எச்.டி.எம்.எல் 5 / HTML 5

 

இன்றைய இணைய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் விதமாக வந்திருப்பது தான் எச்.டி.எம். எல் 5. நாளைய இணையத் தளங்களைஉருவாக்கும் புதிய விதிகளை இன்றையக் கணினி பயன் பாடுகளை மனதில் கொண்டு W3Cயும் WHATWGயும் மாற்றி வருகின்றன. தற்போது இந்த விதி முறைகள் வரைமுறையில் மட்டும் தான் இருகின்றன,.இன்னும் எச்.டி.எம்.எல் 5 அதிகாரபூர்வமான விதிமுறைகளாக அறிவிக்கப்படவில்லை. இணைய உலாவிகளிலும் எச்.டி.எம்.எல் 5 ஆவணங்களைச் சரியான முறையில் முழுமையாகச் செயல் படுத்த முடிவதில்லை. ஆனாலும் இந்த மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே.

 

இன்று மேசைக் கணிணிகள், மடிக்கணினிகள், சாமர்த்தியஅலைபேசிகள், கைக்கணினிகள் என்று பலவிதமான சாதனங்களைப் பயன் படுத்தி இணையத்தை உலா வருகிறோம். .எச்.டி.எம்.எல் 5 விதிமுறைகளைப் பின் பற்றினால் எல்லா விதக் கணினிகளுக்கும் ஏற்ற முறையில் பொதுவான இணையப் பக்கங்களை எளிதாக உருவாக்க முடியும். அனைத்துக் கணினி இயக்கு தளங்களிலும் இந்த இணையப் பக்கங்கள் பிரச்சனையில்லாமல் இயங்கும். எச்.டி.எம்.எல் 5 விதிமுறைகளைப் பயன் படுத்தினால் Flash QuickTime போன்ற இதரச் செருகிகள் இல்லாமலே ஒளிக்காட்சிகளை இணையத்தில் எளிதாகக் காட்டலாம். இணைய பக்கங்கங்களுக்குத் தேவையான கட்டளைகளை அனைவருக்கும் புரியும் எளிய மொழியில் எழுத முடியும்.

 

இணையத்தைப் பயன் படுத்துபவர்கள் தங்கள் உலாவிகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கவோ, மேம்படுத்திக் கொண்டிருக்கவோ தேவையில்லை. முக்கியமாக எச்.டி.எம்.எல் இணைய பக்கங்கள் யூனிகோடில் மட்டுமே எழுதப் பட்டிருக்க வேண்டும் என்பதால் தமிழ் இணையப் பக்கங்களைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் தனியாக எழுத்துருக்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்யத் தேவையிருக்காது.

எச்.டி.எம்.எல் 5ல் புதிதாக கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் இணைய தளங்களின் வேலையை மிக எளிதாக்குகிறது.

<canvas> என்ற புது இழையைப் பயன் படுத்தி படங்கள் வரையலாம். <audio> <video> ஆகிய இழைகளைப் பயன்படுத்தி ஒலி,ஒளிகாட்சிகளை சிரமமில்லாமல் இணையத் தளங்களில் காட்டலாம். <article>, <footer>, <header>,<nav>, <section> ஆகிய இழைகள் இணையப் பக்கங்களை அழகான முறையில் வடிவமைக்கவும் .இணையப் பக்கங்களை அச்சடிக்கும் பத்திரிக்கைகளுக்கு நிகராக அலங்கரிக்கவும் உதவுகின்றன. இணையத் தேடுபொறிகள் எளிதாக இணையப் பக்கங்களை கண்டுபிடிக்கவும் இந்த இழைகள் உதவுகின்றன.

calendar, date, time, email, url, search என்ற இழைகள் கொண்டு உருப்படிவங்களை உருவாக்குவதும் எளிதாகிறது. Drag and drop என்ற செயலைப் பயன்படுத்தி இணையத்தில் விளையாட்டுக்களை உருவாக்குவதும் மிக எளிதாகிறது. getCurrentPosition() என்ற செயலைப் பயன் படுத்தி ஒருவரின் இருப்பிடத்தை கண்டு பிடித்து விடலாம். தேவையற்ற செருகிகளை ஒருவர் கணினிகளில் நிறுவத் தேவையில்லை என்பதால் பாதுகாப்பும் அதிகமாகிறது.

எச்.டி.எம்.எல் 5 இன்னும் விதிமுறைகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் எல்லா இணைய உலாவிகளும் இந்த விதி முறைகளைப் பயன்படுத்த முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளன. எச்.டி.எம்.எல் 5, சி.எஸ்.எஸ் 3 HTML5/CSS3 இவை இரண்டையும் கற்றுக் கொண்டால் இன்றையப் புதுக் கைபேசிகளுக்கும் கை கணினிகளுக்கும் ஏற்ற வகையில் நம்மால் இணைய தளங்களையும், எளிதாக உருவாக்க முடியும். கைகணினிகளுக்கு ஏற்ற வகையில் விளையாட்டுகளையும் உருவாக்க முடியும்

 

இன்றைய கணினிகளின் வளர்ச்சியினால் இணைய தளங்களில் இந்த மாற்றங்கள் முக்கியமாகிறது. எச்.டி.எம்.எல் 5 என்ற உத்திக்களைக் கையாண்டு நம்முடைய திறமைகளை மேம்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் இணையம் வழியாகத் தமிழ் வளரவும் இன்னும் ஒரு வழிக் கிடைத்திருகிறது.

கைபேசிகள், கைக்கணினிகள் ஆகியவற்றிற்கான விளையாட்டுக்கள் விரைவில் தமிழில் வரலாம் என்று எதிர் பார்க்கலாம். இது பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் www.w3schools.comஎன்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.எச்.டி.எம். எல் 5 ஐ திறவூற்று பயனாட்டாளர்களுக்கு ஒரு பெரிய வரப்பிராசதம் என்றே சொல்ல வேண்டும்.

 

சுகந்திவெங்கடேஷ்  மின்னஞ்சல் : vknsvn@gmail.com

வலை : tamilunltd.com

 

%d bloggers like this: