மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

மின் உரிமை மேலாண்மை என்பது ஆங்கிலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மென்ட் அல்லது தி.ஆர்.எம் என அழைக்கப்படுகிறது. இதை இவ்வாறு அழைப்பதை விட டிஜிட்டல் ரெஸ்ட்ரிக்சன் மேனேஜ்மென்ட் அதாவது மின் கட்டுப்பாடு மேலாண்மை என்று அழைக்கலாம் என ரிச்சர்ட் ஸ்டால்மென் கூறுகிறார். சரி இந்த மின் உரிமை மேலாண்மை என்றால் என்ன ?

எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM) என்பது, மென்பொருள், வன்பொருள் மற்றும் எண்முறை வடிவங்களில் கிடைக்கும் இசை, ஒளிப்படம், தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை, பயன்படுத்துவதற்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்துகின்ற/கட்டுப்படுத்துகின்ற கொள்கைகளையும், உரிம ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் எந்தவொரு தொழிநுட்பத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகும்” இவ்வாறு விக்கிபீடியா குறிப்பிடுகிறது.

சரி ஏதோ ஒழுங்குபடுத்துறேன்னு சொல்றாங்க, பண்ணிட்டுப் போறாங்களே அத ஏன் நாம இங்க பேசணும் ? அதுக்கு காரணம் இருக்குங்க. ஒழுங்குபடுத்துறாங்க சரி அதுக்கு அப்புறம் பாருங்க “கட்டுப்படுத்துகின்ற கொள்கை” “உரிம ஒப்பந்தங்கள்” இங்க தாங்க பிரச்சனையே. இந்த ரெண்டு விசயத்துல தான் விஷமமே இருக்கு.

நமக்கு புரியுற மாதிரியே பேசலாம். இங்க நெறைய பேர் புத்தகம் படிக்குற பழக்கம் இருக்கும். இல்லைன்னு சில பேரு சொல்லுவாங்க, எப்படியும் பள்ளிகூடத்துக்கு போகும்போது படிச்சுரிப்பிங்க. அது அச்சு புத்தகம்னு சொல்லலாம். அந்த அச்சு புத்தகத்த பத்தி நமக்கு தேவையானத மட்டும் பாப்போம்,

·         அத காசு கொடுத்து எங்கையாவது அல்லது யார்ட்டையாவது சொல்லிவிட்டு வாங்கலாம்

·         வாங்குன பின்னாடி நீங்க அதோட முதலாளி

·         வாங்கிற கடைல பில்லு கொடுத்தா வாங்கலாம் அல்லது வந்துரலாம். அந்த பில்லுல நீங்க எதுவும் கையெழுத்து அல்லது உறுதி பிரமாணம் எடுக்க தேவையில்லை.

·         அத என்ன முறைல தயாருச்சாங்கனு நமக்கு தெரியும், அதாவது பேப்பேர்ல அச்சடிக்கறது. அது மாதிரி அத படிக்க எந்த ஒரு தனியுடைமை தந்திரமும் தேவையில்லை. அத படிக்க தேவையான மொழிய ஒன்னாங்கலாசு மல்லிகா டீச்சர் சொல்லி கொடுத்தது அதுக்கு தொல்காப்பியர்லாம் காப்புரிமை வச்சுருக்கமாட்டாங்க.

·         நீங்க அந்த புத்தகத்த யாருக்காவது சும்மா குடுக்கலாம், இரவலா குடுக்கலாம் அல்லது ஒரு பழைய புத்தக கடையா பாத்து நல்ல பேரம் பேசி தள்ளிவிட்டுரலாம்.

·         அந்த புத்தகத்த ஜெராக்ஸ் எடுக்கலாம், காப்புரிமை சட்டப்படி சில சமையம் அது அனுமதிக்கப்படுகிறது.

·         அந்த புத்தகத்த யாரும் அழிக்க முடியாது. அப்டியே அழிச்சாலும் உங்க சொத்த சேதபடுத்தித்ததா போலீஸ்ல புகார் கொடுக்கலாம். என்ன அதுல உங்க சொத்தே அழிஞ்சு போய்டும், இருந்தாலும் அந்த வாய்ப்பு இருக்கு.

சரி இதுலாம் நம்ம அச்சு புத்தகம் பத்தினது. இனி நம்ம கதாநாயகன பத்தி பாப்போம். ஒரு புரிதலுக்காக இதற்கு ஒரு எடுத்துக்காட்டான அமேசான் மின் புத்தகங்களை பத்தி பாப்போம்,

 அமேசான்ல நீங்க புத்தகம் வாங்கணும்னா உங்க அடையாளத்தை சொல்லனும், அதான் நீங்க யாரு, உங்க பேரு என்ன, எங்க இருந்து வர்ரிங்க, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, உங்க நாய் குட்டி பேரு என்ன (உங்க கடவுச்சொல் மறந்துருச்சுனா இந்த ரகசிய கேள்விய கேட்பாங்கலாம்) இப்படி இன்னும் உங்க ஜாதகத்த கூட அதுக்கு பேரு ஜோடியாக். எங்க இருந்து வர்ரிங்கனு பொய் சொல்ல முடியாது அது ஏற்கனவே ஐ.பியை வச்சு நாட்ட கண்டுபுடுச்சு வச்சுருப்பான், உங்க மனசு கஷ்ட்டப்பட கூடாதேன்னு உங்க தெரு விலாசத்தை மட்டும் கேப்பான்.

