இலவச இணைய வழி Advanced ஜாவா பயிற்சி

பயிலகம், கணியம் இணைந்து இணையவழியே இலவச advanced ஜாவா பயிற்சிகளை முன்னெடுக்கின்றன. இப்பயிற்சியில் ஜாவாவின் புதிய கூறுகளை(Features)ப் பயிற்றுவிக்க உள்ளார்கள். பயிற்சி வரும் வியாழன் அன்று இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் இப்பயிற்சி இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், இங்கே பதிந்து கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கெடுக்க விரும்புவோர்க்கு ஜாவா நிரல் அடிப்படைகள் தெரிந்திருப்பது கட்டாயம்.

பயிற்சி நேரம்: காலை 7 மணி இந்திய நேரம்.

பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்

பயிற்சி வரும் வியாழன் அன்று தொடங்கி (19.10.2023) அடுத்த வெள்ளி (27.10.2023) அன்று நிறைவு பெறும். பயிற்சியின் பதிவு செய்யப்பட்ட தொகுப்பு, பயிலகம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்படும். [www.youtube.com/@PayilagamChennai]
Lambda Expressions, Functional Interfaces, Default Methods, Predicates, Functions, Double Colon Operator, Stream API, Date and Time API ஆகிய தலைப்புகள் இப்பயிற்சியில் உரையாடப்படும்.

%d bloggers like this: