Author Archives: சுகந்தி வெங்கடேஷ்

எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(3)

சுகந்தி வெங்கடேஷ் <body></body>என்ற இழை தான் பயனாளிகள் படிக்க , பார்க்க வேண்டிய எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. ஒர் இணையப் பக்கத்தில் கிடைக்கும் தகவல்களை எழுத்துரைகள், படங்கள் காணோளிகள் கேட்பொலிகள் இணையச் சுட்டிகள் என்று பிரிக்கலாம்.இத்துடன் இணைத்துள்ள கணியம் இணையப்பக்கத்தின் <body></body> இழைகளுக்குள் எத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கின்றன என்று பாருங்கள்.   இவற்றை பயனாளிகள் பார்க்கும் போது அவை கீழே உள்ள படங்களில் இருக்கும் ஒர் அழகான இணையத் தளமாகத் தெரிகிறது அஃது எப்படி?… Read More »

HTML5 – பட விளக்கம்-4

<body> </body>இழைக்குள் வர வேண்டிய இழைகளை இந்த இதழில் பார்ப்போம்   <body> </body>இழைக்குள் இருக்கும் உட்பொருட்களைத் தான் பயனாளர்களால் பார்க்க முடியும் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள் அதனால் நாம் பயனாளிகளாய் பார்க்கும் பகுதிகளை தேடு பொறிகள் கண்டுபிடிக்கும் விதமாகவும் எல்லாவித இணைய உலாவிகளும் புரிந்து கொண்டு சரியான முறையில் நாம் குறியீடுகளை அமைக்க வேண்டும். HTML 5க்கு முன்னால இணையத்தின் எல்லா உட்பொருட்களும் தலைப்புக்களின் இழை பத்தி இழை, சுட்டிகளின் இழை, படங்களின் இழை… Read More »

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2)

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2) சுகந்தி வெங்கடேஷ் ஹெ.டி.எம்.எல் 5 வருவதற்கு முன் இந்த விஷயங்களை காட்டுவதில் ஒவ்வோர் உலாவியும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டன. அது மட்டுமல்ல பயனாளிகள் எந்த உலாவிகள் பயன் படுத்துகிறார்கள் என்று இணையப் பக்கம் தயாரிப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு சில விஷயங்களை பயனாளிகள் பார்க்க, சில செருகிகள் [plugins] தேவைப்பட்டன. அவற்றை பயனாளிகள் தரமிறக்காவிட்டால் இணையப் பக்கங்கள் சரியாக வேலை செய்ய வாய்ப்பு இல்லை. இணைய… Read More »

HTML5 – ஒரு பட விளக்கம்

HTML5 – ஒரு பட விளக்கம்அறிமுகம்   பழையன கழிதலும் புதியன புகுவதும் கணினித் துறையில் அன்றாடம் நடப்பது. அப்படிப்பட்ட மாற்றங்களில் அடிக்கடி பேசப்படுவது HTML5. இணைய தள வடிவமைப்பிற்கு ஒரு புது உருவம் கொடுப்பது தான் HTML5. கைபேசி, அலைபேசிகளிலிருந்து, கைப்பலகை கணினிகள் வரை பலவித கருவிகள் கொண்டு நாம் இணையத்தை வலம் வருகிறோம். எனவே ஓர் இணையத் தள பக்கத்தை வடிவமைக்கும் போதே இன்றைய கணினிக் கருவிகள் அனைத்திலும் சரியாக வேலை செய்யுமா என்று… Read More »

அப்டானா ஸ்டூடியோஸ்

  அடோபி டீரீம்வீவர் என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜியா உங்களுக்கு, அதன் விலையைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விடுபவரா நீங்கள்? மைக்ரோசாப்ட் நிறுவனம் என்றாலே காத தூரம் ஓடுவீர்களா? உங்களுக்காகவே காத்திருக்கிறது அப்டானா ஸ்டூடியோஸ் 3. இணைய தளங்கள், தயாரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள் இது. இதை க் கொண்டு எச்.டி.எம்.எல்,(HTML) சி.எஸ்,எச்,(CSS), ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript), ரூபிரெய்ல்ஸ்(Ruby on Rails) , பி,எச்.பி,(PHP) , பைதான்(Python) இவற்றைப் பயன் படுத்தி நமக்குத் தேவையானதை உருவாக்கலாம்.இணைய தள செயலிகளை… Read More »

கைலோ Kylo – தொலைக்காட்சிக்கான இணைய உலாவி பொதுச் சொத்தாகிறது

மேமாதம் பதினைந்தாம் நாள் அமெரிக்க நகரமான ராக்விவில்லிலிருந்து ஹல்க்ரெஸ்ட் லேப் hillcrestlabs நிறுவனம் அறிவித்து இருப்பதாவது,”கைலோ “Kylo தொலைக்காட்சிக்கான இணைய உலாவி என்ற இணைய உலாவியின் மூலக் குறியீடுகளை திறவூற்று மென்பொருள் படைப்பவர்களிடம் கொடுத்துள்ளது. பல விருதுகளைப் பெற்ற கைலோ இணைய உலாவி இலவசமாகக் கிடைக்கிறது. மோசில்லா இணைய உலாவியை அடிப்படையாக் கொண்ட கைலோ ஒரு சிறந்த தொலைக் காட்சி உலாவியாகும். இணையத்துடன் இணைக்கப்படும் வசதிகள் உள்ள தொலைக்காட்சிகாட்சிப் பெட்டிகளில் ஃப்ரீஸோர்ஸ் எனும் சுட்டி கொண்டி இணையத்தை… Read More »

திறவூற்று இணைய தள வடிவமைப்புக்கள்

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் உள்ளத் தனைய உயர்வு   என்று ஒருவரின் வெற்றிக்கும் செயல் திறனுக்கும் ஊக்கத்தை அளவு கோலாக வைக்கிறார் வள்ளுவர். கணினித் துறையும் கட்டற்ற தொழில் நுட்பமும் இன்று இந்த அளவு வளர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வோருவரின் தனி ஈடுபாடும் ஊக்கமும் ஒரு முக்கியமானக் காரணம். ஒரு கணினிப் பயனீட்டாளருக்கு ஒரு மென்பொருளோ ஒரு சேவையோ இலவசமாகக் கிடைக்கிறது என்றால் அதன் பின்னால் பலரின் சுயநலமற்ற உழைப்பு… Read More »

ஃபெடோரா விஞ்ஞானம்- அமித் சாஹா அவர்களுடன் ஒரு நேர்காணல்

ஃபெடோரா விஞ்ஞானம் என்பது அறிவியல் வல்லுனர்களும், கணித வல்லுனர்களும் கணினியில் பயன்படுத்தக் கூடிய ஏராளமான நூலகங்களையும் மென்பொருள்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும்.அதன் பொறுப்பாளாரான திரு.அமித் சாகா அவர்களுடன் அறிவியல் வல்லுனர்களுக்கும் பொறியியல் வல்லுனர்களுக்குமான இலவச திறவூற்று மென்பொருள் லிப்ர்ரேயின் நிருபர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை.   F4S: வணக்கம் அமித். இந்த நேர்காணலுக்கு ஒத்துக் கொண்டதற்கு நன்றி. முதலில் உங்களைப் பற்றி எங்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் தாருங்களேன்.… Read More »

எச்.டி.எம்.எல் 5 / HTML 5

  இன்றைய இணைய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் விதமாக வந்திருப்பது தான் எச்.டி.எம். எல் 5. நாளைய இணையத் தளங்களைஉருவாக்கும் புதிய விதிகளை இன்றையக் கணினி பயன் பாடுகளை மனதில் கொண்டு W3Cயும் WHATWGயும் மாற்றி வருகின்றன. தற்போது இந்த விதி முறைகள் வரைமுறையில் மட்டும் தான் இருகின்றன,.இன்னும் எச்.டி.எம்.எல் 5 அதிகாரபூர்வமான விதிமுறைகளாக அறிவிக்கப்படவில்லை. இணைய உலாவிகளிலும் எச்.டி.எம்.எல் 5 ஆவணங்களைச் சரியான முறையில் முழுமையாகச் செயல் படுத்த முடிவதில்லை. ஆனாலும் இந்த மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே.… Read More »

Note pad ++ இலவச உரைப்பான்

Note pad ++ இலவச உரைப்பான் இது ஒரு விண்டோசில் செயல்படும் இலவச உரைப்பான். இணைய பக்கங்கள் உருவாக்கவும்,CSS ஆவணங்கள் உருவாக்கவும் பயன் படுத்தலாம். பல கணனி மொழிக்களுக்குத் தேவையான ஆவணங்களாகவும் இந்த உரைப்பானைக் கொண்டு சேமிக்கலாம். கட்டளைகள் பல வண்ணங்களில்த் தோன்றுவதால் நமது தவறுகளைச் சரி செய்துக் கொள்ள வசதியாக இருக்கும். இந்த உரைப்பானின் கட்டளைகள் தமிழில் அமைக்க முடியும். தமிழில் தட்டச்சுச் செய்வதும் எளிது. notepad-plus-plus.org என்ற இணைய தளத்திற்கு சென்று இந்த இலவச… Read More »