லினக்ஸின் இந்தஆறு கட்டளைகள் இல்லாமல் நம்முடைய அன்றாட பணிகள் எதையும் செய்ய முடியாது

By | September 28, 2025

கட்டளை வரி இல்லாமல் லினக்ஸைப் பயன்படுத்தலாம் என்றுஅடிக்கடி கூறுவார்கள்,. பலபத்தாண்டுகளாக லினக்ஸை கட்டளை வரிகளை முழுமையாகப் பயன்படுத்தி வருபவர்என்றாலும், திறமூல இயக்க முறைமையை முயற்சிக்க நினைப்பவர்களிடம் அது தேவையில்லை என்றுஅடிக்கடி கூறப்படுகின்றது.. உண்மையாகவே.விரும்பினால், கட்டளை வரியை முழுவதுமாக விட்டுவிடலாம். கண்டிப்பாக, நாம் பயன்படுத்திகொண்டுவருகின்ற சில கட்டளைகளை மாற்றிடுவதற்கு பொருத்தமான வரைகலை பயனர் இடைமுகப்பு(GUI) பயன்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது, ஆனால் அதையும் செய்ய முடியும். இருந்தபோதிலும் ஒரு கட்டத்தில்,லினக்ஸின் கட்டளைவரிகளை எப்படியும் கற்றுக்கொள்ள விரும்பலாம் இந்த கட்டளைவரிகள் இல்லாமல் நம்முடைய அன்றாட பணிகளை செய்துமுடிக்கமுடியாது .அவ்வாறானநிலையில், பின்வருமாறான ஆறு கட்டளைவரிகளை தெரிந்து கொள்ள விரும்பவோர்கள் தொடர்ந்து படித்திடுக.
1. SSH
எந்த தயக்கமும் இல்லாமல், இந்தக் கட்டளையானது முதலில் நினைவுக்கு வருவது. ஏன்? சில செய்திகளைக் கவனித்துக் கொள்ள நாம் வழக்கமாக தொலைதூர அமைப்புகளுக்குள் SSH செய்ய வேண்டும். ஆமாம், இன்னும் கட்டளைகளைப் பயன்படுத்துகின்றோம் (தொலைதூர கணினியில்) என்பதை உணர்கின்றோம், எனவே முனையத்தைத் தொடாமல் செல்லலாம் என்ற நமது விவாதம் அங்கேயே முடிந்துவிடுகிறது. ஆனால் புதிய லினக்ஸ் பயனர்கள் கவலைப்பட வேண்டிய சிறப்பு சந்தர்ப்பங்கள் அவை (அதாவது, தொலைதூர சேவையாளரை நிர்வகிப்பது). SSH என்பதுஒவ்வொரு நாளும், நாள் முழுவதும் பயன்படுத்தும் கட்டளைகளில் ஒன்றாகும். SSH இல்லாமல், சாத்தியமில்லாத சில சூழ்நிலைகள் உள்ளன, எனவே இந்த கட்டளை கண்டிப்பாகத் தேவையாகும் இது இல்லாமல் வாழ முடியாதவற்றின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2. chmod
பணிகளை தானியக்கமாக்குவதற்கும் பிற செயல்களைச் செய்வதற்கும் பாஷ் ஸ்கிரிப்ட்களை எழுதிடுவார்கள். ஒரு உரைநிரலை எழுதிய பிறகு, செய்யும் முதல் செயல்களில் ஒன்று chmod உதவியுடன் அதற்கு இயங்கக்கூடிய அனுமதியை வழங்குவதாகும். chmod u+x கோப்பின் பெயருடன், அந்த கட்டளையை ./filename உடன் இயக்க முடியும். அந்த உரைநிரலை /usr/local/bin க்கு நகர்த்தி எங்கிருந்தும் இயக்கலாம் (./ இல்லாமல்). ஆம், சில கோப்பு மேலாளர்களிடமும் அதையே செய்ய முடியும், ஆனால் அந்த பாஷ் ஸ்கிரிப்ட்களுக்கு இயங்கக்கூடிய அனுமதிகளை வழங்குவது கட்டளை வரியிலிருந்து எளிதானது.கண்டிப்பாக, chmod என்பது ஒரு கோப்பிற்கு இயங்கக்கூடிய அனுமதிகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாது. கோப்புகளின் படிக்க, எழுத அனுமதிகளையும் நிர்வகிக்கலாம், இது மிகவும் எளிது (குறிப்பாக பல பயனர்கள் உள்நுழையும் கணினியில் இருக்கும்போது).
3. kill/killall
kill அல்லது killall எனும் கட்டளைகளை செயல்படுத்துவது யாருக்கும் பிடிக்காது, ஆனால் ஒரு பயன்பாடு முரட்டுத்தனமாக மாறும்போது, இது கண்டிப்பாக தேவையாகும். ஒரு பயன்பாடு பதிலளிக்காதபோது, அது பொதுவாக கணினி வளங்களை உறிஞ்சுவதோடு சேர்ந்து கொள்ளும். அந்த பயன்பாடு மீதமுள்ள CPU/RAM அனைத்தையும் உட்கொண்டால்,கணினி பதிலளிக்காமல் போகலாம், இது கடினமான மறுதொடக்கத்திற்கு வழிவகுக்கும், அல்லது அத்தகைய செயலைத் தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கும் முன், இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க kill அல்லது killall கட்டளையைப் பயன்படுத்திடலாம். இந்த இரண்டு கருவிகளையும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்திட தேவையில்லை, ஆனால் ஒரு செயலியில் ஏதாவது தவறு நடந்தால், கணினியின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதில் இந்த இரண்டு கட்டளைகளும் அவசியமாகும்.
4. dmesg
செயல்கள் தவறாகப் போகும்போது இது கண்டிப்பாக தேவை என்று கருதும் மற்றொரு கட்டளையாகும். Dmesg உருவாக்கமைய வட்ட இடைநிலை நினைவகத்திலிருந்து மீட்டெடுக்கப்படும் உருவாக்கமையம் தொடர்பான செய்திகளைக் காட்டுகிறது. இது வழங்கும் தகவல் வன்பொருள் தொடர்பான பிழைகளை சரிசெய்வதை சாத்தியமாக்குகிறது. வன்பொருளின் ஒரு பகுதி தோல்வியடைகிறது அல்லது சிக்கல்களைக் கொண்டுள்ளது என்று நம்பும்போது முதலில் திரும்புவது இந்தக் கட்டளைதான், ஏனெனில் இது கணினியின் பிழைகள், சாதனப் பிழைகள் , இணைக்கப்பட்ட விரலி(USB) சாதனங்கள் பற்றிய தகவல்களைத் தாவல்களாக வைத்திருக்கிறது. dmesg உடன் மென்பொருள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கப் போவதில்லை, ஆனால் வன்பொருளைப் பொறுத்தவரை, dmesg ஐ வெல்வது கடினம். dmesg கட்டளையை இயக்க நிர்வாகியின் சலுகைகள் தேவை என்பதை நினைவில் கொள்க, எனவே அதை sudo உடன் பயன்படுத்திடுக.
5. grep
ஒரு கோப்பின் உள்ளடக்கங்களைப் பார்த்து, எழுத்துகளின் சரத்தைத் தேட வேண்டி யிருக்கும் போது,எப்போதும் grep-ஐத்தான் பயன்படுத்திடுவார்கள் grep-ஐப் பயன்படுத்தும்போது, உள்ளமைவு கோப்புகளிலோ அல்லது வேறு எந்த வகையான உரைக் கோப்பிலோ எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஒரு கோப்பு நீளமாக இருக்கும்போது, ஒரு உரைவடிவிலான சரத்தை கைமுறையாகத் தேடும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். grep-ஐப் பயன்படுத்தும்போது, அந்த சரத்தை (அல்லது அந்த சரத்தின் ஒவ்வொரு நிகழ்வையும்) விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். grep எனும்கட்டளைஒவ்வொரு நாளும் பயன்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அதைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வரும்போது அது இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி யடைந்திடுவோம்.
6. ping
லினக்ஸ் செயல்படுகின்ற கணினியில் வலைபின்னலில் சிக்கல் இருக்கும்போது, முதலில் திரும்புவது ping-ஐத்தான். வலைபின்னலின் இணைப்பு இன்னும் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி சரிபார்க்க முடியும், ஆனால் ping நேரங்களையும் சரிபார்க்க முடியும். ping நேரங்கள் மிக அதிகமாக இருந்தால், DNS அல்லது நுழைவாயிலில் ஏதோ தவறு இருக்கலாம். LAN இல் ஒரு கணினியை ping செய்து, ping நேரங்கள் இயல்பாக இருந்தால், கணினியில் வன்பொருள் சிக்கல்களை நிராகரித்து DNS இல் கவனம் செலுத்த முடியும். பின்னர் DNS சேவையகங்களை மாற்றலாம், மற்றொருping சரிபார்ப்பினைச் செய்யலாம், அது உதவுமா என்று பார்க்கலாம். மேலும் ping ஆனதுபயன்படுத்த எளிதானது (aka ping google.com), சிக்கலான கட்டளைகளைக் கற்றுக்கொள்வது அல்லது அனைத்து வகையான ஆடம்பரமான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சில நேரங்களில்ரு பிணைய இணைப்பை (குறிப்பாக ஒரு தடையை) சரிசெய்தால், சிக்கலைச் சரிசெய்திடும் போது ping கட்டளையை இயக்குவதை விட்டுவிடுவார்கள் திரும்பும்போது (அல்லது pingநேரங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது), பெரும்பாலும் சிக்கலைத் தீர்த்துவிடுவார்கள்.

 

Leave a Reply