நீங்கதான் காசு குடுக்குரிங்களே எல்லா புத்தகத்தையும் குடுப்பானா ? அதுவும் இல்ல சில புத்தகத்தை உங்க நாட்டுக்கு இது கெடையாதுன்னு சொல்லி முடுச்சுருவாங்க.

அமேசான் ஒரு கட்டுபாடான ஒப்பந்தத்த நீட்டுவான் அத நீங்க ஒத்துக்கணும். அதான் ஐ அக்செப்ட்னு குடுப்பமே அது தான்.

அந்த கோப்பு முறையும் ரகசியமானது, தனியுரிம வன்பொருளில் தான் படிக்கமுடியும். நம்ம லிப்ரே ஆபீஸ்லைலாம் படிக்கமுடியாது.

செல புத்தகத்த மட்டும் கொஞ்ச நாளைக்கு உங்க நண்பருக்கு இரவலா கொடுக்கலாம் ஆனா நிரந்தரமா கொடுக்க முடியாது அது மாதிரி விக்கவும் முடியாது.

சரி புத்தகத்த பத்தரமா ஒரு நகல் வச்சுக்கலாம்னு குறுந்தட்டில் எல்லாம் சேமிக்க முடியாது. ஏன்னா நகல் எடுப்பது மின் கட்டுபாட்டு மேலாண்மைக்கு புறம்பானது அது காப்புரிமை சட்டத்தை விட கடுமையானது.

அமேசான் நீங்க வாங்குன புத்தகத்த பின் வாசல் வழியா அழிச்சுடலாம். அதான் ஐ அக்செப்ட் குடுத்தாச்சே. அதெல்லாம் செய்ய மாட்டாம்ப்பா அவென் கம்பெனி பேரு கெட்டுபோய்டாதா ? இப்படி தான் நானும் நெனச்சேன், ஆனா 2009 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஓர்வெல் என்னும் எழுத்தாளரோட 1984 என்னும் புத்தகத்தோட ஆயிர கணக்கான பிரதிகளை அழிச்சுபுட்டாங்க[1].

இதுல உள்ள எல்லாமே மின் புத்தகத்தை அச்சு புத்தகத்தை காட்டிலும் பின்னுக்கு கொண்டு செல்கிறது. மேலும் இது தனி மனித சுதந்திரத்தை நசுக்குகிறது.

இதுலாம் ஏன்னு கேட்டா எழுத்தாளர்களுக்கு நல்ல சன்மானம் குடுக்கன்னு சொல்றாங்க, சரி அதுவாவது நடந்துச்சா ? அதுவும் இல்ல. இது எல்லாமே அந்த நிறுவனத்திற்கு லாபம் ஏற்றும் ஒரு தந்திரம் தான். இந்த தொழில்நுட்பம் இல்லாமலும் எழுத்தாளரை மனநிறைவடைய செய்யலாம்[2].

சரி இதுக்கு வேற வழியே இல்லையா ? மின் புத்தகமே இருக்க கூடாதா ? இந்த கேள்விக்கு பதில் இருக்கலாம், அது சுதத்திரத்தை நசுக்குவதாக இருக்ககூடாது. இதற்கு எடுத்துக்காட்டாக குடேன்பார்க் திட்டத்தை[3]கூறலாம், அட தமிழ்ல சொல்லுப்பான்னு சொல்றிங்களா ? இங்கயும் மதுரை திட்டம்[4]இருக்கே.

இதலாம் ஏம்ப்பா இப்ப பேசிட்டு இருக்க 1998லையே டிஜிட்டல் மில்லினியம் காப்பிரைட் அக்ட் அப்டின்னு போட்டு இத சட்டம் ஆக்கிடாங்களே இனி என்ன செய்ய முடியும் ? இத இப்போ சொல்ல ஒரு காரணம் இருக்கு. தமிழ்ல இருக்குற ஒரு முன்னணி பதிப்பாளர் ஒருத்தர் இந்த மாதிரி ஒரு விசயத்தை கொண்டு வர போறாரு. அட ஏற்கனவே ஆப்பிள் ஐ ஒ.ஸ் க்கு வந்தாச்சு, வரைவில் அண்ட்ராய்டுக்கும் வருதாம்.

இதற்கு எதிராக உங்கள் குரலும் ஒலிக்க வேண்டுமா ? இணைந்திடுங்கள் DefectiveByDesign.org/ebooks.html

அட கடைசியா அந்த பதிப்பகத்து பெற மட்டும் சொல்லிருனு சொல்றிங்களா? அட ஏங்க அப்புறம் யாரு மனசாவது புண்படும் அதுக்கு நான் காரணமா இருந்தேன்னு தகவல் தொழில்நுட்ப சட்டம்[5]பயன்படுத்தி என்னைய உள்ள வச்சுருவாங்க !

குறிப்புகள்

1.    en.wikipedia.org/wiki/Nineteen_Eighty-Four#Copyright_status

2.    stallman.org/articles/internet-sharing-license.en.html

3.    www.gutenberg.org/

4.    www.projectmadurai.org/

5.   

முதன்மை மூலம் : stallman.org/articles/ebooks.pdf

 

 

%d bloggers like this: