AI – ஒரு அறிமுகம்

AI என்றால் என்ன?

செய்யறிவு (Artificial Intelligence) கடந்த பத்தாண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு நுட்பமான செயல்களைப் புரிந்து வருகிறது. படத்தைப் பார்த்து அதில் இருப்பவற்றைக் கண்டறிவது தொடங்கி மொழிபெயர்ப்பு வரை பலதரப்பட்ட சிக்கலான வேலைகளைச் செம்மையுறச் செய்து காட்டியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

தன்னிச்சையாக செயல்படும் கணினிகளை உருவாக்கும் முயற்சியே Artificial Intelligence (AI) என்று அழைக்கலாம். AI என்பது கணினிகள் மனிதர்களைப் போல அறிவார்ந்த முடிவுகளை எடுக்க மற்றும் புதிதாக கற்றுக்கொள்ள உதவுகின்ற ஒரு முறை.

Artificial Intelligence – AI நிறுவுநர்களில் ஒருவரான ஜான் மெக்கார்த்தி (John McCarthy), AI-ஐப் பற்றி இப்படி வரையறுக்கிறார் :

“[Artificial intelligence is] the science and engineering of making intelligent machines, especially intelligent computer programs. It is related to the similar task of using computers to understand human intelligence, but AI does not have to confine itself to methods that are biologically observable.”

இந்த வரையறை எதை குறிக்கிறது?

இந்த AI வரையறை மூன்று முக்கியமான அம்சங்களை கொண்டிருக்கிறது:

1️⃣ Science and Engineering of Making Intelligent Machines

  • இதன் பொருள் AI என்பது நமக்கு தேவையான தகவல்களை கற்றுக்கொண்டு, முடிவுகளை எடுத்து, பிரச்சினைகளை தீர்க்க பயன்படுகிறது.

2️⃣ Using Computers to Understand Human Intelligence

  • AI என்பது மனிதர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதனை கணினியில் மாதிரி (model) செய்வது.

3️⃣ AI Does Not Have to Follow Biologically Observable Methods

  • AI மனிதர்களை மாத்திரம் பின்பற்றவேண்டும் என்று இல்லை; இது கணினிகளுக்கே ஏற்ற algorithm-based intelligence ஆக இருக்கலாம்.

எதை AI என்று அழைக்கலாம்?

இன்று நாம் AI என்பதை Self-driving Cars, Chatbots, Speech Recognition, Medical Diagnosis AI போன்ற செயல்பாடுகளில் காணலாம். ஆனால், AI என்றால் கண்டிப்பாக ஒரு சுயசிந்தனை உடையது மட்டுமே ஆக வேண்டியதில்லை. இது ஒரு நிலையான if-else விதிகளால் கட்டுப்பட்டாலும் கூட, கணினி மனிதர்களின் சிந்தனையை ஒத்த மாதிரி செயல்படும் என்றால், அது AI ஆகக் கொள்ளலாம்.

இதனை புரிந்துக்கொள்ள நாம் ஒளிக்காட்சி விளையாட்டில் (Video Games) வரும் கதாப்பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உதாரணமாக கொண்டு AI அணுகுவோம்.

ஒளிக்காட்சி விளையாட்டில் வரும் NPCs (Non-Playable Characters) AI ஆகிறதா?

Video Games விளையாடும் போது, நீங்கள் எதிர்கொள்ளும் Non-Playable Characters (NPCs), அதாவது computer-controlled characters பல முறை AI போல தோன்றலாம். ஆனால் அவை உண்மையான AI அல்ல.

உதாரணத்திற்கு, ஒரு NPC (வில்லன்) நம்மை பார்க்கும்போது தாக்கும், இல்லையெனில் நடந்து கொண்டே இருக்கும். இது உண்மையான AI ஆகாது, இது ஒரு rule-based system – simple if-else logic ஆகும். NPC தனது சூழ்நிலையை (context) புரிந்துகொண்டு சுயமாக முடிவெடுக்காது.

NPCs எப்படி முடிவெடுக்கின்றன?

If-Else என்பது ஒரு decision-making (முடிவெடுக்கும்) statement ஆகும். இவை Non-Playable Character (NPC) எப்போது தாக்க வேண்டும்? எப்போது நடந்து கொண்டிருக்க வேண்டும்? என்ற முடிவுகளை எடுக்க இது பயன்படும். NPC உண்மையான AI அல்ல – இது வெறும் if-else statement கொண்ட ஒரு rule-based system மட்டுமே! இவை Pre-programmed logic மட்டுமே பயன்படுத்தும்.

Rule-Based Systems (If-Else Statements) என்பது முன்கூட்டியே நிரலாக்கப்பட்ட விதிகளை பின்பற்றி செயல்படும். ஆனால், AI என்பது சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும்.

இவை எவ்வாறு செயல்படும் என்பதை எளிய முறையில் புரிந்துகொள்வோம்.

காட்சி 1: If-Else Logic கொண்ட rule-based NPC

நீங்கள் ஷூட்டர் கேம் விளையாடுவதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள் 🎮 . நீங்கள் ஒரு NPC வில்லனை (enemy AI) எதிர்கொள்கிறீர்கள். NPC உங்களை பார்க்கும்போது தாக்கும், இல்லையெனில் உலாவி கொண்டிருக்கும்.

if player_distance < 10:
    attack()
else:
    patrol()

என்ன நடக்கிறது?

  • நீங்கள் 10 மீட்டருக்கு (meters) உள்ளே வந்தால் NPC வில்லன் உங்களை தாக்கும்.

  • நீங்கள் 10 மீட்டருக்கு வெளியே இருந்தால், அது பாதுகாப்பாகச் சுற்றி வரும்.

  • சூழ்நிலை எதுவானாலும் இவை கடைசிவரை இதே விதியை மட்டுமே பின்பற்றும்.

ஆனால் இன்று Machine Learning மற்றும் Reinforcement Learning கொண்டு AI NPCகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அது எப்படி AI NPCகள் If-Else Statements ஐ தாண்டி செயல்படுகிறது?

காட்சி 2: AI-யை கொண்டு முடிவெடுக்கும் NPC

வீரர் தன்னை தாக்கினால்NPC பல சூழ்நிலையை ஆராய்ந்து முடிவெடுக்கும். அதாவது வீரரின் ஆரோக்கியம் (Player Health) அதிகமாக இருந்தால் எதிர் தாக்கும். இல்லையெனில் ஒளிந்து கொள்ளும். முன்பு வீரர் நடந்து சென்ற வழியை கற்றுக்கொண்டு அந்த வழியில் மறைத்து தாக்கும். அதுவே NPC-க்கு குறைந்த ஆரோக்கியம் இருந்தால் உங்களிடம் இருந்து தப்பித்து ஓடி ஒளிந்து கொள்ளும். வீரர் அடிக்கடி கவரேஜ் (cover) தேடி இருக்கிறாரா? NPC அதை கவனித்து, சுற்றி தாக்கலாம்.

AI NPC சூழ்நிலையை ஆராய்ந்து முடிவெடுக்கிறது. அதாவது, வீரரின் ஆரோக்கியம்(player health), தன்னுடைய ஆரோக்கியம் (NPC health) மற்றும் எதிரியின் எத்தனை நேரம் தாக்காமல் இருக்கிறார் என்பதைப் பொறுத்து முடிவெடுக்கும்.

AI NPC ஒரு புதிய சூழ்நிலை உருவான பிறகு அதற்கேற்ப கற்றுக்கொண்டு செயல்படும்.

எடுத்துக்கட்டாக ஒரு திருடன் (NPC) – காவலரை (Player) பார்த்து எப்பொழுது ஓட வேண்டும் எனப்பார்ப்போம்?

