aaphoto-வுடன் நிழற்படங்களை மாயமாய் மேம்படுத்துங்கள்

டிமித்ரி பொபோவ்

பெரும்பாலான புகைப்படம் எடுப்பவர்கள், ‘நிழற்படம் எடுத்தபின் செய்யும் வேலைபாடுகள், படைப்புத்திறனில் முக்கியமானவை’ எனக் கருதுவர். சில நேரங்களில் பெரிய செய்முறைகள் ஏதும் இல்லாமல் புகைப்படத்தின் தரத்தை மட்டும் மேம்படுத்த வேண்டி உள்ளது. இங்குத் தான், aaphoto உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த எளிய பயனுள்ள செயலி, ஒரு கட்டளையை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நிழற்படத்தின் தரத்தை மேம்படுத்தி விடுகிறது.

பல பிரபலமான லினக்ஸ் பகிர்வுகளின் களஞ்சியங்களில் (repositories) aaphoto இடம் பெற்றுள்ளது. இதனால் உங்களது distro’s package manager-ஐ பயன்படுத்தி இதனை நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். டெபியன் மற்றும் உபுண்டுவில்

“apt-get install aaphoto”

என்னும் கட்டளையை root பயனராக இயக்கலாம். இதற்கு மாறாக ஒரு மொழி மாற்றப்பட்ட இருமத்தை (compiled binary) செயல்திட்ட வலைதளத்திலிருந்து (project’s website) நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, aaphoto-வை source-லிருந்து இருமமாக்கலாம் (compile).

aaphoto, histogram-களை ஆராய்ந்தும், contrast, color balance, saturation மற்றும் gamma levelகள் போன்ற முக்கிய அமைப்புகளைப் படத்திற்கேற்றாற்போல சரிசெய்தும் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்த முயல்கிறது. சில சமயங்களில் மேம்படுத்துதலில் பிழை ஏற்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் aaphoto சிறப்பாகவே செயல்படுகிறது. aaphoto-வை பயன்படுத்துதல், இப்போது இருப்பதை விட எளிமையானதாக ஆக்க இயலாத ஒன்று:

“aaphoto foo.jpg”

என்ற கட்டளையை (foo.jpg என்பதை நீக்கிவிட்டு தங்கள் புகைப்பட கோப்பின் பெயரை) பயன்படுத்தவும். இதனால் aaphoto தானாக மேம்படுத்தப்பட்ட புகைப்படத்தின் பதிப்பைத் (version) தருகிறது.

aaphoto-வால் JPEG, JPEG 2000 மற்றும் PNG போன்ற பல்வகை படங்களைக் கையாள முடியும். aaphoto-வைப் பயன்படுத்த aaphoto கட்டளையும், புகைப்படத்தின் பெயரும் போது என்றாலும், அது பல தெரிவுகளையும் (options) கூட வழங்குகிறது.

–jpg, –png ஆகியன படத்தின் வகையைத் தெரிவிக்கின்றன

–resize என்பது படத்தைக் குறிப்பிட்ட அளவுக்கு மாற்றுகிறது

-quality ஆனது இறுதியாய் வெளிவரும் படத்தின் தரத்தை மாற்ற பயன்படுகிறது

அளிக்கப்பட்டுள்ள அனைத்து தெரிவுகளையும் (options) காண

“aaphoto –help”

என்ற கட்டளையைப் பயன்படுத்துங்கள்.

aaphoto ஆனது மற்ற புகைப்படம் மாற்றம் செய்யும் செயலிகளுக்கு (photo editing applications) மாற்று அல்ல என்றாலும், சிறு சிறு மாற்றங்கள் அதிக கடினம் இல்லாமல், எளிதில் செய்ய இது ஒரு நல்ல கருவி.

aaphoto *

என்ற கட்டளை ஒரு folderல் உள்ள அனைத்து படங்களையும் மேலான முறையில் மேம்படுத்துகிறது.

jopine

 

%d bloggers like this: