[Tinkering] pulseaudio basic tuning for noiseless music in headphones with pavucontrol

By | September 6, 2025

 ஹெட்செட்டில் ஒரே இரைச்சல் குறைப்பது எப்படி ?

ஹெட்செட்டில் பாடல்கள் கேட்டு பல நாட்கள் ஆயிற்று.  என்னுடைய லினக்ஸ் கணினியில் இசை இசைக்க துவங்கினேன். முழு ஒலியளவையும் வைக்க வில்லை ஆனால் பாடல் இரைச்சலுடனே இருந்தது. சரியென்று ஹெட்செட்டை கழற்றிவிட்டு பாடலை இயக்கினேன். அப்போது பாடல்கள் சரியாக ஒலியளவில் ஒலித்தது. ஹெட்செட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று அதை திறன்பேசியில் இணைத்து சோதித்தேன். அதிலும் சரிவரவே இசைத்தது.

என்னடா புது கணினிக்கு வந்த சோதனை என்று ஒரு சிறு புலம்பல்.

சரி வேறு ஹெட்செட்டினை பயன்படுத்திப் பார்த்தேன் அதிலும் அதே சிக்கல்.

சற்று இணையத்தில் இது குறித்து தேடினேன்.

அப்போது தான் pulseAudio எனும் மென்பொருள் குறித்து படித்தேன்.

அது லினக்ஸ் கணினி அமைப்புகளில் ஒலி அமைப்புகளினை சீர்படுத்தி நிர்வகிக்க உதவும் இடையீட்டு(middleware) மென்பொருள்.

 

அதனை நிறுவ

sudo apt install pavucontrol எனும் கட்டளையினை பயன்படுத்தி நிறுவிக்கொள்ளவும். பின்னர் கட்டளை வரியின் pavucontrol கட்டளையினை உள்ளிட்டோ அல்லது search செய்தோ திறந்தால் பின்வரும் சாளரம் திறக்கும்.

சாளரத்தில்  Output Devices மற்றும் Playback பட்டியில் ஒலியின் அளவு 100% ற்கும் அதிகமாக இருந்தாதால் இனிய இசையும் இரைச்சலாக இருந்தாது. அந்த அமைப்பினை சுட்டியைப் பயன்படுத்தி 100% என வைத்ததும். இசையின் இனிமை காதினை அடைந்தது.

நன்றி!

இவன்

ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

Leave a Reply