திருடனின் நிலை (NPC State) காவலர் அருகில் உள்ளாரா? திருடன் என்ன செய்ய வேண்டும்?
அதிகபட்ச சக்தி உள்ளது (Healthy) இல்லை அங்கேயே இருக்கும்
குறைந்த சக்தி உள்ளது (Low Health) இல்லை ஒளிந்து கொள்ளும்
குறைந்த சக்தி உள்ளது ஆம் ஓடிவிடும் 🏃‍♂️
முழு சக்தி உள்ளது ஆம் காவலரை தாக்கலாம்!

AI NPC மனிதர்கள் போல் முடிவெடுப்பது எப்படி?

உதாரணமாக

1️⃣ Player ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ள அதிக நேரம் செலவழிக்கிறார் என்றால்?

NPC அதை கவனித்து, முன்கூட்டியே எதிர்பார்த்து அந்த இடத்தில் தாக்கலாம்.

2️⃣ Player எப்போதும் ஒரு குறிப்பிட்ட வழியில் ஓடுகிறாரா?

AI NPC அந்த வழியை மறித்து விளையாடலாம்.

Rule-Based AI vs Learning AI (மனிதர்கள் போல் முடிவெடுக்கும் AI)

ஒப்பீடு Rule-Based NPC (If-Else Logic) AI NPC (Machine Learning)
முடிவெடுக்கும் விதம் நிரந்தர விதிகள் (Fixed Rules) சூழ்நிலைக்கு ஏற்ப கற்றுக்கொண்டு முடிவெடுக்கும் (Dynamic Learning)
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுமா? முடிவெடுக்க முடியாது (Cannot Learn) வீரரின் செயல்பாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு மாறும் (Learns from Player Actions)
உண்மையான உணர்வு தருமா? எதிர்பார்க்கக்கூடிய செயல்பாடு (Predictable) மனிதர்களைப் போன்ற அனுபவம் தரும் (Feels more human-like)
உதாரண விளையாட்டுகள் Super Mario, Classic Shooter Games Red Dead Redemption, GTA V, Open-World Games

 

AI என்பது வெறும் விளையாட்டு NPCகளுக்கு மட்டும் அல்ல, நம் சுற்றியுள்ள அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் ஒரு நுண்ணறிவு முறை. ஆரம்பத்தில், if-else logic மூலம் NPCகள் நிரலாக்கப்பட்ட விதிகளை மட்டும் பின்பற்றி செயல்பட்டன, ஆனால் இன்று Machine Learning & Reinforcement Learning போன்ற நவீன AI முறைகள் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனை பெற்றுவிட்டன. AI  விளையாட்டுகளுக்கு மட்டுமல்ல, தோழமையாக பேசும் voice assistants (Siri, Alexa), சுயமாக செல்லும் Self-Driving Cars, Netflix, YouTube, Amazon போன்ற நிறுவனங்கள் AI-ஐ பயன்படுத்தி, உங்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய உள்ளடக்கங்களை பரிந்துரைக்கிறது, Chatbots மருத்துவத்தில் நோய்களை கண்டறிய, மருத்துவ பரிந்துரைகள் வழங்க மற்றும் மருந்துகளின் கண்டுபிடிப்பை விரைவுபடுத்த AI பயன்படுத்தப்படுகிறது.

AI மனிதர்களைப் போல செயல்பட வேண்டும் என்பதல்ல அவை மனிதர்களுக்கு பயன்படும் வகையில், தரவினைப் புரிந்து கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க, மற்றும் செயல்திறனை மேம்படுத்த மனிதர்கள் உருவாக்கி கொண்டிருக்கிற தொழில்நுட்பம். இது விளையாட்டு முதல் மருத்துவம் வரை பல்வேறு துறைகளில் நம்மை சுற்றியுள்ள தரவை பயனுள்ளதாக மாற்றி செயல்படக்கூடியதாகவும் உருவாகி வருகிறது.

முனைவர் ப. தமிழ் அரசன்

tamilarasanbakthavatchalam@gmail.com