டொரண்டோ பல்கலைக்கழகத்தின் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கு

வணக்கம்,

கனடா டொரண்டோ நகரில் உள்ள, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகத்தில் சனிக்கிழமை, சனவரி 24, 2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாட்டம் மற்றும் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்குக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

 

இக்கருத்தரங்கில் பல்துறை ஆய்வாளர்கள், நூலகவியலாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும், பேராசிரியர் சனாதனன் அவர்களின் சிறப்புப் பேருரையும் இடம்பெறும்.

நூலகம் – தொழில்நுட்பம் – தமிழியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் பின்வரும் தலைப்புகளில் ஆய்வுகள் முன்வைக்கப்படும்:

  • விழியாகிடும் தொழில் நுட்பங்கள்
  • மலையக ஆவணங்களை எண்ணிமப்படுத்தலும் காட்சிப்படுத்தலும்
  • ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் எண்ணிமத் தமிழியல்
  • தரவில் இருந்து உடையாடல்: தமிழ் மொழி மாதிரிகளை  LLM )வடிவமைத்தல்
  • சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்
  • எண்ணிம மீட்பு: 19-ஆம் நூற்றாண்டு முற்பகுதித் தமிழ் அச்சு வரலாற்றை வேர்ல்ட்கட் (WorldCat) நூற்பட்டியல் கொண்டு மீளாய்தல்

 

கருத்தரங்கு மெய்நிகராகவும் (Zoom ஊடாகவும்) நேரடியாகவும் (In-person) நடைபெறும். நிகழ்வின்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வசதி வழங்கப்படும்..

 

uoft.me/tamilstudies26 என்ற இணைப்பில் நிகழ்ச்சி நிரலையும், பதிவு செய்வதற்கான இணைப்பையும் காண முடியும்.


www.facebook.com/UTSCLibrary/posts/1276823227805474
டொரண்டோ நகரில் உள்ளோர் நேரில் வருக.
உலகெங்கும் உள்ளோர் இணைய வழியில் இணைக.

Leave a Reply