Author Archives: செல்வமணி

PHP கற்கலாம் வாங்க – பாகம் 2

PHP பாகம்-2 PHP என்பது என்ன? PHP என்பது தற்சுதந்திர(Intuitive), வழங்கியினிடத்தே (server-side) எழுதப்பட்டிருக்கிற ஒரு கதைவழி-மொழி(Scripting language) ஆகும். மற்ற கதைவழி மொழியைப்போலவே, இது மாறுநிலை வலைப்பக்க பொருளடக்கத்தின்(Dynamic webpage content) உருவாக்கத்திலும், வலைஉலவியிலிருந்து (Web browser) பெறப்பட்ட தரவுகளை கையாளவும் தேவையான மாறாநியதியை(Logic) உருவாக்க மேம்படுத்துபவரை அனுமதிக்கிறது. இது தரவுத்தளத்துடன்(Database) இணைந்து செயல்படவும், வலைப்பக்கத்தில் திரையிடக்கூடிய தரவுகளை(Data) பிரிப்பதிலும், பயனரால் உள்ளிடப்பட்ட தகவல்களை தரவுத்தளத்தினுள் சேமிக்கவும் தேவையான விரிவாக்கங்களைக்(Extensions) தன்னுள் கொண்டுள்ளது. PHP எப்படி… Read More »

PHP கற்கலாம் வாங்க – பாகம் 3

தரவுவகைகள்(DataTypes) :   தரவுவகை என்பது தரவின் சில பண்புநலன்களைக் குறிக்கின்ற ஒரு பொதுவான பெயராகும். PHP மிக அதிகப்படியான தரவுவகைகளைத் தருகிறது. இதனை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை Scalar DataTypes மற்றும் Compound DataTypes ஆகும். Scalar DataTypes : ஒரே ஒரு மதிப்பினைக் குறிப்பிடுவதை Scalar DataTypes என்கிறோம். இதில் பல்வேறு தரவுவகைகள் அடங்குகின்றன. அவை Boolean, Integer, Float, and String போன்றவைகளாகும். Boolean Type: George Boole என்ற கணிதமேதையால்… Read More »

Scribus – பகுதி 4

 Scribus-ன் இந்த மாத இதழில், வெவ்வேறான உரை, உருவப்படம் மற்றும் வடிவங்களுக்கு ‘நிறம் சேர்த்தல்’ எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  சென்ற மாத இதழில், பத்திகளை அழகுபடுத்துதல் அதாவது பொத்தானின் சொடுக்கில் நீங்கள் ஒரே விதமான உரு(font), நிறம் மற்றும் அமைப்புகள்(settings) செய்தல் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் குறைந்த வேலையில் செய்யலாம் என்று பார்த்தோம். இந்த மாதம் நிறங்களைப் பற்றி பார்ப்போம். இந்த மெனுவும் பத்திகளை அழகுபடுத்துதல் போன்றே, ஆனால் இதனை பெட்டிகள்(boxes), வரிகள் மற்றும் பலவற்றுடன்… Read More »

Scribus – பகுதி 3

Scribus – பகுதி 3   Scibus-ன் இந்த மூன்றாவது கட்டுரையில், “paragraph styles”-ஐ உருவாக்குதல் மற்றும் உரையை சீரைமைத்தல்(formatting text) பற்றி பார்ப்போம். உரையின் சிறுசிறு பகுதிகளை தேர்வுசெய்தல், தடிமனை(bold) பயன்படுத்துதல், கீழ்ப்பகுதிக்குச் செல்லுதல்(scrolling down), அதிகமான உரையை தேர்ந்தெடுத்தல், எழுத்துருவின் வடிவம்(font type), அளவு(size) மற்றும் பலவற்றினை மாற்றுதல், போன்ற வேலைகளைச் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்று OpenOffice-ஐ பயன்படுத்தி இருக்கின்ற எவருக்கும் இது தெரியும். Scribus-னுள் உரைகளுக்கான பத்திகளை அழகுபடுத்துதல்(Paragraph styles)… Read More »

Scribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2

சென்ற மாதம், நாம் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குவது, உரை நிரப்பி சேர்ப்பது, பிறகு நெடுவரிசைகளை சேர்த்து, நம்முடைய உரையை ஒரு நெடுவரிசையிலிருந்து அடுத்ததற்கு தானாக ஓடச்செய்ய, எல்லா நெடுவரிசைகளையும் ஒன்றிணைத்து தொடர்புபடுத்தினோம். இந்த மாதம், நம்முடைய ஆவணத்திற்கு உருவப்படத்தை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.         முதலில் ஒரு technical துணுக்கு : JPG உருவங்கள் கோப்பின் அளவை சிறியதாக வைப்பதற்கு compression-ஐ பயன்படுத்துகிறது. முதலில் இது ஒரு நல்ல கருத்தாக தோன்றினாலும், இது வேலையின்… Read More »