Advanced MySQL – Functions & Operators

Functions & Operators

Mysql- ல் பல்வேறு வகையான functions மற்றும் operators இருந்தாலும் ஒருசில முக்கியமானவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம் .

Concat function

Query-13

இரண்டு தனித்தனி columns- ல் உள்ள மதிப்புகளை இணைத்து ஒரே மதிப்பாக வெளியிடும் வேலையை concat() function செய்கிறது . இது பின்வருமாறு .

select concat(name,role) from employees;

 

 

 

 

 

 

 

இதில் name மற்றும் role என்பது இரண்டு தனித்தனி columns ஆகும் . அவற்றின் மதிப்பு concat மூலம் ஒன்றாக இணைத்து வெளியிடப்பட்டுள்ளது

Literals

Query-14

இரண்டு columns- ன் மதிப்புகளை இணைத்து வெளிப்படுத்துவதோடு அல்லாமல் நாம் விரும்பும் ஒருசில வார்த்தைகளையும் சேர்த்து வெளிப்படுத்த முடியும் . இவ்வாறு இணைக்கப்படும் வார்த்தைகள் ‘literals’ எனப்படும் .

select concat(name,’ is a ‘,role) from employees;

 

 

 

 

 

 

 

 

இதில் ‘is a’ என்பது literals ஆகும் .

Escape sequence

Query-15

பொதுவாக ‘literals’ என்பவை எப்போதும் single quotes- க்குள் காணப்படும் . ஆனால் single quote- ஐ உள்ளடக்கிய ஒருசில வார்த்தைகளை நாம் literal- ஆக கொடுக்க விரும்பினால் அது back slash- ஐப் பயன்படுத்தி பின்வருமாறு அமையும் . இதனை escape sequence எனலாம் .

 

 

Distinct

Query-16

Distinct()– ஆனது ஒரு column- ல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான மதிப்புகள் காணப்பட்டால் அதனை ஒரே ஒரு முறை மட்டும் வெளிப்படுத்தும் . உதாரணத்துக்கு பின்வரும் query, ‘dept_name’ column- ல் உள்ள அனைத்து மதிப்புகளையும் வெளிப்படுத்துகிறது . பின்னர் distinct dept_name எனக் கொடுக்கும் போது ஒரு மதிப்பினை ஒருமுறை மட்டுமே வெளிப்படுத்துகிறது .

select dept_name from department;

select distinct dept_name from department;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Query-17

distinct dept_name,location எனக் கொடுக்கும் போது dept_name மதிப்பினை ஒரு் location- க்கு ஒருமுறை வெளிப்படுத்துகிறது . இது பின்வருமாறு .

select dept_name,location from department;

select distinct dept_name,location from department;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இங்கு Testing என்பது Distinct மதிப்பாக இருந்தாலும் , location வேறுபடுவதால் , இருமுறை வருகிறது .

 

 

Simple Conditions

Query-18

ஏதேனும் ஒரு கட்டளையின் அடிப்படையில் தகவல்களை வெளியிட where பயன்படுகிறது . உதாரணத்துக்கு ‘Testing’ department- ல் உள்ள விவரங்களை மட்டும் பட்டியலிட where dept_name =’Testing’ எனக் கொடுக்க வேண்டும் . இது பின்வருமாறு .

select * from department where dept_name=’Testing’;

 

 

 

 

 

 

 

 

 

Query-19

தேதியை அடிப்படையாகக் கொண்டும் கட்டளைகளை அமைக்கலாம் . இது பின்வருமாறு .

select * from employees where joining_date=’2008-01-09′;

 

Conditions with comparison operators

Query-20

ஒரு column- ஐ ஒரு குறிப்பிட்ட மதிப்புடன் ஒப்பிட்டு அதனடிப்படையில் கட்டளைகளை அமைப்பதே conditions with comparison operators எனப்படும் . உதாரணத்துக்கு 10,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் நபர்களைப் பட்டியலிட comparison operator- ஐப் பின்வருமாறு அமைக்கலாம் .

select * from employees where salary<10000;

 

 

 

 

 

 

 

 

Query-21

between operator– ஐப் பயன்படுத்தி இரண்டு மதிப்புகளைக் கொடுத்து அதனிடையில் அமையும் தகவல்களை எல்லாம் பெற முடியும் . அந்த இரண்டு மதிப்புகளில் ஒன்று lower limit- ஆகவும் , மற்றொன்று upper limit- ஆகவும் அமையும் . உதாரணத்துக்கு ரூபாய் 10,000- லிருந்து 20,000- வரை சம்பளம் வாங்கும் நபர்களைப் பட்டியலிட between operator- ஐப் பின்வருமாறு அமைக்கலாம் .

select * from employees where salary between 10000 and 20000;

 

 

 

 

 

 

 

 

Query-22

between operators- ன் lower மற்றும் upper limits- ஆக பெயர்களையும் கொடுக்க முடியும் . பின்வரும் உதாரணத்தில் ‘Malathi’ மற்றும் ‘Sudha’ எனும் இரண்டு பெயர்களுக்கிடையில் அமையும் அனைத்துப் பெயர்களும் பட்டியலிடப்படும் .

select * from employees where name between ‘Malathi’ and ‘Sudha’;

 

 

 

 

 

 

 

 

Query-23

தொடர்ச்சியாக ஒருசில குறிப்பிட்ட மதிப்புகளைக் கொடுத்து அதனைப் பெற்று விளங்கும் தகவல்களை மட்டும் பட்டியலிட in operator- ஐப் பயன்படுத்தலாம் . இது பின்வருமாறு .

select * from employees where salary in (12000,19500,4500);

 

 

 

 

 

 

இன்னும் சில comparison operators என்ன செய்கிறது என்பதைப் பின்வரும் படத்தில் காணலாம் .

Pattern Matching

Query-24

Like operator- ஆனது ஒரே மாதிரியான pattern- ல் அமையும் தகவல்களைப் பட்டியலிடும் . உதாரணத்துக்கு S எனும் எழுத்தில் தொடங்கும் நபர்களின் பெயர்களைப் பட்டியலிட % எனும் wildcard character பின்வருமாறு பயன்படுகிறது .

select * from employees where name like ‘S%’;

 

 

 

 

 

 

 

 

Query-25

அவ்வாறே முதல் எழுத்து எதுவாக இருந்தாலும் இரண்டாம் எழுத்து e- வாக இருக்கும் பெயர்களைப் பட்டியலிட underscore எனும் wildcard character பின்வருமாறு பயன்படுகிறது .

select * from employees where name like ‘_e%’;

 

 

Order by

Query-26

 Order by என்பது இயல்பாகத் தகவல்களை ஏறுவரிசையில் முறைப்படுத்திக் காட்ட உதவுகிறது . உதாரணத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையில் தகவல்களை முறைப்படுத்த query- யைப் பின்வருமாறு அமைக்கலாம் .

select * from employees order by joining_date;

 

 

 

 

 

 

 

 

 

Query-27

அவ்வாறே ஒருவர் தேர்வு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையில் தகவல்களை இறங்குவரிசையில் முறைப்படுத்த desc என்பதனை இறுதியில் குறிப்பிட வேண்டும் .

select * from employees order by joining_date desc;

 

 

 

 

 

 

 

 

 

 

Query-28

 alias name– ஐப் பயன்படுத்திக் கூட தகவல்களை முறைப்படுத்த முடியும் .

select name,commission_pct as cmm from employees order by cmm;

 

 

 

 

 

 

 

 

 

Query-29

order by– ஐத் தொடர்ந்து 3 எனக் கொடுக்கும் போது , select statement- ல் 3- வதாக அமைந்துள்ள column- ன் அடிப்படையில் தகவல்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன ..

select name,role,salary from employees order by 3;

 

 

 

 

 

 

 

 

 

Query-30

ஒன்றுக்கும் மேற்பட்ட columns- ன் அடிப்படையிலும் நாம் தகவல்களை முறையிட முடியும் . பின்வரும் உதாரணத்தில் department மூலம் ஏறுவரிசையில் முறைப்படுத்தப்பட்ட தகவல்கள் , பின்னர் ஒரே department- க்குள் , salary மூலம் இறங்குவரிசையில் முறைப்படுத்தப்படுகின்றன .

select * from organisation order by department,salary desc;

Character functions

Query-31

UPPER() எழுத்துக்களை பெரிய எழுத்தில் மாற்றிக் காட்டுகிறது . LOWER() எழுத்துக்களை சிறிய எழுத்தில் மாற்றிக் காட்டுகிறது . இது பின்வருமாறு .

select name,upper(name),lower(name) from employees;

 

 

 

 

 

 

 

 

 

Query-32

CONCAT() என்பது இரண்டு தனித்தனி column- ல் உள்ள மதிப்புகளை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்துகிறது . LENGTH() என்பது column மதிப்பில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது . INSTR() மூலம் நாம் ஏதேனும் ஒரு் எழுத்து மற்றும் column- ஐக் கொடுத்து , அந்த எழுத்து column- ல் எத்தனையாவதாக உள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியும் . SUBSTR() மூலம் நாம் ஏதேனும் ஒரு் column மற்றும் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை எழுத்துக்களை சோதிக்க வேண்டும் எனும் எல்லைகளைக் கொடுத்து அதற்கு ஏற்றார் போல் தகவல்களைப் பெற முடியும் . இவை பின்வருமாறு .

select name,role,concat(name,role),length(role),instr(name,’a’) from employees;

select * from employees where substr(name,4,7)=’athi’;

 

Number functions

Query-33

ROUND() – ஆனது தசம எண்களை அதற்கு நெருங்கிய முழு எண்களாக மாற்றும் . ROUND(any column, 2) எனக் கொடுக்கும் போது அந்த column- ல் உள்ள தசம எண்களை இரண்டு தசம இலக்கத்தில் வெளிப்படுத்தும் .

select round(45.9574),round(45.9574,2) from employees;

 

 

 

 

 

 

—-

 

து. நித்யா

இவர் cognizant நிறுவனத்தில் Data Warehouse Testing-ல் பணியாற்றி வருகிறார்.

மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com

வலை : nithyashrinivasan.wordpress.com

%d bloggers like this: