குஇ நீங்கள் apache2 மென்பொருளை நிறுவியிருந்தால், அதன் configuration file-களை /etc/apache2 என்ற இடத்தில்

               

    /dev       இங்கு கணிணியின் கருவிகளை கட்டுப்படுத்தகூடிய file-கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குதான் உபுண்டுவானது மற்ற கருவிகளின் இணைப்பிணை பற்றி கொடுக்கப்பட்டிருக்கின்றன.

   

    /home      இங்கு root user- தவிர, மற்ற பயனரின் தரவுகள் அனைத்தும் தேக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பயனரின் பெயரில் தனித்தனி கோப்புகள் உருவாக்கப்பட்டு, அதனுள் அந்தந்த பயனருக்கான Config file-கள் மற்றும் Desktop கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும்.

                               

    /tmp       இது தற்காலிக தரவுகளின் கோப்பு ஆகும். அதாவது ஒன்று (அ) இருமுறை பயன்படுத்திய பிறகு, program-களுக்கு தேவைப்படாத file-கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு linux system-களானது குறிப்பிட்ட இடைவெளியில் /tmp கோப்பில் உள்ளவற்றை தானாகவே அழித்து விடுகிறது.

 

    /opt       இங்கு உங்கள் விருப்பத்திற்கேற்ற program-கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் ஏதாவது புதிய மென்பொருளை நிறுவி, அதனை மறுபடியும் நீக்கினால் system-ல் உள்ள மற்ற எந்த மென்பொருளையும் பாதிக்காது.அதாவது, ஒரு program/application-ன் அனைத்து தரவுகள் மற்றும் library-கள் இந்த ஒரே இடத்திலேயே வைக்கப்படுகின்றன.

 

    /media     சில வழங்கல்கள் USB வட்டுகள், cd/dvd-கள் மற்றும் வேறுவகையான filesystem-களை இந்த கோப்பில் mount செய்யப்படுகின்றன.

  

 Image033

 

/usr       /bin (அ) /etc கோப்பில் வைக்க முடியாத games, printer மென்பொருள் போன்ற கூடுதல் பயன்பாடுகளை நீங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. /usr- அதன் தேவையைப் பொறுத்து சில பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. அதாவது, program-களுக்காக /usr/bin என்றும், sound file-கள் (அ) பணிக்குறிகள் போன்ற பங்கிடப்பட்ட தரவுகளுக்காக /usr/share என்றும், நேரடியாக இயக்கமுடியாத library-கள், ஆனால் மற்ற program-களை இயக்க அவசியமான library-களை /usr/lib என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. package manager (Ubuntu Software Center)ஆனது /usr-ல் உள்ள தரவுகளை கவனித்துக்கொள்ளும்.

               

 

 

    மேலும் மற்ற சில ஆவண கோப்புகள் இருக்கின்றன. அவற்றில் சில

                   

    /usr/local/         நீங்கள் உங்கள் Ubuntu Software Center- பயன்படுத்தாமல், தனியாக நிறுவிய மென்பொருள்கள் அனைத்தும் இங்கே சென்று உட்காருகின்றன. இது /usr போன்று அதே வடிவமைப்பை பெற்றிருக்கின்றன. பொதுவாக /usr/local-ல் இருப்பவைகள் முக்கியமாக கருதப்படாததால் உங்களின் தனித்த file-கள் மற்றும் script-களை இங்கே வைக்க முடியும்.

               

 

   

            இப்போது நீங்கள் அனுபவம் பெற்ற linux பயனரைப் போன்று உங்களைக் கருதிக்கொள்ளலாம். இந்த கோப்பு வடிவமைப்பு முதலில் குழப்பமாக இருந்தாலும், சிறிய பயன்பாட்டிற்கு பிறகு இயல்பானதாக மாறிவிடும்.

  

  

 


 செல்வமணி சம்பத், இணைய தள வல்லுநர், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

Image030

 

    மின்னஞ்சல்      :    selva.infobees@gmail.com

    வலை                  :  infobees.wordpress.com

 

  

 

 

 

%d bloggers like this: