நாள் : 33
தினமும் லினக்ஸ் அப்டேட்டுகளை செய்து நிகழ்நிலையில் வைத்துக்கொள்வது கார்த்தியின் வழக்கம். இன்றைக்கான அப்டேட்டினை நிறுவ 200 MB தரவு தேவைப்பட்டது. எதற்காக இத்துணை பெரிய அப்டேட்டுகள் வருகின்றன என்று sudo apt update கட்டளையை சொடுக்கி அறிந்துகொள்கிறான்.
அப்போதுதான் அவனுக்கு ஒரு புதுமை தெரிந்தது லினக்சு இயங்குதளத்தில் தேவையான அத்தியாவசிய அப்டேட்டுகள் எல்லாம் 2 MB,5 MB என்ற சிறிய அளவில்தான் இருந்தது. ஆனால் சில மென்பொருள்களின் அப்டேட்டுகள் மட்டும் அதிக தரவினை தரவிறக்குவதாக தெரிந்தது. கார்த்தி காலையிலிருந்து மொபைலில் ரீல்ஸ் பார்த்து தீர்த்துவிட்டதால் தரவும் பெரிதாக இல்லை. தினமும் லினக்ஸ் அப்டேட்டுகளை செய்யவேண்டும் என்ற எண்ணமும் மாறவில்லை.
கார்த்தி Ubuntu பயன்படுத்துவதால் apt கட்டளையில் வேறு துணைக்கட்டளை எதேனும் இருக்கிதா என தேடினான்.
ஒரு கட்டளை கிடைத்தது அதுதான் apt-mark.
apt-mark கட்டளையில் 3 தெரிவுகள் உள்ளன. man கட்டளையில் அவற்றை படித்து தெரிந்துகொண்டு பின்வருவனவற்றை இயக்கினான்.
sudo apt-mark hold code firefox
கடவுச்சொல்லினை கேட்டு அந்த நிரல்பொதிகளின் அப்டேட்டுகளை மட்டும் இயக்காதவாறு கட்டுபடுத்தினான்.
பின்னர்
sudo apt-mark showhold கட்டளையினை பயன்படுத்தி கடந்த கட்டளையில் கொடுக்கப்பட்ட நிரல் பொதிகளின் பெயர்கள் காட்டுகிறதா என சரிபார்த்து விட்டு அன்றைக்கான அப்டேட்டினை நிறுவி முடித்தான். என்ன ஆச்சரியம் வெறும் 5 MB க்களில் அன்றைக்கான பாதுகாப்பு மற்றும் லினக்ஸ் அப்டேட்டுகளை முடித்துவிட்டான்.
தொடரும்…
தொடரியல் :
அப்டேட்டினை தற்காலிகமாக நிறுத்த
sudo apt-mark hold <packagename1> <packagename2> ….
நிறுத்திய அப்டேட்டினை மீள்தொடர
sudo apt-mark unhold <packagename1> <packagename2> ….
தற்காலிகமாக அப்டேட் நிறுத்தப்பட்ட பொதிகளை பார்க்க
sudo apt-mark showhold
நன்றி !
இவன்
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com